சனிக்கிழமை, ஜூலை 11
Shadow

Author: Kodanki

முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய திமிங்கல விமானம்!

முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய திமிங்கல விமானம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  நெதர்லாந்து நாட்டை தலைமையிடமாகக் கொண்டு ஏர்பஸ் விமானம் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பயணிகள் விமானம், சரக்கு விமானங்களையும் தயாரித்து வருகிறது. இந்நிலையில், பெரிய ரக பொருட்களைச் சரக்கு விமானத்தில் ஏற்றிச் செல்வதற்கு வசதியாக, திமிங்கல வடிவில், சூப்பர் டிரான்ஸ்போர்ட்டர் எனும் "பெலுகா" A300-608ST என்ற புதிய சரக்கு விமானத்தை, 1995 ஆம் ஆண்டில் ஏர்பஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த சரக்கு விமானத்தில் ஓரே நேரத்தில் 47 ஆயிரம் கிலோ எடையிலான சரக்குகளை ஏற்றிச் செல்லும் திறன் உடையது.இந்நிலையில் இந்த சரக்கு விமானம் முதல் முறையாகச் சென்னை விமான நிலையத்திற்கு இன்று வந்தது. இதுகுறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில்,"ஏர்பஸ் பெலுகா சரக்கு விமானம், குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து, சென்னைக்கு இன்று காலை வந்தது.   விமானத்திற்கு எரிபெ...
இயக்குனர் ஷங்கருடன் இணையும் ஹிருத்திக் ரோஷன்-ராம்சரண்!

இயக்குனர் ஷங்கருடன் இணையும் ஹிருத்திக் ரோஷன்-ராம்சரண்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் ஷங்கர். சமீபத்தில், 'இந்தியன்-2' படம் இயக்குவதாக ஷங்கர் அறிவித்து, படப்பிடிப்பு பணிகளும் நடந்தன. ஆனால் பல்வேறு சிக்கல்கள் காரணமாக அந்த படத்தின் படப்பிடிப்பு நிலுவையில் இருக்கிறது. இதற்கிடையில் தெலுங்கில் ராம் சரணுடன் ஒரு படம், இந்தியில் ரன்வீர் சிங்குடன் ஒரு படம் என ஷங்கர் 'பிஸி'யாக இருக்கிறார். இந்த படங்களை தொடர்ந்து 'இந்தியன்-2' படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது. ஷங்கருக்கு, நீருக்கடியில் அறிவியல் கலந்த ஒரு படத்தை இயக்குவது என்பது கனவு. இதற்கான முன்னோட்டமாக தான் 'எந்திரன்' படத்தை அவர் இயக்கினார். தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு தனது கனவு படத்தை இயக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் இந்தி சினிமா உலகின் முன்னணி நடிகர...
விடிய விடிய நடைபெற்ற நெய்தல் கலைவிழாவில் பங்கேற்ற கனிமொழி எம்.பி –  தூத்துக்கு!

விடிய விடிய நடைபெற்ற நெய்தல் கலைவிழாவில் பங்கேற்ற கனிமொழி எம்.பி – தூத்துக்கு!

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
தூத்துக்குடியில் தமிழர்களின் கலை,மண் சார்ந்த வாழ்வியல் முறை, பாரம்பரிய உணவு வகைகளை நினைவு கூறும் விதமாக கனிமொழி எம்.பி. முன்னெடுப்பில் நெய்தல் கலை விழா கடந்த 7-ந் தேதி மாலை வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் தொடங்கியது. நேற்று மாலை சக்கை குச்சி ஆட்டம், கிராமிய கலை நிகழ்ச்சி, கலை மாமணி முத்துலட்சுமி வில்லுப்பாட்டு, துடுப்பாட்டம், சிலம்பாட்டம்,பறையாட்டம், கலை நிகழ்ச்சிகள், திரைப்பட புகழ் செந்தில்-ராஜலட்சுமி குழுவினரின் இசை நிகழ்ச்சிகள், புரிசை துரைசாமி கண்ணப்பத் தம்பிராயன் கூத்து நிகழ்ச்சிகள் என இரவு 2 மணி வரை நடைபெற்றது. இன்று அதிகாலை விடிய விடிய நடைபெற்றதால் அதனை காண பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்றைய நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப்பட புகழ் ராஜலட்சுமி-செந்தில் தமிழக அரசு பெண்களுக்கு பேருந்தில் இலவச பயண சலுகை வழங்குவது போல் கலைஞர்களுக்கும் பேருந்து பயண சலுகை வழங்க வேண்டும் என்று கனிமொழி...
டாஸ் வென்ற இங்கிலாந்து – இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டி!

டாஸ் வென்ற இங்கிலாந்து – இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டி!

HOME SLIDER, NEWS, sports, சினி நிகழ்வுகள், விளையாட்டு செய்திகள்
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 3 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடத்தப்படுகின்றன. சவுத்தம்டனில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது டி20 போட்டியில் 49 ரன் வித்தியாசத்திலும் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி இன்று நாட்டிங்காமில் நடக்கிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் அய்யர், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான். இங்கிலாந்து அணி: ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் (கேப்டன் ), டேவிட் மாலன், பிலிப் சால்ட், மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டோன...
லைகாவின் ‘பொன்னியின் செல்வன்’ டீசர் வெளியீடு!

லைகாவின் ‘பொன்னியின் செல்வன்’ டீசர் வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘மக்கள் திலகம்’ எம்ஜிஆர் மற்றும் இயக்குநர் மணிரத்னத்தின் கனவு படைப்பான அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல், தயாரிப்பாளர் சுபாஷ்கரனின் லைகா நிறுவனம் என்ற முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்களிப்பு இல்லாமல், உருவாக சாத்தியமேயில்லை என்பது இப்படத்தின் டீஸர் மூலம் தெரியவருகிறது. 'பாகுபலி' படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் ரசிகர்களிடம் இது போன்ற வரலாற்று கதைகள் தமிழ் மொழியில் வெளியாகாதா..? என்ற எண்ணம் ஏற்பட்டது. அதிலும் அமரர் கல்கி உலகம் போற்றும் சோழ சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ராஜ ராஜ சோழன் பற்றிய வரலாற்றை உரிய கல்வெட்டு ஆதாரங்களுடன் 'பொன்னியின் செல்வன்' என்ற நாவலாக படைத்திருக்கிறார். இந்நிலையில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் திரைப்படங்களை தயாரித்து, அதனை சர்வதேச அளவிலான தமிழர்களுக்கும், ரசிகர்களுக்கும் வழங்க வேண்டும் என்பதில் அலாதியான பெருவிருப்பம் கொண்டு தயாரிப்பாளர் சுபாஷ...
யானை பட மேகிங் வீடியோ!

யானை பட மேகிங் வீடியோ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருந்த படம் யானை. இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்க, பிரகாஷ் ராஜ், ராதிகா, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்ட விதங்களை தொகுத்து இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு மேக்கிங் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.   https://youtu.be/gNp1Q426uNw...
இரவின் நிழல் படம் வெளி வருவதில் சிக்கல் !

இரவின் நிழல் படம் வெளி வருவதில் சிக்கல் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள 'இரவின் நிழல்' திரைப்படம் வருகிற 15-ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 'இரவின் நிழல்' படத்தை வெளியிட தடை விதிக்க கோரி பாஸ்கர் ராவ் என்பவர் வணிக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஒளிப்பதிவு சாதனங்களுக்கான 25 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் வாடகை பாக்கியை செலுத்தாமல் பட வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த வணிக நீதிமன்றம், இது தொடர்பாக பதிலளிக்க நடிகர் பார்த்திபன் மற்றும் அவரது மகள் கீர்த்தனா ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது....
லிப்ரா புரொடக்ஷன்ஸ் வி சி ரவீந்திரன் தயாரிப்பில் ‘விடியும் வரை காத்திரு’

லிப்ரா புரொடக்ஷன்ஸ் வி சி ரவீந்திரன் தயாரிப்பில் ‘விடியும் வரை காத்திரு’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  லிப்ரா புரொடக்ஷன்ஸ் வி சி ரவீந்திரன் தயாரிப்பில், சஜி சலீம் இயக்கத்தில் விதார்த், விக்ராந்த், கார்த்திக் குமார், வருண் நடிக்கும் 'விடியும் வரை காத்திரு' தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லிப்ரா புரொடக்ஷன்ஸ் வி சி ரவீந்திரன் தயாரிப்பில், முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் புகழ் இயக்குநர் ராம்குமாரிடம் துணை இயக்குநராக பணியாற்றிய சஜி சலீம் இயக்கத்தில், விதார்த், விக்ராந்த், கார்த்திக் குமார், வருண் உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படத்திற்கு 'விடியும் வரை காத்திரு' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. படத்தின் முதன்மை கதாபாத்திரங்களாக விதார்த், விக்ராந்த், கார்த்திக் குமார், வருண், சந்திரன், மஹாலக்ஷ்மி ஷங்கர், குவின்சி, வலினா பிரான்சிஸ், நிம்மி இம்மானுவேல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தை பற்றி பேசிய ரவீந்திரன், ஒரு நாள் இரவில் நடக்கும் முழு நீள திரில்லர் படமாக 'விடிய...
குலு குலு  படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

குலு குலு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  'மேயாதமான்', 'ஆடை' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் இயக்கியிருக்கும் படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இப்படத்திற்கு 'குலு குலு' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.   இவர்களுடன் பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, 'லொள்ளு சபா' மாறன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இதனை சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ராஜ் நாராயணன் தயாரித்திருக்கிறார்....
விம்பிள்டன் டென்னிஸ் – இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்!

விம்பிள்டன் டென்னிஸ் – இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இங்கிலாந்தின் கேமரூன் நூரியுடன் மோதினார். இதில் முதல் செட்டை கேமரூன் நுரி 6-2 என கைப்பற்றினார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ஜோகோவிச் அதிரடியாக ஆடி 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் அடுத்த 3 சுற்றுகளை வென்றார். இதன்மூலம் ஜோகோவிச் 8-வது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் உலகின் 2-ம் நிலை வீரரான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரபேல் நடால், ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோசுடன் மோத இருந்தார். ஆனால், வயிற்று தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக நடால் அரையிறுதியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, விம்பிள்டன் இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச், நிக் கிர்கியோஸ் ஆகியோர் மோதுகின்றனர்....