'சூர்யா 43' காக மீண்டும் இணையும் தேசிய விருது கூட்டணி
'சூர்யா 43' லேட்டஸ்ட் அப்டேட்
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் 'சூர்யா 43' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தின் புதிய தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.
சூர்யாவின் திரையுலக பயணத்தில் அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படைப்புகளில் 'சூரரைப் போற்று' திரைப்படமும் ஒன்று. இப்படத்தை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் சூர்யா கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் மிகவும் சவாலான பாத்திரங்களில் துல்கர் சல்மான், நஸ்ரியா பகத் , விஜய் வர்மா ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் 100வது படமிது. இந்தத் திரைப்படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில்...
*'ஹரா' படத்தில் நாயகனாகவும் 'தளபதி 68'ல் எதிர் நாயகனாகவும் ஒரே சமயத்தில் அதிரடியாக கலக்கும் மோகன்*
பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே முதலுதவி, குட் டச், பேட் டச் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு சொல்லித் தருவது போல, ஐபிசி சட்டங்களையும் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் 'ஹரா' திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நாயகனாக மோகன் நடிக்கிறார்.
இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜியின் கதையை பெரிதும் விரும்பி 'ஹரா' திரைப்படத்தில் நாயகனாக மோகன் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
மென்மையான பாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் தனியிடம் பிடித்த மோகன், 'ஹரா'வில் அதிரடி வேடத்தில் நடிக்கும் நிலையில், திரைப்படத்தின் முதல் பார்வை, டீசர் உள்ளிட்டவை பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளதன் அடுத்தக் கட்ட நகர்வாக, ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக...
சசிகுமார் & லிஜோ மோல் ஜோஷ் நடிப்பில், 90களில் நடக்கும் திரில்லர் டிராமா பரபரப்பான படப்பிடிப்பில் !!
இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் திரில்லர் டிராமா !!
Vijayaganapathy's Pictures சார்பில் பாண்டியன் பரசுராம் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோல் ஜோஷ் நடிப்பில், கழுகு புகழ் சத்யசிவா இயக்கத்தில் உருவாகும் புதிய திரில்லர் டிராமா திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 90களில் நடந்த உண்மைச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தின் தலைப்பினை விரைவில் படக்குழு அறிவிக்கவுள்ளது.
கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா 90களில் உண்மையாக நடைபெற்ற ஒரு சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார். விறுவிறுப்பான திரில்லர் டிரமாவாக இப்படம் உருவாகிறது.
90 கால கடத்தில் நடக்கும்...
திரைபிரபலங்களின் மத்தியில் பிரசித்திப் பெற்ற "புதுச்சேரி காமாட்சி " உணவகம் தற்போது சென்னையில் புதுப்பொலிவுடன் துவக்கம்.
புதுச்சேரி மக்களின் மனதில் நீங்க இடம்பிடித்த "புதுச்சேரி காமாட்சி " உணவகம் தற்போது சென்னையில் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது, புதுச்சேரியில் நான்கு கிளைகளுடன் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் "புதுச்சேரி காமாட்சி " உணவகம் சென்னையில் கடந்த 2019 ஆம் ஆண்டே துவங்கப்பட்டது, தற்போது மக்களின் பேரதரவுடன் புதுப்பொலிவுடன் அசோக் பில்லரில் 75 இருக்கை வசதிகளுடன் மிகப்பிரம்மாண்டமாக திறக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வை பற்றி "புதுச்சேரி காமாட்சி " உணவகம் உரிமையாளர் திரு.அக்கேஷ் ராஜ் அவர்கள் கூறிய பொது :-
60 வருடத்திற்கு முன் கடலூரில் எனது தாத்தா பாட்டி 'மதுரை முனியாண்டி விலாஸ்" என்ற பெயரில் உணவகம் தொடங்கி மிகப்பெரிய வரவேற்பை பெற்றனர். அதன் பின் 2003ம் ஆண்டு புதுச்சேரியில் நான் தொழ...