Author: Kodanki
மஞ்சு தீக்ஷித் நடிக்கும் திகில் படம் மல்லி..!
முத்து சன்னதி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக ரேணுகா ஜெகதீஷ் தயாரிக்கும் படத்திற்கு“மல்லி” என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் ரத்தன் மெளலி நாயகனாக நடிக்கிறரர்.. இவர் 13ம் பக்கம் பார்க்க ,வெள்ளிக்கிழமை 13 ம் தேதி அரசகுலம் ஆகிய படங்களில் நாயகனாக நடித்தவர்.
நாயகியாக மஞ்சு தீக்ஷித் அறிமுகமாகிறார். இவர் மும்பையில் கிஷோர் நமீத் கபூர் நடத்தும் சினிமா பயிற்சி பள்ளியில் நடிப்பு
பயின்றவர். இந்த பள்ளியில் தான் ஹிருத்திக் ரோஷன் அல்லு அர்ஜூன் ரன்வீர்கபூர் போன்றவர்கள் நடிப்பை பயின்றவர்கள்..
இன்னொரு நாயகியாக தேஜுஸ்ரீ நடிக்கிறார். மற்றும் அருண், ரவிச்சந்திரன், நாகேஷ் சைமன், டெலிபோன்ராஜ், அம்சவேலு ஆகியோர் நடிக்கிறார்கள்
கதை, திரைக்கதை எழுதி தயாரிக்கிறார் ரேணுகா ஜெகதீஷ்.
வசனம் எழுதி இயக்குகிறார் வெங்கி நிலா.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்
தன் காதலி மஞ்சு தீக்ஷித்துடன் உயிருக்கு ப...
படம் பார்க்காமலேயே அரசியல்வாதிகள் விமர்சனம் செய்கிறார்கள் என்று விசிறி பட விழாவில் பா.ஜ.க.வை இயக்குனர் S.A.சந்திரசேகர் வம்புக்கு இழுத்தார்
தல-தளபதி” என்றாலே, அது பரபரப்பு பற்றிக் கொள்ளும் விசயம் தான். அப்படிப்பட்ட ஒரு கதையை வைத்து படமாக்கப்பட்ட “விசிறி” படத்தின் இசை வெளியீட்டு விழாவும் பரபரப்பாக நடந்திருக்கிறது.
“வெண்ணிலா வீடு” படத்தின் மூலம் நல்ல இயக்குநர் என்று பெயரெடுத்த வெற்றி மகாலிங்கம் தான் “விசிறி” படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார். அறிமுக நாயகர்களாக ராஜ் சூர்யா, ராம் சரவணா நடிக்க, இவர்களோடு தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இசையமைப்பாளர்களாக தன்ராஜ் மாணிக்கம், சேகர் சாய்பரத், நவீன் ஷங்கர் ஆகிய மூவர் பணியாற்றியிருக்கிறார்கள். பாடலாசியர் மதன் கார்க்கி இந்த படத்தின் முக்கியமான பாடலை எழுதியிருக்கிறார்.
விசிறி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநரும், நடிகர் விஜயின் தந்தையுமாகிய எஸ்.ஏ.சந்திரசேகர், தயாரிப்பாளர் தனஞ்செயன், நடிகர் ஆரி, பாடல...
இந்திரஜித் பாடல் டிராக்…
#VidigiraVaanil Song Promo Video #Indrajith
@Gautham_Karthik @theVcreations @kalaaprabu @diamondbabu4
https://youtu.be/mp_Ytr3Lra4
தீரன் அதிகாரம் ஒன்று விமர்சனம்
1995 முதல் 2005 வரை, போலீசுக்கே மிகப் பெரிய சவாலாக இருந்த பவாரியா வழக்கின் மறு உருவாக்கம் இது. வடநாட்டில் இருந்து தமிழ்நாட்டுக்கு லாரி லோடு கொண்டு வருபவர்களில் ஒரு குழுவினர், போகும்போது சென்னை புறநகரில் தனித்து இருக்கும் வீடுகளில் புகுந்து, அங்கிருப்பவர்களை கொடூரமாகத் தாக்கி கொன்றுவிட்டு, நகைகளைக் கொள்ளையடித்துச் செல்கிறார்கள். போலீசுக்கே சவாலாக இருக்கும் இந்தக் குற்றங்களுக்கு எந்த தடயமும் கிடைப்பதில்லை. சம்பவங்களும், சாவும் அதிகரிக்கிறது. இளம் தலைமுறை காவல்துறை அதிகாரி தீரன் திருமாறன் (கார்த்தி), இந்த குற்றவழக்கைக் கையிலெடுத்து துப்பறிகிறார். ஒரு சிறிய துப்பு கிடைக்கிறது. அதைப் பின்தொடர்ந்து வடநாடு சுற்றி, ராஜஸ்தான் பாலைவனம் வரை தன் டீமுடன் பயணப்படுகிறார். போலீசுக்கு அரசால் வழங்கப்படும் சிறு உதவி, சென்ற இடமெல்லாம் கிடைக்கும் அவமானம், அலட்சியம், எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு, உய...
கந்து வட்டி தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்-பிரகாஷ்ராஜ்
அசோக்குமாரின் தற்கொலை திரையுலிகில் பல கேள்விகளை எழுப்பியுள்ளதாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். இந்த தற்கொலை சம்பவம் தமிழ் திரையுலகின் இன்றைய நிகழ்வை படம் பிடித்து காட்டுவதாக தெரிவித்த பிரகாஷ்ராஜ், நமக்கு தெரியாமல் எத்தனையோ தற்கொலைகள் நடந்துள்ளதாக அவர் தெரிவித்தார். திரையுலகின் அனைத்து தரப்பினரும் இணைந்து நடவடிக்கை எடுப்போம் என்று பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். கந்து வட்டி தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கருப்பு பண சம்பளம் வாங்குவதை நடிகர்கள் நிறுத்த வேண்டும் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் வலியுறுத்தியுள்ளார். நடிகர்கள் கருப்பு பணத்தில் சம்பளம் பெறுவதாக பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். அனைத்து வரிகளை செலுத்தினாலும் பாதுகாப்பற்ற துறையாக திரைத்துறை உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் திரைப்படத்துறையில் ...
பாரதியார் போல மாறிய கமல் : வைரலாகிய புகைப்படம்
நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே அதிமுக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தி வருகிறார். மக்களுக்கு நன்மை செய்ய முடியாவிட்டால் ஆட்சியைவிட்டு இறங்குங்கள் என்றும் கருத்து தெரிவித்தார். அத்துடன் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்ட தான் அரசியல்கட்சி தொடங்க உள்ளதாகவும் கூறி உள்ளார். இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் ஏற்கனவே இருந்த தனது புகைப்படததை மாற்றிவிட்டு தற்போது, பாரதியார் போன்று முண்டாசு கட்டி முறுக்கு மீசை தோற்றத்தில் தன்னுடைய புதிய படத்தை புரபைல் பிக்சராக மாற்றி வெளியிட்டிருக்கிறார்....
அன்புச் செழியனை பணப் பிசாசு என இயக்குனர் கவுதம் மேனன் சாடல்..!
கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்த கொண்ட தயாரிப்பாளர் அசோக்குமார் முடிவு குறித்து இயக்குனர் கவுதம் மேனன் டிவிட்டர் பக்கத்தில் கூறும்போது, ‘அசோக் உன்னுடைய மரணம் ஈவிறக்கம் அற்ற ஒரு பணப் பிசாசை அடக்கப் பயன்படக்கூடும் என்பதை அறிவேன். ஆனால் நீ உயிரோடிருந்து இந்த போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும் என்பதையே நாங்கள் விரும்பியிருப்போம்’ என குறிப்பிட்டுள்ளார். அன்புச் செழியனை பணப் பிசாசு என கவுதம் குறிப்பிட்டுள்ளார்....
மனைவிக்கு பேட்மின்டன் அரங்கம் பரிசளித்த அஜித்
காதலி அல்லது மனைவிக்கு பிறந்தநாள் வந்தால் காதலனோ, கணவனோ அவருக்கு வைர நெக்லஸ், பட்டுப்புடவை அதைவிட காஸ்ட்லியாக வீடு அல்லது ஆடம்பர கார் பரிசளிப்பதுண்டு. ஒரு நடிகர் தனது மனைவியின் பிறந்த நாளுக்கு பேட்மின்டன் அரங்கம் பரிசளித்திருக்கிறார். அவர் வேறுயாருமல்ல, அஜீத்குமார்தான். அஜீத் மனைவி ஷாலினிக்கு 39வது பிறந்தநாள்.
திரையுலகினர், தோழிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஷாலினி பேட்மின்டன் வீராங்கனை. மாவட்ட, தேசிய அளவிலான போட்டிகளில் அவர் கலந்துகொண்டிருக்கிறார். குறிப்பிட்ட வட்டத்துக்கு மட்டுமே இந்த விவரம் தெரியும். ஷாலினிக்கு வித்தியாசமான பரிசளிக்க எண்ணினார் அஜீத்.
திருவான்மியூரில் உள்ள தனது வீட்டிற்குள்ளேயே சகல வசதிகளுடன் கூடிய பேட்மின்டன் விளையாட்டு அரங்கை அமைத்து அதை பிறந்தநாள் பரிசாக அளித்தார். ஷாலினி, அஜீத் தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். நடி...
மக்கள் ஸ்டார் ஆன ஓவியா
மக்கள் ஸ்டார் ஆகிவிட்டார் ஓவியா.ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா-3 படப்பிடிப்பில் பிஸியாகஇருக்கிறார். இப்போ எனக்கு ரசிகர்களிடம் இமேஜ் ரொம்பவும்மாறிப்போயிருக்கு. அதுக்காக நான் மாறிட்டேன்னு அர்த்தமில்லை. இதோ இந்தப்படத்துலே கூட பழைய கிளாமர் டால் ஓவியாவை நீங்க பார்க்கலாம்.

