மதிப்பிற்குரிய திரு. தனுஷ் K ராஜா, S/O கஸ்தூரி ராஜா, B/O செல்வராகவன்
வணக்கம்.
பல தவறான விசயங்களை சரி செய்வதற்காகவே வெளிப்படையான இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதியிருக்கிறேன். உங்கள் தந்தை திரு. கஸ்தூரி ராஜா அவர்கள் உறுதுணையோடு, சிறந்த இயக்குநரான உங்கள் அண்ணன் திரு. K.செல்வராகவனின் இயக்கத்தில் திரைத்துறைக்கு வந்து பிரபல நடிகராக மாறியிருக்கும் நீங்கள் நிச்சயம் இதனை புரிந்துகொள்ள வேண்டும். சினிமா பின்புலம் எதுவும் இல்லாமல் தனி ஒரு பெண்ணாக, சவால்கள் நிறைந்த திரைத்துறைக்கு வந்து, கடின உழைப்பாலும், நேர்மையான அர்ப்பணிப்பாலும் இன்றைய நிலையை அடைந்திருக்கிறேன். நேர்மறையான எனது பயணத்தை என் மீது அன்பு செலுத்தும் எனது ரசிகர்களும், திரைத்துறையினரும் நன்றாகவே அறிவார்கள்.
நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கும் 'Nayanthara: Beyond the Fairy Tale' ஆவணப்படத்தை என்னைப் போலவே ஏராளமான எனது ரசிகர்க...
கன்னடத்தில் சிவராஜ்குமாரின் 'பைரதி ரணகல்' படத்தில் அறிமுகமான நடிகர் ஷபீர் கல்லரக்கலுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது!
நடிகர் ஷபீர் கல்லரக்கலின் சினிமா கரியரில் மறக்க முடியாத மகிழ்ச்சியான வருடமாக 2024 இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தெலுங்கில் வெற்றி பெற்ற 'நா சாமி ரங்கா', தமிழில் 'பர்த்மார்க்' மற்றும் மலையாளப் படம் 'கொண்டல்' ஆகியவை இவரது நடிப்பில் இந்த வருடம் வெளியாகி நான்கு மொழி ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுகள் பெற்றுள்ளது. இருப்பினும், அவர் கன்னடத்தில் அறிமுகமான முதல் திரைப்படமான 'பைரதி ரணகல்' மூலம் நடிகர் சிவராஜ்குமாருடன் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பது அவரது உற்சாகத்தை இன்னும் அதிகமாக்கியுள்ளது.
இந்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொண்ட நடிகர் ஷபீர், “'மஃப்டி' படத்தின் மிகப்பெரிய ரசிகன் நான். சிவராஜ்குமார் படத்திலேயே...
'நிறங்கள் மூன்று' படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!
ஐங்கரன் இண்டர்நேஷனல் கருணாமூர்த்தி தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர்கள் அதர்வா முரளி, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நிறங்கள் மூன்று'. வரும் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது.
நிகழ்வில் நடிகர் துஷ்யந்த் பேசியதாவது, "கார்த்திக் நரேனின் மிகப்பெரிய ரசிகன் நான். அவரது கதையில் நடித்திருப்பது மகிழ்ச்சி. எடை குறைத்து ஸ்கூல் பையனாக நடித்திருக்கிறேன். 'கருடன்' படத்தில் வில்லனாக நடித்திருப்பேன். அதற்கு எதிர்மறையான கதாபாத்திரம் இந்தப் படத்தில். அதர்வா, சரத்குமார் சார், ரஹ்மான் சார், அம்மு அபிராமி இவர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சி" என்றார்.
எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் சுந்தர்ராஜன், "இப்போது சினிமாவுக்கு வர...