1200 VFX ஷாட்ஸ்களுடன் உருவாகியிருக்கும் படம் சதுர் – இயக்குநர் அகஸ்டின் பிரபு !!
CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
டிரெய்லர் பார்த்து பிரமித்து விட்டேன் - சதுர் பட விழாவில் தயாரிப்பாளர் தனஞ்செயன் !!
Rocks Nature Entertainment சார்பில், தயாரிப்பாளர் ராம் மணிகண்டன் தயாரிப்பில், இயக்குனர் அகஸ்டின் பிரபு இயக்கத்தில், அமர் ரமேஷ், அஜித் விக்னேஷ் நடிப்பில் ஃபேண்டஸி ஜானரில், நான்கு விதமான காலகட்டத்தில் நடக்கும், வித்தியாசமான எண்டர்டெயினர் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “சதுர்”.
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து, தற்போது திரைவெளியீட்டு பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில் இயக்குனர் அகஸ்டின் பேசியதாவது…
இந்தப்படத்தில் 1200 VFX ஷாட்ஸ் இருக்கிறது. சாதாரணமாக சின்னப்படத்தில் இவ்வளவு சிஜி இருக்காது. தயாரிப்பாளரிடம் இரண்டு கதை சொன்னேன்...









