சனிக்கிழமை, ஜூன் 20
Shadow

Author: Kodanki

பைரவா விமர்சனம்

பைரவா விமர்சனம்

விமர்சனம்
ஒய்.ஜி.மகேந்திரன் மேனேஜராக பணிபுரியும் தனியார் வங்கியில், வராத கடன் தொகையை வசூலித்து கொடுப்பவராக பணிபுரிந்து வருபவர்தான் விஜய். இவருடன் சதீஷும் சேர்ந்து அதே பணியை செய்து வருகிறார். ஒய்.ஜி.மகேந்திரன் சிபாரிசின் பேரில் வங்கியில் வாங்கிய ரூ.64 லட்சம் பணத்தை மைம் கோபி அந்த பணத்தை திருப்புக்கொடுக்க முடியாது என்று அவரை ஏமாற்றி விடுகிறார். இதனால் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு பெரிய சிக்கல் ஏற்படுகிறது. அவரது மகளின் திருமணமும் நடக்கவுள்ளதால், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண விஜய்யின் உதவியை நாடுகிறார். விஜய்யும் மைம் கோபியை அடித்து துவம்சம் செய்து ஒய்.ஜி.மகேந்திரனுக்கு வரவேண்டிய பணத்தை மீட்டு கொடுக்கிறார். அதன்பின்னர், ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் திருமணம் நடக்கிறது. அந்த திருமணத்திற்கு மணப்பெண்ணின் தோழியான கீர்த்தி சுரேஷ் திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு வருகிறாள். கீர்த்தி சுரேஷை பார்த்ததும் அவள்மீது காதல்...
வியாபார தளமாக மாறிய  ICAF நடத்தும் 14 வது உலக திரைப்பட விழா !

வியாபார தளமாக மாறிய  ICAF நடத்தும் 14 வது உலக திரைப்பட விழா !

சினி நிகழ்வுகள், செய்திகள்
  சென்னையில்  ஆரம்பத்தில் பெரிய அளவில் விளம்பரதாரர்கள் இல்லாத சமயத்திலும், அரசின் உதவிகளும் இல்லாத நிலையிலும், ஆனந்த் திரையரங்கம், பைலட் திரையரங்கம், போன்ற இடங்களில் சிறப்பாக நடைபெற்று வந்தது, உலக திரைப்பட விழா ! படங்களின் தேர்வுகளும் பாராட்டலாம். டிசம்பர் இறுதியில் நடைபெற வேண்டிய நிகழ்வு புரட்சித் தலைவி மறைவாக தள்ளி வைத்து, தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் தியேட்டர்கள் கிடைப்பதில் சில சிறமங்களை சந்தித்துள்ளதாக நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அதே சமயத்தில், காசினே போன்ற திரையரங்குகளில் ( நிர்வாகப் பணிகள் உட்பட ) திரைப்பட விழா நடைபெறுவது வருத்தம் அளிக்கிறது. வடபழனியில் உள்ள பலாசாவில் தினமும், பலர் அவமதிக்கப்படுகின்றனர். விழா குழுவினர் அதை ஒழுங்குபடுத்த வேண்டும். ஆர்.கே.வி ஸ்டுடியோஸ் ஆறுதல் என்றே சொல்லலாம், நன்றி. இந்த முறை சரியான படங்களையும் தேர்வு செய்யவில்லை, குறைந்த அளவே நல்ல...
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் ”கொம்பு வைச்ச சிங்கமடா”  ஜல்லிக்கட்டின் பெருமைகளை உணர்த்தும் பாடல்

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் ”கொம்பு வைச்ச சிங்கமடா” ஜல்லிக்கட்டின் பெருமைகளை உணர்த்தும் பாடல்

சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், வீடியோ
கொம்பு வைச்ச சிங்கமடா – ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் அருண்ராஜா காமராஜ்வரிகளில் ஜல்லிக்கட்டின் அருமைபெருமைகளை உணர்த்தும் பாடல் ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்ற தீர்ப்புக்கு எதிராகஉலகெங்கும் உள்ள தமிழர்கள் பெருவாரியாக ஒன்றினைந்து தங்களின்ஒற்றுமையை ஜல்லிக்கட்டிற்கு தரும் ஆதரவின் மூலம் மீண்டும்நிருபித்துள்ளனர். மக்களுடன் இணைந்து பல சினிமா பிரபலங்களும் ஜல்லிக்கட்டிற்குஆதரவு அளித்து வருகின்றனர். ஆதரவளித்தவர்களில் மிகவும்முக்கியமானவர் நடிகர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். ஜல்லிக்கட்டு எங்கள் தமிழர் மற்றும் தமிழ்நாட்டின் பாரம்பரியம், ஆகவேதடையை விளக்குங்கள் என்று உரக்க குரல் கொடுத்த ஜி.வி. பிரகாஷ்குமார், மேலும் தனது ஆதரவை வலுப்படுத்த ஜல்லிகட்டின் மகிமைமற்றும் தமிழருக்கும் ஜல்லிக்கட்டிற்க்குமான சொந்தத்தைஉணர்ச்சிப்பூர்வமாக கூறும் “கொம்பு வைச்ச சிங்கமடா” எனும் பாடலைஇசையமைத்து வெளியிட்டுள...
ஃப்ரீயா வந்த நடிகை தீபிகா: பாலிவுட்காரர்கள் அதிர்ச்சி

ஃப்ரீயா வந்த நடிகை தீபிகா: பாலிவுட்காரர்கள் அதிர்ச்சி

சினி நிகழ்வுகள், செய்திகள்
மும்பையில் நடந்த தி ரிட்டர்ன் ஆப் சாண்டர் கேஜ் ஹாலிவுட் படத்தின் சிறப்பு காட்சி நிகழ்ச்சிக்கு தீபிகா படுகோனே அணிந்து வந்த உடை அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. வின் டீசலின் தி ரிட்டர்ன் ஆப் சாண்டர் கேஜ் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ளார். இது தான் தீபிகா நடித்துள்ள முதல் ஹாலிவுட் படம் ஆகும். இந்நிலையில் வின் டீசல், படத்தின் இயக்குனர் கேருசோ ஆகியோர் மும்பை வந்துள்ளனர். மும்பையில் தி ரிட்டர்ன் ஆப் சாண்டர் கேஜ் படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரன்வீர் சிங், ஷாஹித் கபூர், இர்பான் கான், நீல் நிதின் முகேஷ் உள்பட ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். சிறப்பு காட்சி நிகழ்ச்சிக்கு தீபிகா தங்க நிற கவுன் அணிந்து வந்திருந்தார். அவர் முன்னழகில் பெரும்பகுதி தெரியும்படி உடை அணிந்திருந்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது....
மவுன போராட்டம் நடத்திய சிம்புவை கட்டித் தழுவி பாராட்டிய சீமான்

மவுன போராட்டம் நடத்திய சிம்புவை கட்டித் தழுவி பாராட்டிய சீமான்

செய்திகள்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மவுன போரட்டம் நடத்திய நடிகர் சிம்புவை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சந்தித்து பாராட்டினார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சிம்பு வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு தனது வீட்டு வாசலில் 10 நிமிடம் மவுன போராட்டம் நடத்தினார். அவருடன் சேர்ந்து அவரது குடும்பத்தாரும் மவுனமாக நின்றிருந்தார்கள். இந்த போராட்டத்தில் இயக்குனர் ராமும் கலந்து கொண்டார். சிம்புவுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் தங்களின் வீடுகள், அலுவலகங்கள் முன்பு மவுன போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சிம்புவை சந்தித்து பாராட்டினார். அப்போது சீமான் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஜல்லிக்கட்டு நடத்தினோம். தடையை மீறி நடத்தியதால் எங்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம். வேறு இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்துவோம். படத்தை ரிலீ...
ஸ்ரீ சங்கரா டிவி “வெஜிடேரியனிசம்”

ஸ்ரீ சங்கரா டிவி “வெஜிடேரியனிசம்”

செய்திகள்
  “வெஜிடேரியனிசம்”( சைவம்) (திங்கள் முதல் வியாழன் வரை மாலை 8.30 மணிக்கு ) நல்ல உணவு என்பது நம் வாழ்க்கையின் முக்கிய அங்கமாகும், முன்பெல்லாம் நாம் வாழ்வதற்கு பிற உயிரினங்களை கொன்று உட்கொள்ளும் நிலை இருந்தது. ஆனால் ஸ்ரீ சங்கராவின் கருத்து  என்னவென்றால் தற்போதய வழக்கை முறைக்கு இது தேவையில்லை. இப்பொழுது  மக்களிடையே நிலவிவரும் கருத்து என்னவென்றால் முட்டை, மீன் ,இறைச்சி போன்றவற்றில் இருந்து கிடைக்கும் சத்துக்கள் அனைத்தும்  பச்சை தாவர உணவிலிருந்தும் கிடைக்கின்றது. சைவ உணவு பழக்கம் என்பது தாவரங்கள் மற்றும் தானியங்களில் இருந்து பெறப்படுவதாகும். எனவே தான் இக்கால மக்கள் இதனை உணர்ந்துகொண்டு சைவ உணவு பழக்கத்துக்கு மாறிவருகின்றன. சைவ உணவு பழக்கத்தின் மூலமாக சாமானிய மனிதனுக்கு ஏற்படக்கூடிய உடல் உபாதைகளான உடல் பருமன், ரத்த அழுத்தம் , சர்க்கரை நோய், புற்று நோய் போன்றவற்றை தவிர்க்கலாம். எனவே தான...
ரகுமானின் ‘பகடி ஆட்டம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் இயக்குனர் பாண்டிராஜ்

ரகுமானின் ‘பகடி ஆட்டம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் இயக்குனர் பாண்டிராஜ்

சினி நிகழ்வுகள், செய்திகள்
ரகுமானின் ‘பகடி ஆட்டம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் இயக்குனர் பாண்டிராஜ் நடிகர் ரகுமானின் அதிரடி ஆட்டம் ஆரம்பமாகி விட்டது. இவர் அடுத்ததாக ஆடும் ஆட்டம் ‘பகடி ஆட்டம்’. மாறம் மூவீஸ் மற்றும் பரணி மூவீஸ் பெருமையுடன் வழங்கும் படம் ‘பகடி ஆட்டம்’. இப்படத்தை குமார் டி.எஸ், கே.ராமராஜ், டி.சுபாஷ் சந்திரபோஸ், ஏ.குணசேகர் ஆகியோர் தயாரித்து வருகிறார்கள். ராம் கே.சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார். கார்த்திக் ராஜா இசையமைத்து வருகிறார். வி.டி. நிறுவனம் இப்படத்தை உலகமெங்கும் வெளியிட இருக்கிறது. இப்படம் குறித்து இயக்குனர் ராம் கே.சந்திரன் கூறும்போது, ‘எல்லா வசதியும் கொண்ட ஒரு ஆணுக்கும், அன்றாட வாழ்க்கையில் கஷ்டப்பட்டு வாழும் பெண்ணுக்கும் இடையேயான கதைதான் ‘பகடி ஆட்டம்’. மேலும் தற்போதுள்ள சூழ்நிலையில், சமூக வலைதளங்களில் மக்கள் அதிக ஆர்வம் காண்பித்து வருகின்றனர். இந்த சமூக வலைதளங்கள் எப்படி பெண...
எதிர்த்து குரல் கொடுத்த ஆர்யா நடிப்பில்  சந்தனதேவன் பெயரில் ஜல்லிக்கட்டு கதை எடுக்கும் அமீர்

எதிர்த்து குரல் கொடுத்த ஆர்யா நடிப்பில் சந்தனதேவன் பெயரில் ஜல்லிக்கட்டு கதை எடுக்கும் அமீர்

சினி நிகழ்வுகள், செய்திகள்
அடங்க மறு, அத்து மீறு, திமிறி எழு, திருப்பி அடி...' - அமீர் இயக்கும் சந்தனத் தேவன்! ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் தமிழகத்தில் உச்சத்தை எட்டியுள்ள சூழலில், தனது அடுத்த படத்தை ஜல்லிக்கட்டை மையமாக வைத்து இயக்கப் போவதாக அறிவித்துள்ளார் இயக்குநர் அமீர். இந்தப் படத்துக்கு சந்தனத் தேவன் என்று தலைப்பிட்டுள்ளார். தலைப்பை மென்மையாக வைத்து விட்டு கதையில் தீவிரத்தை காட்ட திட்டமிட்டிருக்கிறார் அமீர். இந்தப் படத்தில் இயக்குநர் அமீர், ஆர்யா, ஆர்யாவின் தம்பி சத்யா நாயகர்களாக நடிக்கிறார்கள். இந்த ஆர்யாதான் ஜல்லிக்கட்டுக்கு எதிரான பல கருத்துக்களை கூறியவர். இப்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான படத்தில் ஹீரோவாக ஆர்யா நடிக்கிறார். வழக்கமாக அமீர் படங்களில் சர்ச்சைகளும், சலசலப்புகளும் ஏற்படுவது வழக்கம். இந்த சந்தனதேவன் பட கதையும் பல சர்ச்சைகளையும், சலசலப்புகளை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது. படத்தின் முதல் தோற...
ஜல்லிக்கட்டு தடைக்கு வெளிநாட்டு சதி   மரம் நடும் விழாவில் எஸ்.வி.சேகர் பரபரப்பு பேச்சு

ஜல்லிக்கட்டு தடைக்கு வெளிநாட்டு சதி மரம் நடும் விழாவில் எஸ்.வி.சேகர் பரபரப்பு பேச்சு

செய்திகள்
விவேகானந்தர் பிறந்த தினத்தை முன்னிட்டு தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரி சார்பில் 1லட்சம் மரக்கன்றுகள் நடும் பிரமாண்டமான விழா சென்னை தாம்பரம் அருகே உள்ள 400 அடி வெளி வட்ட சாலையில் நடந்தது. விழாவுக்கு சாய்ராம் பொறியியல் கல்லூரி சேர்மன் சாய்பிரகாஷ் தலைமை தாங்கினார். விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.வும் நடிகருமான எஸ்.வி.சேகர், நடிகர் விவேக், நடிகர் ஜெகன், எம்.எல்.ஏ.ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா தொடங்கும் முன்பு நடிகர் விவேக் மரக்கன்றுகள் நட்டு விழாவை தொடங்கி வைத்தார். நடிகர் எஸ் வி.சேகர் பேசும் போது : மரம் நடும் விழாவில் ஆயிரக்கணக்கில் மாணவ, மாணவிகள் கூடியிருப்பது மகிழ்ச்சியை தருகிறது. மரம் மாதிரி நிக்குறியேன்னு யாராவது சொன்னால் வருத்தப்படாதீர்கள். மரம் போல நிற்பது கஷ்டம். இன்னிக்கு சென்னை கார்ப்ரேஷன் வைக்கும் மரங்களை வாயால் ஊதினாலே விழுந்து விடும். அவ்ளோ மோசமாக இருக்கிறது. ...