வெள்ளிக்கிழமை, ஜூலை 3
Shadow

Author: Kodanki

“நட்சத்திர கலைவிழா” நடத்தி காசு பார்க்கும் நரிக்கூட்டம், பிணம் தின்னும் ஓநாய்கள் என்மீது குறை சொல்வதா..? இயக்குனர் விசு ஆவேசம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  இயக்குனர் விசு அவர்கள் வெளியிட்ட பதிவு. அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுபவன் நான் அல்ல .. சொந்த முயற்சியில் எத்தனையோ vv நற்பணிகளை 'அரட்டை அரங்கம்' மூலமாகவும் 'மக்கள் அரங்கம்' மூலமாகவும் என்னால் செய்ய முடிந்திருக்கிறது என்பதை நாடறியும் .. Dialysis எனும் ரத்த சுத்திகரிப்பு நோயுடன் 6 வருடங்களாகப் போராடிக் கொண்டிருக்கும் நான், இன்றைய தேதியிலும், இந்த 2018 ம் வருஷத்திலும், மாணவ மாணவிகளின் படிப்புக்காக எங்கள் 'விசு எஜுகேஷனல் டிரஸ்ட்' மூலம் லஷக்கணக்கில் பணம் நன்கொடை வழங்கி இருக்கிறேன் .. என்பதையும், இனியும் வழங்குவோம் என்பதையும், வருமான வரி அலுவலகத்துக்கு நாங்கள் சமர்ப்பிக்க இருக்கும் கணக்குப்புத்தகங்கள், ஆவணங்கள் சொல்லும் .. 7/8/2003 அன்று ஆரம்பிக்கப்பட்ட அந்த டிரஸடுக்கு நான் Founder and Managing Trustee .. அன்று முதல், 15 வருடங்களாக அந்த 'விசு எஜுகேஷனல் டிரஸ்டி' ல் மாணவ மாணவிகளுக்கு ந...
தியேட்டரில் திருட்டு வீடியோ ஆதரங்களோடு அமைச்சரை சந்தித்த தயாரிப்பாளர்கள்..!

தியேட்டரில் திருட்டு வீடியோ ஆதரங்களோடு அமைச்சரை சந்தித்த தயாரிப்பாளர்கள்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
தியேட்டரில் புதுப்பட திருட்டு... ​​ அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த 'ஒரு குப்பைக் கதை' மற்றும் 'மனுசனா நீ' தயாரிப்பாளர்கள்! தமிழ்த் திரைப்படங்கள் ரிலீசான அன்றே தியேட்டர்களில் திருட்டுத்தனமாக கேமரா வைத்து எடுக்கப்பட்டு, இண்டர்நெட்டில் ஏற்றி திருட்டுத்தனமாகப் பார்ப்பதற்கும், டவுன்லோடு செய்து திருட்டு டிவிடி தயாரித்து எல்லா இடங்களுக்கும் விநியோகித்து தமிழ் சினிமாவின் வியாபாரத்தைப் பெருமளவில் நஷ்டப்படுத்திக் கொண்டிருப்பது எல்லோரும் அறிந்ததே. அதனைத் தடுக்க சில தயாரிப்பாளர்கள் முயன்று தோற்றுப் போனார்கள். தியேட்டர் திருடர்கள் மேலும் வளர்ந்து சினிமாவின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கினார்கள். சினிமா விரும்பிகளும் டிக்கெட் விலை போன்ற சில காரணங்களைச் சொல்லி ஆண்ட்ராய்டு போன் மூலம் படம் பார்த்து இண்டர்நெட் திருட்டுக்கு உடந்தையாக இருந்தனர். இது தொடர்ந்தால் வெகு விரை...
ஆக்‌ஷன் கலந்த காமெடி படமாக விஜய்சேதுபதியின் ஜூங்கா..!

ஆக்‌ஷன் கலந்த காமெடி படமாக விஜய்சேதுபதியின் ஜூங்கா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘ஜுங்கா’ இம்மாதம் 27 ஆம் தேதியன்று வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் அவர்களின் பிறந்த நாள் விழா நேற்று ஜுங்கா படக்குழுவினருடன் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் அருண் பாண்டியன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இயக்குநர் கோகுல், சரண்யா பொன்வண்ணன், சுரேஷ் மேனன், மடோனா செபாஸ்டின், இசையமைப்பாளர் சித்தார்த் விபின், படத்தொகுப்பாளர் ஷாபு ஜோசப், பாடலாசிரியர் லலிதானந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விஜய் சேதுபதி பேசுகையில்,‘இயக்குநர் கோகுல் மீது எனக்கு எப்போதும் பெரிய நம்பிக்கை உண்டு.அவருடைய எண்ண அலைகள் எப்போதும் என்னை வசீகரிக்கும். அதனை என்னால் எளிதில் உட்கிரகிக்க இயலும். இது தான் ஜுங்காவில் நான் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு முதல் காரணம். அதன் பிறகு தான் அருண் பாண்டியன் ...
ரசனையான கடைக்குட்டி சிங்கம் – விமர்சனம்

ரசனையான கடைக்குட்டி சிங்கம் – விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  பாளம்பாளமா பூமி வெடிச்சி காஞ்சிப்போயிருந்த பூமிமேல ஒரு லாரி தண்ணிய ஊத்தினா எப்படி இருக்கும்... ஊத்துன தண்ணிய பூமி உறுஞ்சும் பாருங்க... ஒரு வேகம்... அப்படி இருக்கு கார்த்தியோட கடைக்குட்டி சிங்கம் படம். ஹீரோயின் சதை மேல நம்பிக்கை வைக்காம குடும்ப செண்ட்டிமெண்ட் கதை மேல நம்பிக்கை வைச்சி ரத்தம் காட்டாம... வில்லனோட சத்தம் இல்லாம ஜாலியா படம் தொடங்கி முடியிறவரை வேல்ராஜின் கேமரா கண்ணுக்கு குளிர்ச்சியா பச்சை பசேல்னு வயல்... டிராக்டர்... கலகல கூட்டுக்குடும்பம் அதுல வர்ற மாமன் மச்சான் சண்டை என காட்டி ரொம்பவே ரசிக்க வைச்சிருக்கார் இயக்குனர் பாண்டியராஜ். என்னதான் பணம் காசு படிப்பு இருந்தாலும் விவசாயம் தான் தலைமுறையை காப்பாற்றும். விவசாயம் அழிந்தால் நாடே அழிந்து விடும். விவசாயம் வளர்ந்தால் நாடு சீக்கிரமே வல்லரசாக மாறிவிடும் என்கிற நெத்தியடி விஷயத்தை சரியான நேரத்தில் சொல்லியிருக்கிற...
ராகுல்காந்தியிடம் ரஞ்சித் சொன்ன ரஜினி  ரகசியம்..!

ராகுல்காந்தியிடம் ரஞ்சித் சொன்ன ரஜினி ரகசியம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
    தமிழகத்தில் புதிதாக அரசியல் கட்சி தொடங்க உள்ள நடிகர் ரஜினிகாந்த்துக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்தாரா இயக்குனர் ரஞ்சித். மெட்ராஸ், கபாலி, காலா போன்ற பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய இயக்குநர் பா.ரஞ்சித்தை நேற்று டெல்லியில்சந்தித்தேன். அவருடன் நடிகர் கலையரசனையும் சந்தித்தேன். சமுதாயம்,அரசியல்,திரைப்படங்கள் குறித்து பேசினோம். அவர்களுடன் உரையாடியது மகிழ்ச்சியளிக்கிறது என காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி ட்வீட் செய்தது தமிழக சினிமா வட்டாரத்திலும் தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. ராகுல்காந்தியை இயக்குனர் ரஞ்சித் ஏன் திடீரென சந்தித்தார். அரசியல் பேசியதாக கூறியிருப்பதால் காங்கிரஸ் கட்சியில் ரஞ்சித் சேரப் போகிறாரா... அல்லது சமீபத்திய சினிமா அரசியல்வாதியாக அறிவித்த ரஜினி சார்பாக இந்த சந்திப்பு நடந்ததா என்றும் பல ஹோசியஙகள் களை க...
மயில்சாமி மகன் யுவனின் “வாய்க்கா தகராறு”

மயில்சாமி மகன் யுவனின் “வாய்க்கா தகராறு”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    ராயல் சினி எண்டர்டைன்மெண்ட் என்ற பட நிறுவனம் சார்பில்p.முருகவேல் தயாரிக்கும் படத்திற்கு " வாய்க்கா தகராறு என்று பெயரிட்டுள்ளனர்.. இந்த படத்தில் மயில்சாமி மகன் யுவன் மயில்சாமி நாயகனாக நடிக்கிறார்.. இன்னொரு நாயகனாக விஜய்ராஜ் நடிக்கிறார்.. நாயகிகளாக வர்ஷிகா நாயகா,நைனா ஆகியோர் நடிக்கிறார்கள்.. மற்றும் பவர்ஸ்டார் சிங்கம்புலி மனோபாலா  போண்டாமணி கராத்தே ராஜா சுரேகா ரேவதி ஆகியோர் நடிக்கிறார்கள் திரைக்கதை அமைத்து இயக்குகிறார் சுரேஷ் கே வெங்கிடி. இவர் மலையாளத்தில் இயக்குனர் கே.மது ,சுதிசங்கர் போன்ற இயக்குனர்களிடமும், பேட்டன் போஸ் என்கிற கதாசிரியரிடமும் உதவியாளராக இருந்தவர் இவர் இயக்கும் முதல் படம் இது... படம் பற்றி இயக்குனர் சுரேஷ் கே வெங்கிடியிடம் கேட்டோம்.. என்று தணியும் என்ற படத்தில் நடித்திருந்த யுவன் மயில்சாமியையும் "யோக்கியன் வரான் சொம்ப எடுத்து உள்ள வை" பட...
வெங்கட்பிரபு அரசியலில் சிம்புவின் “மாநாடு”

வெங்கட்பிரபு அரசியலில் சிம்புவின் “மாநாடு”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் "மாநாடு"!!! செக்கச் சிவந்த வானம் படத்தை முடித்த கையோடு அதிரடியில் இறங்கியுள்ளார் கோலிவுட்டின் மிகத் திறமையான நடிகர் சிம்பு... இன்றைய ஜல்லிக்கட்டின் வெற்றியை மகிழ்ச்சியோடு தமிழர்கள் கொண்டாடுகின்றனர். ஆனால் அதன் தொடக்கம் சிம்புதான். முதல் ஆளாகத் தனது வீட்டு வாசலில் உட்கார்ந்து போராடத் தொடங்கிய தமிழன். ஆனால் நான்தான் தொடங்கினேன் என எங்கும் இதுவரை மார்தட்டிக் கொள்ளவில்லை. மக்கள் நன்மைகளை கணக்கில் கொண்டு மக்களோடு மக்களாக நின்று குரல் கொடுக்கும் நிஜ நாயகனாக மட்டுமே தமிழ் மக்கள் முன் நிற்கிறார் சிம்பு. தனது பழைய பாணிகளைத் தூக்கியெறிந்துவிட்டு கடுமையான உழைப்பு, சரியான கதைத் தேர்வு, நேரத்திற்கு படப்பிடிப்பில் கலந்துகொள்வது என ஒரு புது சிம்பு தெம்பாக களமிறங்கியுள்ளார். அடுத்தடுத்த...
பிரபாகரன் மகன் படுகொலை  சினிமாவுக்கு தடை விதித்த இலங்கை..!

பிரபாகரன் மகன் படுகொலை சினிமாவுக்கு தடை விதித்த இலங்கை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
பாலச்சந்திரன் படுகொலை பற்றிய படத்துக்கு தடை விதித்த இலங்கை! பாலசந்திரன், இசைப்பிரியா இருவரின் படுகொலையை மையமாக வைத்து ஆஸ்திரேலியாவில் உருவாக்கப்பட்ட 'சாட்சிகள் சொர்க்கத்தில்' (Witness In Heaven) திரைப்படத்திற்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் பாலசந்திரன் மற்றும் ஊடகவியலாளர் இசைப்பிரியா ஆகியோரின் படுகொலையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட முழுநீள திரைப்படம் சாட்சிகள் சொர்க்கத்தில். இப்படத்தில் ஈழத்தில் நடந்த கொலை சம்பவங்களோ, சித்திரவதை காட்சிகளோ, இறுதிப்போரில் நடந்த சம்பவங்களோ சித்தரிக்கப்படவில்லை என்று ஏற்கெனவே கூறியிருந்தார் இப்படத்தின் இயக்குநர் ஈழன் இளங்கோ. இருப்பினும், இறுதிப்போரில் பாதிக்கப்பட்டு வெளிநாடுகளில் முகாம்களில் மற்றும் சமுதாயத்தில் வாழும் மக்களின் சோகக்கதைகள் மற்றும் சம்பவங்கள் இப்படத்தில் காட்சியாக்கப்பட்டுள்ளது...
கண் தெரியாத பெண்ணாக வரலட்சுமி..!

கண் தெரியாத பெண்ணாக வரலட்சுமி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
வரலக்ஷ்மி  ராதாரவி  சீதா  சரண்யா  அருண் தேவஸ்யா  ராஜேஷ்கண்ணா  நடிக்கும்   புதிய  படத்தை  இயக்குகிறார்  ஜேகே . இந்தப்படத்தில்  வரலக்ஷ்மி  கண்தெரியாத  பெண்ணாக  புதிய  பாத்திரத்தில் நடிக்கிறார் . படம்  பற்றி  இயக்குநர் ....இந்தப்படம்  கிரைம்  திரில்லர்  ஆக , தயாராகிறது ,திரில் படங்கள்  பலவந்திருந்தாலும்  இப்படம்   பெண்களை  மையமாக  வைத்து  செண்ட்டிமென்ட்டோடு , புதிய  கோணத்தில்  தயாராகிறது .படம் ஒரே  கட்டபடப்பிடிப்பாக தொடர்ந்து  நடந்து  படம் முடிய இருக்கிறது . ஒளிப்பதிவு  மேத்யூஸ்  ,இசை  ஷியாம்  சண்டைப்பயிற்சி  சிறுத்தைகணேஷ்   எடிட்டிங்  வெங்கி    கதை  திரைக்கதை  வசனம்  இயக்கம்  jk.தயாரிப்பு  ஜெயபிரகாஷ் , பவித்ராஜெயராம் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. கதைக்கு பொருத்தமான பெயர் தேர்வு நடைபெறுகிறது.    ...