செவ்வாய்க்கிழமை, ஜூன் 30
Shadow

Author: Kodanki

“கிளாப்போர்ட் புரொடக்ஷனி“ன்  “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது “  பட  ஷூட்டிங் 45 நாட்களில் நிறைவு!

“கிளாப்போர்ட் புரொடக்ஷனி“ன் “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது “ பட ஷூட்டிங் 45 நாட்களில் நிறைவு!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
தரமான கதை களமும்,  சிறந்த பொழுது போக்கு அம்சங்களும் தான் ஒரு நல்ல திரைப்படத்திற்கு ஆணி வேர். அதை மிக துல்லியமாக உள் வாங்கி கொண்டு, தரமான திரைப்படங்களை மட்டுமே தமிழ் ரசிகர்களுக்கு வழங்கி வருகிறார் 'கிளாப்போர்ட் புரொடக்ஷன்'நிறுவனத்தின் நிறுவனரும் - நடிகருமான வி சத்தியமூர்த்தி. இவரது தயாரிப்பில் தற்போது உருவாகி வரும்  'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது'  படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றுள்ளது. வி சத்யமூர்த்தி தயாரித்து நடிக்கும் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது'  திரைப் படத்தை, அறிமுக இயக்குநர் - 'எருமசாணி' புகழ் ரமேஷ் வெங்கட் இயக்கி இருக்கிறார்.  'மெட்ராஸ் சென்ட்ரல்' புகழ் கோபி - சுதாகர், 'எரும சாணி' புகழ்  விஜய் - ஹரிஜா,  'புட் சட்னி' புகழ் அகஸ்டின்,  'டெம்பில் மங்கிஸ்' புகழ் ஷா ரா - அப்துல் மற்றும்  'BEHIND WOODS' புகழ் வி ஜே ஆஷிக்  ஆகியோர் மிக முக்கிய கதாபத்திரங்களில் ...
தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி!

தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரையை ஏற்று இந்த அனுமதியை மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் வழங்கியுள்ளது.  தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பொட்டிபுரத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்த நிலையில் அதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. டாடா நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்திற்கு அனுமதி கேட்டு மத்திய சுற்று சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டம் குறித்து கடந்த கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதியும், மார்ச் 5ம் தேதியும் நடைபெற்ற மத்திய சுற்று சூழல் துறை அமைச்சகத்தின் மதிப்பீட்டு நிபுணர் குழு கூட்டத்தில் ஆராயப்பட்டது இதையடுத்து இந்த திட்டத்தைச் செயல்படுத்தலாம் என மதிப்பீட்டுக் குழு அனுமதி அளித்ததையடுத்து, மத்...
தமிழகமெங்கும் குருத்தோலை ஞாயிறு சிறப்பு ஜெபக்கூட்டங்கள்!

தமிழகமெங்கும் குருத்தோலை ஞாயிறு சிறப்பு ஜெபக்கூட்டங்கள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
குருத்தோலை ஞாயிறு தினத்தையொட்டி தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு ஜெபக்கூட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழா நடைபெறும் ஞாயிற்றுக்கிழமைக்கு (Easter Sunday)முந்தைய ஞாயிற்றுக் கிழமைதான் உலகெங்கும் உள்ள குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அனைத்துத் தேவலங்களிலும் திருப்பலிக்கு முன்னதாகக் குருவானவரால் புனித நீரால் மந்திரிக்கப்பட்ட குருத்தோலைகளைக் கிறிஸ்தவர்கள் கையிலேந்தி தேவாலம் அருகிலுள்ள வீதிகளில் வழியே ஊர்வலமாகச் சென்று பின் ஆலயத்திற்குள் நுழைவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். தென்னை, பனை, பேரீச்சை மரக்குருத்தோலையோ, ஒலிவமரக் கிளைகளோ கிடைக்காத நாடுகளில் லில்லி உள்ளிட்ட மலர்களையும் நீண்டு வளர்ந்த பூற்களையும் கையேந்திச் செல்கிறார்கள். ஐரோப்பாவில் வில்லோ எனப்படும் புற்களை ஏந்திச்செல்வதால் அங்கே அது ‘வில்லோ ச...
இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! – தமிழருவி மணியன் பரபர பேச்சு

இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! – தமிழருவி மணியன் பரபர பேச்சு

HOME SLIDER, NEWS, செய்திகள்
ரஜினிகாந்தை இனி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம். தமிழக முதல்வர் என்று அழைத்துப் பழகுங்கள் என்று பேசினார் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன். வேலூர் ஒன்றியம் கேவி குப்பம் நகரில் பொதுமக்கள் பூங்கா, மகாத்மா காந்தி சிலை மற்றும் பேருந்து நிறுத்தம் திறப்பு விழா சனிக்கிழமை நடந்தது. ரஜினி மக்கள் மன்ற வேலூர் மாவட்ட நிர்வாகி கேவி பாஸ்கர் இந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார். பூங்காவை ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா கெய்க்வாட் காலையில் திறந்துவைத்தார். மாலையில் காந்தி சிலை மற்றும் பேருந்து நிறுத்தத்தை காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் திறந்து வைத்தார். பின்னர் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். தமிழருவி மணியன் பேச்சு: ரஜினிகாந்தின் ரசிகர்கள் சேர்ந்து மகாத்மா காந்தியின் சிலையை புனரமைப்பார்கள் என்று யா...
காவிரி மேலாண்மை சர்ச்சை: திமுக மாநாட்டில் ஸ்டாலின் எச்சரிக்கை!

காவிரி மேலாண்மை சர்ச்சை: திமுக மாநாட்டில் ஸ்டாலின் எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஈரோடு பெருந்துறை அருகே சரளையில் கோவை தேசிய நெடுஞ்சாலையில் தி.மு.க. மண்டல மாநாடு நேற்று தொடங்கியது, இன்று மாநாட்டின் 2-வது நாள் நிகழ்ச்சி காலை 9 மணிக்கு இறையன்பு குத்தூஸ் குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் கட்சியின் முன்னோடி தலைவர்கள் பேசினார்கள். மாநாட்டில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் காலை 10.30 மணிக்கு மாநாட்டு மேடைக்கு வந்தார். காலை 11.30 மணியளவில் மு.க.ஸ்டாலின் மாநாட்டின் சிறப்பு தீர்மானத்தை வாசித்தார். அவர் பேசியதாவது: "தமிழ்நாட்டின் உயிர் நாடிப் பிரச்சினையான காவிரி நதிநீர் உரிமைக்காகத் தி.மு.க. தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. கலைஞர் தமிழகத்தின் முதல்வராகவும், சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராகவும் இருந்தபோது தான், தலைவர் கலைஞரின் வலியுறுத்தலை ஏற்று, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நடுவர் மன்றத்தை மத்திய அரசு அமைத்தது. நடுவர் மன்றத்தின் இட...
கோலிவுட்டிலிருந்து டோலிவுட்டுக்கு(ம்) போன தன்ஷிகா!

கோலிவுட்டிலிருந்து டோலிவுட்டுக்கு(ம்) போன தன்ஷிகா!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
சினம்’ என்ற குறும்படத்தில் நடித்திருந்தார் நடிகை சாய் தன்ஷிகா. இந்த குறும்படம் கொல்கத்தாவில் நடைபெற்ற கல்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அப்போது சிறந்த நடிகைக்கான விருது உள்பட எட்டு விருதுகள் ‘சினம் ’ குறும்படத்திற்கு கிடைத்தது. மேலும் நார்வே திரைப்படவிழாக்களிலும் சிறந்த நடிகைக்கான விருதையும், கலிஃபோர்னியாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்படவிழாவிலும் திரையிடப்பட்டு விருதினை வென்றிருக்கிறது ‘சினம்’. சிறந்த நடிகைக்கான விருதினை வென்றிருந்த மகிழ்ச்சியில் இருந்த நடிகை சாய்தன்ஷிகாவை  சந்தித்து வாழ்த்து சொல்லிவிட்டு உரையாடத் தொடங்கினோம். ‘நான் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒரு கதாசிரியர்கள் தங்களின் மனதில் ஒரு நடிகையை வைத்து திரைக்கதையை உருவாக்குகிறார்களோ அந்த தருணம் தான் அனைத்து நடிகைகளுக்கும் சந்தோஷமான தருணம். எனக்கு அப்படி ஒரு அனுபவம் அண்மையில் ஏற்பட்டது. தெலுங்கு திரையுலகில...
சென்னையில் 13 இடங்களில் காவலர்களுக்கு யோகா பயிற்சி !

சென்னையில் 13 இடங்களில் காவலர்களுக்கு யோகா பயிற்சி !

HOME SLIDER, NEWS, செய்திகள்
காவல்துறையினரின் மன அழுத்தத்தைப் போக்க இன்று சென்னையில் 13 இடங்களில் காவலர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. மன அழுத்தத்தின் காரணமாக காவலர்கள் தற்கொலையில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது என்று குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. இந்தநிலையில், காவலர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கவேண்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதனையடுத்து, இன்று சென்னையில் 13 இடங்களில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடந்த பயிற்சியில் சுமார் 3 ஆயிரம் போலீஸார் பங்கேற்றனர். இதில், சென்னைக் காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை பங்கேற்ற இந்த யோகா பயிற்சி காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை 2 மணி நேரம் நடைபெற்றது. இதுகுறித்து தெரிவித்த ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், ‘காவல் துறை பணி உடலுக்கும் மனதுக்கும் அழுத்தம் ஏற்படுத்து...
லாலு பிரசாத் யாதவிற்கு 7 ஆண்டுகள் சிறை

லாலு பிரசாத் யாதவிற்கு 7 ஆண்டுகள் சிறை

HOME SLIDER, NEWS, செய்திகள்
கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 4ஆவது வழக்கில் பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவிற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் 30 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 1990 முதல் 97 வரை லாலு பிரசாத் யாதவ் பிகார் மாநில முதல்வராக இருந்தபோது மாட்டுத் தீவனம் வழங்குவதில் மிகப் பெரிய ஊழல் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மாட்டுத் தீவன ஊழல் தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில் 3 வழக்குகளில் லாலு குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 3 வழக்குகளிலும் 5, 3.5, 5 ஆண்டுகள் என மொத்தம் 13.5 ஆண்டுகள் அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 4ஆவது வழக்கான தும்கா கருவூலத்தில் 3.13 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கின் விசாரணை ராஞ்சி நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. கடந்த 19ஆம் தேதி இந்த வழக்கில் லாலு குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது....
தலைமை முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.! – ரஜினி எச்சரிக்கை!

தலைமை முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.! – ரஜினி எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் அரசியலில் களம் காண உள்ள ரஜினி, முற்கட்டமாக மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திற்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இருதினங்களுக்கு முன்னர் மன்றத்தின் விதிகளுக்கு மாறாக செயல்படுவதாக கூறி ரஜினி மக்கள் மன்றத்தின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் தம்புராஜ் இடைக்கநீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஜினி மக்கள் மன்றத்தில் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகளுக்கு, ரஜினியின் அறிவுரைப்படி, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி விஎம்.சுதாகர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை வெளியிட்டுள்ள செய்தியில், தம்புராஜ் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு அனைவரையும் அழைக்காமல் தனக்கு விருப்பமானவர்களை ம...
ஈரோடு திமுக மாநாட்டுக்கான பிரச்சாரத்தில் ஸ்டாலின் நவீன பொம்மை!

ஈரோடு திமுக மாநாட்டுக்கான பிரச்சாரத்தில் ஸ்டாலின் நவீன பொம்மை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
திமுக மண்டல மாநாடு ஈரோடில் நடைபெற உள்ள நிலையில், மு.க.ஸ்டாலின் உருவம் கொண்ட பொம்மை மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் ஈரோடுமாநகர் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறது. ஈரோட்டில் நாளையும் நாளை மறுநாளும் திமுக மண்டல மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், ஈரோடு, திருப்பூர், சேலம், கோவை, நீலகிரி, கரூர்உள்ளிட்ட 15 மாவட்டங்களை சேர்ந்த திமுகவினர் கலந்து கொள்கின்றனர். இந்த மண்டல் மாநாட்டு பணிகள் 95 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இம்மாநாட்டுக்காக, கடந்த 2மாதங்களாகவே ஈரோடு மாநகர் முழுவதும் பேனர்கள் வைக்கப்பட்டும், சுவர் விளம்பரங்கள் செய்தும் வருகின்றனர். மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கும் வகையில்தெருமுனைப் பிரச்சாரங்களும் திமுகவினர் நடத்தினர். குறிப்பாக மு.க.ஸ்டாலின் போன்று தோற்றமுடைய பொம்மை ஒன்று சைக்கிளில் சென்றபடியே மாநாட்டிற்கு அழைப்ப...