26 கட்சிகளுடன் INDIA vs 38 கட்சிகளுடன் NDA 2024ல் வெல்லப்போவது யார்?
மொத்தம் 26 கட்சி.. பாஜகவுக்கு எதிராக பெங்களூரில் உருவான எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி "INDIA, 38 கட்சிகளுடன் NDA கூட்டணி.
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் ஆளும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ், திமுக, திரிணமுல் காங்கிரஸ் உட்பட 26 கட்சிகள் இணைந்து 2வது கட்டமாக இன்று பெங்களூரில் சோனியா காந்தி தலைமையில் தீவிர ஆலோசனை நடந்தது. புதிய கூட்டணி உருவாகி உள்ளது. மேலும் அந்த கூட்டணிக்கு INDIA என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று 2வது நாள் கூட்டம் காலை 11 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கேரளா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி மறைவால் இந்த கூட்டம் ஒரு மணிநேரம் தாமதமாக துவங்கியது.
நேற்றைய ஆலோசனையில் பங்கேற்காத தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் உள்பட இன்னும் ...









