வெள்ளிக்கிழமை, ஜூலை 3
Shadow

Author: Kodanki

எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது, வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் – அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பேச்சு!

எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது, வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் – அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பேச்சு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக கல்லூரி நுழைவாயிலில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமை தாங்கினார். மாணவ செயலர் பூபதிராஜா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் முருகேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் கூறுகையில் , செப்டம்பர் 10 ந் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக ஐ.நா சபை அறிவித்தது, இந்தாண்டின் மையக்கருத்தாக "செயல்பாடுகள் மூலம் நம்பிக்கையை உருவாக்குதல்" உள்ளது. தற்போது எந்த பிரச்சனையாக இருந்தாலும் சர்வ சாதாரணமாக தற்கொலை செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. வீட்டில் உள்ளவர்கள் பேசினாலும், அறிவுரைகள் சொன்னாலும், காதல் தோல்வி, தேர்வில...
அமலாவின் “கணம்” சினிமா என்ன சொல்லுது?! விமர்சனம்

அமலாவின் “கணம்” சினிமா என்ன சொல்லுது?! விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  கடந்த காலத்தில் அறியாமையால் செய்த தவறுகள், அலட்சியத்தால் தவறவிட்ட சந்தர்ப்பங்கள் அதனால் எதிர்காலத்தில் ஏற்படும் இழப்புகள், இது அனைவருக்குமே நடந்திருக்கும். மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் சரி செய்து விடலாம் என்று அதை நினைத்து வருந்துவோம். ஒரு வேளை உண்மையாகவே அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்? ஆம். இது தான் ஷரவானந்த், சதிஷ் மற்றும் ரமேஷ் திலக் யோசிக்கிறார்கள். அவர்கள் மூவரும் குழந்தை பருவத்தில் இருந்து நண்பர்கள். அந்த பருவத்தில் அவர்கள் நழுவவிட்ட வாய்ப்புகளையும், காலத்தை வீணடித்து விட்டு இளம் வயதில் வருந்தி கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் விஞ்ஞானியான நாசர் டைம் மிஷின் குடுக்கிறார். அதன் துணை கொண்டு கடந்த காலத்திற்கு சென்று எல்லாவற்றையும் சரி செய்து வாருங்கள் என்கிறார். அம்மாவிற்காக ஷரவானந்தும், காதலிக்காக சதிஷும், படிப்பிற்காக ரமேஷ் திலக்கும் கடந்...
ஈரோட்டில் போலிமதுபான தொழிற்சாலை கண்டுபிடிப்பு!

ஈரோட்டில் போலிமதுபான தொழிற்சாலை கண்டுபிடிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு காரில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த மது பாட்டில்கள் போலியானது என்றும் ஈரோடு மாவட்டம் சூளை பகுதியில் இருந்து கொண்டு வருவதாகவும் காரில் இருந்தவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து கும்பகோணம் போலீசார் ஈரோடு போலீசாருடன் இணைந்து ஈரோடு சூளை பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தில் சோதனை செய்தனர். அப்போது அங்கு போலியாக ஒரு மது தொழிற்சாலை இயங்கி வந்தது தெரியவந்தது. மேலும் அங்கு இருந்த 4பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டிசென்று மடக்கி பிடித்தனர். மேலும் போலீசார் மதுபான தொழிற்சாலையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு போலி மது பானங்கள் தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருட்களான எரிசாராயம், பல்வேறு கலர் பொடிகள், மூடிகள், போலி ஹாலோகிராம் ஸ...
தக்காளி விலை குறைந்தது: கிலோ ரூ.40-க்கு விற்பனை!

தக்காளி விலை குறைந்தது: கிலோ ரூ.40-க்கு விற்பனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினசரி தக்காளி விற்பனைக்கு வருகிறது. கடந்த மாதம் இறுதிவரை மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கும் குறைவாகவே விற்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தக்காளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து குறைய தொடங்கியதால் விலை திடீரென அதிகரித்தது. கடந்த வாரம் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கும் வெளிமார்க்கெட்டில் உள்ள கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80 வரையிலும் விற்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தக்காளி வரத்து அதிகரித்து உள்ளதால் விலை சற்று குறைந்துள்ளது. இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கும் சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.50-க...
சொத்து விவரங்களை தாக்கல் செய்ய விஷாலுக்கு அவகாசம்.. உயர்நீதிமன்றம் உத்தரவு!

சொத்து விவரங்களை தாக்கல் செய்ய விஷாலுக்கு அவகாசம்.. உயர்நீதிமன்றம் உத்தரவு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக, பைனான்சியர் அன்புச் செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். இந்த கடனை அடைத்த லைகா சினிமா நிறுவனம், பணத்தை திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று விஷாலுடன் ஒப்பந்தம் செய்திருந்தது. கடனை செலுத்தாமல் வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிட விஷாலுக்கு தடை விதிக்க கோரி லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 15 கோடி ரூபாயை உயர்நீதிமன்றம் தலைமைப் பதிவாளர் பெயரில் 3 வாரங்களில் வங்கியொன்றில் நிரந்தர வைப்பீடாக டெபாசிட் செய்ய வேண்டும் என விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நேரில் ஆஜரான விஷால், இந்த உத...
அதர்வா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அதர்வா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் நடிகர் அதர்வா நடித்துள்ள திரைப்படம் 'டிரிக்கர்'. இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அருண் பாண்டியன், சீதா, முனீஸ்காந்த், சின்னி ஜெயந்த், அறந்தாங்கி நிஷா, அன்புதாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரமோத் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஆக்‌சன் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள 'டிரிக்கர்' படத்திற்கு இயக்குனர் பிஎஸ் மித்ரன் வசனம் எழுதியுள்ளார். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 'டிரிக்கர்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'டிரிக்கர்' திரைப்படம் செப்டம்பர் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. https://twitter.com/Atharvaamurali/status/1567830339208486913?ref_src=twsrc%5Et...
பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் புதிய படம்!

பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் புதிய படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *பெண்களுக்காக விழிப்புணர்வை ஏற்படுத்த வரும் புதிய ப(பா)டம்*   பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது.   தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் எக்கசக்கமான திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இருந்த போதிலும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு மட்டும் தான் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும்.   அந்த வகையில் தற்போது சமூகத்திற்கும் பெண்களுக்கும் தேவையான கதைகளத்துடன் புதிய திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது. ஏமாற்றுக்காரர்கள், பிளாக் மெயில் செய்பவர்களிடம் இருந்து பெண்கள் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதை மையப்படுத்தி இந்த திரைப்படம் உருவாகிறது. ஈஷான் என்ற அறிமுக நடிகர் ஹீரோவாகவும் பிரனாலி என்ற அறிமுக நடிகை நாயகியாகவும் நடிக்கும் இந்த படத்திற்கு மாரிச்செல்வன் கதை எழுத ஈஷான் நடிப்பது மட்டுமில்லாமல் த...
தோல்விக்குப் பின் மீள்வது எப்படி “கணம்” பாருங்கள் புரியும் என்கிறார் அமலா!

தோல்விக்குப் பின் மீள்வது எப்படி “கணம்” பாருங்கள் புரியும் என்கிறார் அமலா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  திரையுலகில் பெரும்பாலான கதாநாயகிகள் திருமணம் ஆனபிறகு நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு குடும்பம், குழந்தைகள் என வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் தொண்ணூறு காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகை அமலா. இவரும் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை தவிர்த்து குடும்பத்தினரோடு நாட்களை கழித்து வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நல்ல கதையம்சம் கொண்ட குடும்பப்பாங்கான “கணம்” திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். “கணம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் நடிகை அமலா பேசுகையில்… நான் ஒவ்வொரு முறை சென்னைக்கு வரும்போதெல்லாம் எனக்கு கிடைக்கும் அன்பு, வரவேற்பு திரையுலக ரசிகர்களின் கண்களில் தெரியும் ஆர்வம் என எல்லாவற்றையும் பார்க்கும் போது சொந்த வீட்டிற்குத் திரும்பியதைப் போல் உணர்கிறேன். நான் தமிழ் சினிம...
ஏலியன் சர்வைவல் திரில்லராக ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ” கேப்டன்”

ஏலியன் சர்வைவல் திரில்லராக ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ” கேப்டன்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  திரையுலகில் வெகு சில இயக்குநர்களே தங்கள் வழக்கமான படைப்புலகத்திலிருந்து வெளிவந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு படத்தை தர முயல்வார்கள். அத்தைகைய தொலைநோக்கு பார்வைக்கொண்ட இயக்குநர்களில் முதன்மையானவராக தன்னை நிரூபித்தவர் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன். ஸ்பேஸ் திரில்லராக உருவான டிக் டிக் டிக், வேம்பயர் திரில்லரன மிருதன், உயிருடன் வரும் டெடி பொம்மை சார்ந்த காதல் கதையான டெடி என ஒவ்வொரு படமும் அவருக்கு மட்டுமல்ல தமிழ்படைப்புலகத்திற்கே முற்றிலும் புதிதானது. அந்த வகையில் முற்றிலும் புதிதான களத்தில் ஏலியன் சர்வைவல் திரில்லராக ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் திரைப்படம் (செப்டம்பர் 8, 2022) உலகம் முழுக்க வெளியாகிறது படம் குறித்து இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் கூறியதாவது… ஒவ்வொரு படத்திற்கும் ஒரு ஆரம்ப புள்ளி இருக்கும் அந்த கணத்திலிருந்தே அதன் மொத்த பயணமும் தொடங்கும். கேப்...
இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர் விருது பெற்ற நடிகர் சௌந்தரராஜா!

இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர் விருது பெற்ற நடிகர் சௌந்தரராஜா!

CINI NEWS, HOME SLIDER, World News, உலக செய்திகள், செய்திகள், நடிகர்கள்
சிறந்த மனிதநேய விருதை பெற்றார் நடிகர் சௌந்தரராஜா நடிகர் சௌந்தரராஜா விற்கு இந்த ஆண்டிற்கான சிறந்த மனிதநேய விருது 2022 மலேசியா கோலாலம்பூரில் வழங்கப்பட்டது. Take Care International Foundation என்ற அமைப்பு மக்களுக்காக சேவை செய்யும் சிறந்த மனிதர்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு ஆண்டும் "Pride of Humanity" விருது வழங்கி கௌரவிக்கிறது. தமிழகம் முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரசெடிகளை நட்டு, இயற்கை மற்றும் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தையும் மக்களிடம் எடுத்துக்கூறி பொது வாழ்க்கையிலும் ஈடு படுத்தி கொள்ளும் நடிகர் சௌந்தரராஜாவிற்கு இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர் என்ற விருது மலேஷியா கோலாலம்பூரில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மலேஷியா செலங்கூர் மன்னர் சலாகுத்தீன் அப்துல் அஜிஸ் ஷா, டத்தோ சசிகலா சுப்ரமணியம் ( Deputy Director of police - Malaysia Royal police ) ...