ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டிய நாளின்று!
தமிழகம் முழுவதும் இன்று (மார்ச் 11) இரண்டாவதுகட்டமாக, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.
போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தமிழ்நாட்டில் சிறப்பாக நடைபெறுவதால் தமிழ்நாடு 14ஆவது வருடமாகப் போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளதாகத் தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இந்த மருந்து குழந்தைகளுக்கு ஏற்படும் போலியோ எனும் இளம்பிள்ளைவாத நோயை ஒழிக்க வழங்கப்படுகிறது. இதற்காக ஆண்டுதோறும் இரண்டுகட்ட சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
தமிழக சுகாதாரத் துறை சார்பில் குழந்தைகளுக்கு முதல் தவணையாக கடந்த ஜனவரி 28ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இரண்டாவது தவணையாக இன்று காலை 7 மணி முதல் 5 மணி வரை மாநிலம் முழுவதும் போலியோ தடுப்பு சொட்டு ...









