வெள்ளிக்கிழமை, ஜூலை 10
Shadow

Author: Kodanki

சென்னை நீர்நிலைகளை தூய்மைப்படுத்த நடவடிக்கை- அமைச்சர் தகவல் !

சென்னை நீர்நிலைகளை தூய்மைப்படுத்த நடவடிக்கை- அமைச்சர் தகவல் !

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
சென்னை தினம் கொண்டாட்டத்தையொட்டி பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் கலாச்சார நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, சென்னையில் 16 நீர்நிலைகள் இருந்தன. இந்த நீர்நிலைகளில் கலந்துள்ள கழிவுநீர் அகற்றி அவற்றை மீண்டும் தூய்மைப்படுத்தி நீர்நிலைகளாக மாற்றும் பணிகள் முதலமைச்சர் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் சுமார் 1,055 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர், சென்னை மேயராக இருந்தபோதுதான் சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன துரிதப்படுத்தப்பட்டன. பிற மாநிலத்தவரும் வியக்கும் வகையில் சென்னையில் அனைத்து சேவை துறைகளையும் ஒருங்கிணைத்து சாலைகள், தெருவிளக்குகள், குடிநீர் வசதிகள் மற்றும் பல்வேறு திட்டப் ப...
‘ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்!

‘ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
சென்னையில் ஒவ்வொரு சாலையிலும் ஞாயிற்று கிழமைகளில் காலை 6 முதல் 9 மணி வரை சுமார் 800 முதல் 1000 மீட்டர் வரையிலான சாலையில் 5 வாரங்களுக்கு "ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்" நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த சாலைகளில் 3 மணி நேரத்திற்கு முழுவதுமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ் - நோக்கங்கள் தொடர்பான நடனம், பாட்டு, இசை நிகழ்ச்சிகள், இலவச சைக்கிள் பயணம், ஸ்கேட்டிங், கயிறு இழுத்தல், கைப்பந்து, பூப்பந்து போன்ற விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சி இந்த வாரம் அண்ணா நகரில் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது. 9 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேட்மிட்டன், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி மக்களை உற்சாகப்படுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள...
கவர்ச்சி நடிகை வாழ்க்கை படத்தில் டாப்சி!

கவர்ச்சி நடிகை வாழ்க்கை படத்தில் டாப்சி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து 1980 மற்றும் 90-களில் தவிர்க்க முடியாத கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் சுமிதா. இவரது கால்ஷீட்டுகாக தயாரிப்பாளர்கள் காத்து கிடந்த காலம் இருந்தது. சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே 1996-ல் தற்கொலை செய்து கொண்டு பட உலகை அதிர வைத்தார். சில்க் சுமிதாவின் வாழ்க்கை 2011-ல் மிலன் இயக்கத்தில் இந்தியில் 'த டர்ட்டி பிக்சர்' என்ற பெயரில் சினிமா படமாக தயாராகி வெளியானது. இதில் சில்க் சுமிதா வேடத்தில் நடித்த வித்யாபாலன் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். தற்போது சில்க் சுமிதா வாழ்க்கை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஏற்பாடுகள் நடக்கிறது. முதல் பாகத்தை எடுத்த பிரபல இந்தி பட அதிபர் ஏக்தா கபூர் 2-ம் பாகத்தையும் தயாரிக்கிறார். 2-ம் பாகத்தில் சில்க் சுமிதாவின் இளம் வயது வாழ்க்கை சம்பவங்கள் இடம்பெறுவ...
தன்னைத் தானே திருமணம் செய்துக் கொண்ட பிரபல சீரியல் நடிகை !

தன்னைத் தானே திருமணம் செய்துக் கொண்ட பிரபல சீரியல் நடிகை !

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தன்னைத் தானே திருமணம் செய்துகொள்வது என்பது சமீபகாலமாக டிரெண்டாகி வருகிறது. கடந்த ஜூன் மாதம் குஜராத் மாநிலம் பரோடா பகுதியைச் சேர்ந்த ஷாமா பிந்து என்கிற 24 வயது பெண் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டது மட்டுமின்றி ஹனிமூன் சென்றும் அதிர்ச்சி ஏற்படுத்தினார். இந்நிலையில், அதேபோல் மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்தி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் கனிஷ்கா சோனி. குறிப்பாக இவர் நடித்த தியா அவுர் பாத்தி ஹம் என்கிற சீரியல் தமிழில் என் கணவன் என் தோழன் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. நடிகை கனிஷ்கா தற்போது தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் கழுத்தில் தாலி மற்றும் நெற்றியில் குங்குமத்துடன் வீடியோ வெளியிட்ட அவர் தான் சுயநினைவோடு தான் இந்த முடிவை எடுத்ததாக கூறியிருந்த...
முறைகேடான பத்திர பதிவால் ரூ.165 கோடி இழப்பு- லஞ்ச ஒழிப்புதுறை விசாரணை நடத்த மக்கள் நீதி மய்யம் கோரிக்கை !

முறைகேடான பத்திர பதிவால் ரூ.165 கோடி இழப்பு- லஞ்ச ஒழிப்புதுறை விசாரணை நடத்த மக்கள் நீதி மய்யம் கோரிக்கை !

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெயிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- புதிய விமான நிலையம் அமையவுள்ள பரந்தூர், நெல்வாய் கிராமங்களில் நிலத்தின் வழிகாட்டு மதிப்பை பலமடங்கு ஏற்றி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்ததன் மூலம் அரசுக்கு ரூ.165 கோடி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள ஆதாரங்கள் பத்திரப்பதிவுத்துறையின் நம்பகத்தன்மையைக் குலைப்பதாக உள்ளது. தனியார் நிறுவனத்திடமுள்ள 73 ஏக்கர் நிலத்தின் சிறுபகுதியை (117.5 செண்ட்) கூடுதல் விலைக்கு பதிவு செய்வதன் மூலம், புதிய விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தப்படும். சமயத்தில் எஞ்சியுள்ள பெரும்பாலான நிலத்திற்கு கூடுதல் இழப்பீடு பெறுவதற்காகவே இந்த முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக அந்த இயக்கம் தெரிவித்துள்ளது. சர்வே எண்கள் குறிப்பிடாமல் பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களைக் குறிப்பிட்டு இந்த நிலத்தைப் பதிவுசெய...
முதல்வர் ஸ்டாலின் செப்டம்பர் 3ம் தேதி கேரளா பயணம்!

முதல்வர் ஸ்டாலின் செப்டம்பர் 3ம் தேதி கேரளா பயணம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான் நிகோபார் ஆகியவை கொண்டது தென் மண்டல கவுன்சில். இதற்கிடையே, திருவனந்தபுரத்தில் அடுத்த மாதம் 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில், செப்டம்பர் மாதம் 3-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். திருவனந்தபுரத்தில் நடைபெறும் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்....
ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட் எடுப்பது முக்கியம்: இந்திய கேப்டன் கே.எல்.ராகுல் !

ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட் எடுப்பது முக்கியம்: இந்திய கேப்டன் கே.எல்.ராகுல் !

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அந்நாட்டின் ஹராரே நகரில் நடைபெற்ற முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் கே.எல்.ராகுல், ஸ்விங் மற்றும் வேகப் பந்து வீச்சுக்கு சாதமாக ஆடுகளம் இருந்தது என்றார். இந்திய பந்து வீச்சாளர்கள் சரியான முறையில் பந்து வீசியதை பார்க்க சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட்டுகளை வீழ்த்துவது முக்கியமானது என்று அவர் தெரிவித்தார். நாங்கள் நிறைய கிரிக்கெட் விளையாடுகிறோம், காயங்கள் அதன் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். நான் களத்தில் இருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். விளையாட்டிலிருந்து விலகி இருப்பது கடினம் என்றும் அவர் கூறினார். நாங்கள் இந்...
கவர்ச்சி உடையில் ராஷி கண்ணா.. வைரலாகும் புகைப்படம்!

கவர்ச்சி உடையில் ராஷி கண்ணா.. வைரலாகும் புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தமிழில் இமைக்கா நொடிகள், அயோக்யா, அடங்க மறு, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருசிற்றம்பலம் ஆகிய படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா. தற்போது கார்த்தியுடன் சர்தார் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷி கண்ணா தற்போது வெள்ளை நிற உடையில் புதிய கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் அனைவரின் கவனத்தை ஈர்த்து லைக்குகளை குவித்து வருகிறது. https://twitter.com/RaashiiKhanna_/status/1560562533617901568?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1560562533617901568%7Ctwgr%5Ecaed60a69da77bdd7827d298fb6f70ecc9a46c40%7Ctwcon%5Es1_c10&ref_url=http%3A%2F%2Fcmsadmin.maalaimalar.com%2F...
வைரலாகும் “சோழா சோழா” பாடல் – பொன்னியின் செல்வன்!

வைரலாகும் “சோழா சோழா” பாடல் – பொன்னியின் செல்வன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்"பொன்னியின் செல்வன்". இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின. முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் முதல் பாடல் "பொன்னி நதி" அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின்னர் இப்படத்தின் இரண்டாவது பாடல் ஆகஸ்ட் 19-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில், அறிவித்தபடி "பொன்னியின் செல்வன்" படத்தின் இரண்டாம் பாடலான சோழா சோழா பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் த...
டெல்லி துணை முதல் மந்திரி மீது சிபிஐ வழக்குப்பதிவு  !

டெல்லி துணை முதல் மந்திரி மீது சிபிஐ வழக்குப்பதிவு !

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
டெல்லியில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதல் மந்திரியாக மணீஷ் சிசோடியா செயல்பட்டு வருகிறார். மணீஷ் சிசோடியா வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பதியப்பட்ட வழக்கில் மணீஷ் சிசோடியாவின் வீடு உள்பட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில், டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதிய மதுக்கொள்கை முறைகேடு புகாரில் டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 16 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. துணை முதல் மந்திரி வீட்டில் சோதனை நடத்தப்பட்டதற்கு முதல் மந்திரி கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்....