எஸ்வி சேகர் தனது பதிவுக்கு வருத்தம் மட்டுமே தெரிவித்தாரே தவிர அதை மறுக்கவில்லை -_சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்
எஸ்வி சேகர் தனது பேஸ்புக் பதிவுக்கு வருத்தம் மட்டுமே தெரிவித்தாரே தவிர அதை மறுக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக சென்னையில் ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்.
அந்த சந்திப்பின்போது பெண் நிருபர் ஒருவரின் கேள்விக்கு அவரது கன்னத்தை தட்டினார் ஆளுநர். இதற்கு அந்த பெண் நிருபர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து ஆளுநர் மன்னிப்பும் கேட்டார். எனினும் மன்னிப்பை ஏற்றுக் கொண்ட பெண் நிருபர் கன்னத்தை கிள்ளயதற்கு ஆளுநர் சொன்ன காரணத்தை ஏற்கவில்லை என்றார்
இந்நிலையில் எஸ்வி சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். அதில் பெண் நிருபர்களின் தரத்தை தாழ்த்தும் அளவுக்கு அவர்களை கடுமையாக அவதூறாக விமர்சனம் செய்திருந்தார். இந்த கருத்து தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
...









