புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

அங்காடிதெரு மகேஷ் –  ஷாலு  நடிக்கும்  “ என் காதலி சீன் போடுறா “

அங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
சங்கர் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கும் படத்திற்கு “ என் காதலி சீன் போடுறா “ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் அங்காடிதெரு மகேஷ்   நாயகனாக  நடிக்க, நாயகியாக ஷாலு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன்,மனோபாலா, விஜய் டிவி.கோகுல், டாக்டர் சரவணன்  ஆகியோரும் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் ராம்சேவா கூறியதாவது ... இன்றைய சமூகத்தில் எல்லோருமே புத்திசாலிகள் தான் ஆனால் அவர்களை சாமார்த்தியமாக ஏமாற்றத் தெரிந்த அது புத்திசாலிகளும் அவர்களுக்குள்ளேயே கலந்து இருப்பதும் உண்மையே. இப்படி நடந்த உண்மை சம்பவங்களை மையப்படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு பிறகு எந்த குடும்பத்தை  சேர்ந்தவர்களும் ஏமாறாமல் இருந்தால் நாங்கள் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்ததாக மகிழ்வோம். படப்பிடிப்பு சென்னை,பாண்டி, பொள்ளாச்சி, ஆனமலை போன்ற இட...
‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ படத்தால் இந்திய ராணுவத்திற்கே பெருமை.. ராணுவ அதிகாரிகள் பாராட்டு

‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ படத்தால் இந்திய ராணுவத்திற்கே பெருமை.. ராணுவ அதிகாரிகள் பாராட்டு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அல்லு அர்ஜூன், அனு இமானுவேல், அர்ஜூன், சரத் குமார் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் 'நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா' படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. இப்படம் 'என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா என்ற பெயரில் தமிழில் வெளியாகி இருக்கிறது. வி.வம்சி இயக்கத்தில் தேசபக்தியை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜூன் ராணுவ வீரராக நடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளாலும், வசனங்களாலும் தேசபக்தி ஊட்டியிருக்கும் அல்லு அர்ஜூனுக்கு ராணுவ அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர் இந்திய ராணுவத்தில் பணியாற்றும் அதிகாரிகள் 'நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா' படம் இந்திய ராணுவத்தின் பெருமை எனக் கூறி பாராட்டியுள்ளனர். இந்திய ராணுவம் பற்றி நேர்மையாக எடுக்கப்பட்ட படம் என வாழ்த்தியுள்ளனர். இதற்காக, படக்குழுவினர் கலந்துகொண்ட பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ராணுவ அதிகாரிகள் படத்தின் இய...
‘நடிகையர் திலகம்’ படத்தில் இடம்பெற்ற ‘தந்தாய்’ பாடலின்  வீடியோ

‘நடிகையர் திலகம்’ படத்தில் இடம்பெற்ற ‘தந்தாய்’ பாடலின் வீடியோ

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகைகள், வீடியோ
நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நடிகையர் திலகம்’. பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், தெலுங்கில் ‘மகாநடி’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க, அவருடைய கணவரும் நடிகருமான ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். மதுரவாணி என்ற பத்திரிகையாளர் வேடத்தில் சமந்தாவும், விஜய் அந்தோணி என்ற புகைப்படக் கலைஞர் வேடத்தில் ‘அர்ஜுன் ரெட்டி’ விஜய் தேவரகொண்டாவும் நடித்துள்ளனர். மேலும், நாக சைதன்யா, ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு உறுப்பினர்கள், தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். தமிழில் வருகிற 11 ஆம் தேதி வெளியாகும் ...
தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் திருப்பதி கோயிலை மாற்றும் திட்டம் வாபஸ்: பக்தர்களின் எதிர்ப்பால் பின்வாங்கியது மத்திய அரசு

தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் திருப்பதி கோயிலை மாற்றும் திட்டம் வாபஸ்: பக்தர்களின் எதிர்ப்பால் பின்வாங்கியது மத்திய அரசு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோயிலை மத்திய தொல்லியல் துறைக்கு மாற்றுவது தொடர்பாக அந்தத் துறை சார்பில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த நோட்டீஸ் உடனடியாக வாபஸ் பெறப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். சோழர் காலத்தில் தோன்றிய இந்த கோயில் சேரர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், விஜய நகர பேரரசர்கள், மஹந்திக்கள், சுல்தான்கள், நவாபுகள், ஆங்கிலேயர்கள், ஜமீன்கள், மிராசுதாரர் கள் அதிகாரத்தின் கீழ் பராமரிக்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடை யும் முன்பு மதராஸ் மாகாணம் சார்பில் திருப்பதி கோயில் பாராமரிக்கப்பட்டது. பின்னர், 1933- ம் ஆண்டில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொடங்கப்பட்டு, இன்றுவரை கோயிலை தேவஸ்தானம் பராமரித்து வருகிறது. ஆந்திரா, தமிழகம் பிரிந்தபோது, திருப்பதி ஏழுமலையான் கோயில், ஸ்ரீ க...
காதலருடன் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி

காதலருடன் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானி-நீதா அம்பானிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இதில் ஆகாஷ், இஷாவும் இரட்டையர்கள். 3-வது ஆனந்த், இதில் ஆகாஷ் அம்பானிக்கு தனது பள்ளித்தோழியான ஸ்லோகா மேத்தாவுடன் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. இவர்களது திருமணம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இஷா அம்பானிக்கும் டிசம்பரில் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. கோயிலில் வைத்து ஆனந்த பிரமோல், இஷாவிடம் தனது காதலை வெளிபடுத்தி உள்ளார். இவர்கள் இருவர்ம் நெருங்கிய நண்பர்கள் என்று கூறப்படுகிறது. ஆனந்த் பிரமோல், ரியல் எஸ்டேட் நிறுவனமான Piramal Realty இன் நிறுவனர் ஆவார், Piramal Group இன் நிர்வாக இயக்குனராகவும் இருக்கிறார். இவர்களது காதலுக்கு இரண்டு தரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களது திருமணமும் டிசம்பரில் நடக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்க...
டெல்லியில் தினமும் 5 பெண்கள் கற்பழிப்பு அதிர்ச்சி தகவல்

டெல்லியில் தினமும் 5 பெண்கள் கற்பழிப்பு அதிர்ச்சி தகவல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
டெல்லியில் பெண்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் இந்த சம்பவத்திற்கு பிறகு  பலப்படுத்தப்பட்டன. இருப்பினும் அங்கு கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறைந்தபாடில்லை. இதுதொடர்பாக டெல்லி போலீசார் அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்களை வெளியிட்டு உள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு:– இந்த ஆண்டின் முதல் 3½ மாதங்களில் மட்டும் தினமும் 5–க்கும் மேற்பட்ட பெண்கள் கற்பழிக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 1–ந் தேதி முதல் கடந்த மாதம் 15–ந் தேதி வரை 578 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதே கால கட்டத்தில் கடந்த ஆண்டு 563 கற்பழிப்பு வழக்குள் பதிவாகி இருந்தன. மேலும் இதே கால கட்டத்தில் பெண்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக இந்த ஆண்டில் 883 வழக்குகளும், கடந்த ஆண்டில் 944 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. 2017–ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 2 ஆயிர...
13 மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை கனமழைக்கு  129 பேர் பலி

13 மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை கனமழைக்கு  129 பேர் பலி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
வட மாநிலங்களில் இடி மின்னலுடன்  கடந்த சில தினங்களுக்கு முன்  பலத்த மழை பெய்தது. இந்த கனமழைக்கு  129 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில், அடுத்த இரண்டு தினங்களுக்கு 13 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது. புயல் எச்சரிக்கையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹரியானாவில் இன்று மற்றும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. கனமழை மற்றும் புயலில் இருந்து மக்கள் தங்களையும் தங்களது உடமைகளையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள பஞ்சகுலா நிர்வாகம், முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. அசாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஆங்காங்கே சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதேபோல், உத்தர பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், சி...
தணிக்கை குழு கெடுபிடியில் கமலின் விஸ்வரூபம் 2

தணிக்கை குழு கெடுபிடியில் கமலின் விஸ்வரூபம் 2

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கமல்ஹாசன் நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படம் முடிந்து இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் திரைக்கு வர தயாராகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. இதன் முதல்பாகம் எதிர்ப்புகளில் சிக்கி சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்ட பிறகே வெளியானது. தற்போது ‘விஸ்வரூபம்-2’ படமும் தணிக்கை குழுவினரின் கெடுபிடியில் சிக்கி உள்ளது. தமிழில் சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்டு யூஏ சான்றிதழ் பெற்றது. இந்தி பதிப்பையும் தணிக்கை குழுவினர் பார்த்து பல காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து உள்ளனர். 17 சர்ச்சை காட்சிகளை நீக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு படக்குழுவினர் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தணிக்கை குழுவினர் அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தி பதிப்புக்கு ‘யூஏ’ சான்றிதழ் அளித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இத...
‘இரும்புத்திரை’  கதையை கேட்டு முடித்ததும் எனக்கு என்னுடைய போனை தொடவே பயமாக இருந்தது – சமந்தா

‘இரும்புத்திரை’ கதையை கேட்டு முடித்ததும் எனக்கு என்னுடைய போனை தொடவே பயமாக இருந்தது – சமந்தா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
விஷால்-சமந்தா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘இரும்புத்திரை’.   இப்படத்தை மித்ரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடித்தது குறித்து சமந்தா கூறும்போது, ‘இரும்புத்திரை படத்தின் கதையை கேட்கும் போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாம் வாழும் இந்த சமூகத்தில் நமக்கு தெரியாமல் இவ்வளவு பிரச்சனைகள் இன்டர்நெட் மீடியம் மூலமாக நம்மை சுற்றி நடக்கிறதா என்று பதைபதைக்க வைத்தது. படத்தின் கதையை கேட்டு முடித்ததும் எனக்கு என்னுடைய போனை தொடவே பயமாக இருந்தது. இந்த படம் இன்டர்நெட் மூலமாக நமக்கு என்னவெல்லாம் பிரச்சனைகள் உள்ளது, அது நமக்கு எப்படியெல்லாம் தீங்கு விளைவிக்கும் என்று மிக தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டும். நமது பிரைவசி எப்படி வெளியே கசிகிறது என்பதை பற்றியும் இப்படம் பேசும். எனக்கு புதுமுக இயக்குனர்களோடு இணைந்து பணியாற்றுவதில் சிறிது தயக்கம் தான். ஆனால் இயக்குனர் மித்ரன் ஒரு போதும் என்ன...
ரசிகர்களை திடீரென சந்தித்த விஜய்

ரசிகர்களை திடீரென சந்தித்த விஜய்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாக ஏற்கனவே பரபரப்பு தகவல்கள் வந்தன. சில மாவட்டங்களில் ரசிகர்களின் மாநாடுகளையும் நடத்தினார். ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி தமிழகம் முழுவதும் அதற்கு நிர்வாகிகளையும் நியமித்து உள்ளார். ரசிகர்கள் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை அருகே உள்ள பனையூரில் கடந்த 2 நாட்களாக ரசிகர்களை விஜய் திடீரென்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். ரசிகர்கள் அனைவருக்கும் உணவும் பரிமாறப்பட்டது. இது வழக்கமான சந்திப்புதான் என்றும் வேறு திட்டம் எதுவும் இல்லை என்றும் ரசிகர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே துப்பாக்கி, கத்தி படங்...