TTVதினகரனின் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி..!
தினகரனின் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி..!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், குக்கர் சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார் சசிகலாவின் உறவினரான தினகரன். ஜனவரி 8 தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தொடரில், அவர் சுயேச்சை உறுப்பினராகப் பங்கேற்றார். இந்த நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் பெற்ற வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமமூர்த்தி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அதில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து தினகரன் வெற்றி பெற்றார் என்றும், ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு நிறைய குக்கர்கள் விநியோகிக்கப்பட்டது என்றும், தேர்தல் ஆணையமே 30 லட்ச ரூபாயைக் கைப்பற்றியதாக அறிவித்தது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது இதனால் தினகரன் சட்டசபைக்குள் நுழையக்கூடாது என்றும், அவர் எம்எல்ஏவாக பணியாற்றத் தடை ...








