ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 12
Shadow

Author: Kodanki

அரவிந்த் சாமியின் கள்ளபார்ட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அரவிந்த் சாமியின் கள்ளபார்ட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தமிழில் முன்னணி நடிகராக திகழும் அரவிந்த் சாமி, தளபதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ரோஜா, என் சுவாசக்காற்றே, பம்பாய் போன்ற படங்கள் மூலம் ரசிகர் மத்தியில் நீங்கா இடம் பிடித்த இவர், சினிமாவில் இருந்து சிலகாலமாக விலகி இருந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு மணிரத்தினத்தின் ‘கடல்' படத்தின் மூலம் மீண்டும் அரவிந்த் சாமி நடிக்கத் தொடங்கினார். இவர் நடித்துள்ள 'ரெண்டகம்', 'சதுரங்க வேட்டை 2' போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. தற்போது, ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த் சாமி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘கள்ளபார்ட்'. இப்படத்தில் ரெஜினா, ஆனந்த்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மூவிங் ஃபிரேம் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்தப் படத்துக்கு, அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இ...
அட்லீ-ஷாருக்கான் படத்தின் புதிய அப்டேட்!

அட்லீ-ஷாருக்கான் படத்தின் புதிய அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரானார். தற்போது அட்லீ பாலிவுட் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதன் மூலம் பாலிவுட் திரையுலகில் அட்லீ அறிமுகமாகிறார். இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அட்லீ இயக்கிவரும் ஷாருக்கான் படத்தின் தலைப்பு பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு 'ஜவான்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் டைட்டிலுடன் கூடிய ஒரு டீசரை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது....
வைரலாகும் எஸ்.ஜே.சூர்யா பட டிரைலர்!

வைரலாகும் எஸ்.ஜே.சூர்யா பட டிரைலர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள படம் ‘பொம்மை’. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி இருக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் 'பொம்மை' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விறுவிறுப்பாக இடம்பெற்றிருக்கும் இந்த டிரைலர் தற்போது வைரலாகி வருகிறது....
IAS தேர்வில் தமிழக அளவில் 3ம் இடம் பிடித்த வாலிபர் சென்னையில் சி.என்.இராமமூர்த்தியிடம் வாழ்த்து பெற்றார்!

IAS தேர்வில் தமிழக அளவில் 3ம் இடம் பிடித்த வாலிபர் சென்னையில் சி.என்.இராமமூர்த்தியிடம் வாழ்த்து பெற்றார்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
IAS தேர்வில் தமிழக அளவில் 3ம் இடம் பிடித்த வாலிபர் சென்னையில் சி.என்.இராமமூர்த்தியிடம் வாழ்த்து பெற்றார்! சமீபத்தில் வெளியான UPSC தேர்வு முடிவுகளில் அகில இந்திய அளவில் 87வது இடத்திலும், தமிழக அளவில் 3வது இடத்தை பிடித்தவர் சென்னையை சேர்ந்த பொறியாளர் சிவானந்தம் IAS . இவர் சென்னையில் உள்ள வன்னியர் கூட்டமைப்பு மற்றும் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சியின் நிறுவன தலைவர் சி.என்.இராமமூர்த்தி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது IAS தேர்வில் வெற்றி பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்ததற்கு சால்வை அணிவித்து சி.என்.இராமமூர்த்தி வாழ்த்தினார்....

பரத்-வாணி போஜன் நடிக்கும் “மிரள்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *Axess Film Factory G டில்லி பாபு வழங்கும்* *பரத்-வாணி போஜன் நடிக்கும் “மிரள்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார் !* Axess Film Factory G டில்லி பாபு தயாரிப்பில், M சக்திவேல் இயக்கத்தில் பரத்-வாணி போஜன் நடித்துள்ள “மிரள்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். தமிழ் சினிமாவில் நல்ல தரமான உள்ளடக்கம் சார்ந்த திரைப்படங்களைத் தயாரிக்கும் மிகச்சிலரில் ஒருவர் Axess Film Factory தயாரிப்பாளர் G டில்லி பாபு. அவரது தயாரிப்பில் வெளியான ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர் என பல திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸ் வெற்றிப் படங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது தன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக ‘மிரள்’ என்ற பெயரில் அடுத்த ...
The Massive Combo Boyapati RAPO film launched with Pooja ceremony

The Massive Combo Boyapati RAPO film launched with Pooja ceremony

CINI NEWS, HOME SLIDER, MOVIES
  The Massive Combo BoyapatiRAPO film launched with Pooja ceremony Boyapti Sreenu one of the most successful directors in Telugu who has directed blockbuster films like Bhadra, Tulasi, Simha, Legend, Sarrainodu, Jaya Janaki Nayaka, and most recently Akhanda. The industry breathed a sigh of relief when 'Akhanda' became a massive blockbuster and was hailed by the audience as the theatres regained their former glory. Boyapati Sreenu has now started his upcoming Pan-Indian film with Ustaad Ram Pothineni. This movie is going 10th film for the blockbuster director. After two back to back, ace producer Srinivasaa Chhitturi is now producing this film tentatively titled 'BoyapatiRAPO' under Srinivasaa Silver Screens banner. It's 9th film for the production house. Pavan Kumar is pr...
இயக்குநர் போயபத்தி ஸ்ரீனு, ஹீரோ ராம் பொத்தினேனி இணையும் படம்!

இயக்குநர் போயபத்தி ஸ்ரீனு, ஹீரோ ராம் பொத்தினேனி இணையும் படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இயக்குநர் போயபத்தி ஸ்ரீனு, ஹீரோ ராம் பொத்தினேனி இணையும் படம், இன்று பூஜையுடன் துவங்கியது ! பத்ரா, துளசி, சிம்ஹா, லெஜண்ட், சரைனோடு, ஜெய ஜானகி நாயக, மற்றும் சமீபத்தில் அகண்டா போன்ற பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய தென்னிந்திய சினிமாவின் வெற்றிகரமான இயக்குனர்களில் ஒருவர் போயபத்தி ஸ்ரீனு. அவர் இயக்கத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு 'அகண்டா' மிகப்பெரிய பிளாக்பஸ்டராக, திரையரங்குகள் மீண்டும் பழைய பொலிவை பெற்றது. ரசிகர்களின் ஆராவார வரவேற்பில், திரைத்துறையினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். போயபத்தி ஸ்ரீனு அடுத்ததாக, உஸ்தாத் ராம் பொத்தினேனியுடன் இணைந்து தனது அடுத்த பான்-இந்தியன் படத்தை தொடங்கியுள்ளார். பிளாக்பஸ்டர் இயக்குநர் போயபத்தி ஸ்ரீனுவின் 10வது படமாக இப்படம் உருவாகிறது. இரண்டு அடுதடுத்த வெற்றிக்கு பிறகு, பிரபல தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சிட்தூரி Srinivasaa Silver Screens சார்பில் இப்படத்த...
மர்மமான விசாரணை திகில் திரைப்படமாக உருவாகும் 13

மர்மமான விசாரணை திகில் திரைப்படமாக உருவாகும் 13

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
Madras Studios நிறுவனம், Anshu Prabhakar Films உடன் இணைந்து தயாரிக்க, S நந்த கோபால் வழங்கும், GV பிரகாஷ் குமார் - கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் “13” திரைப்பட அறிவிப்பு ! ஜி.வி.பிரகாஷ் குமார் & கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து சமீபத்தில் வெளியான ‘செல்ஃபி’ படத்தில் பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்தினர். இந்த வெற்றி கூட்டணி இப்போது '13' என்ற தலைப்பில் மற்றொரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுகிறார்கள், இப்படத்தில் இருவரும் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் S நந்த கோபால், Madras Studios நிறுவனம் சார்பில், Anshu Prabhakar Films உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார். ஒரு மர்மமான விசாரணை திகில் திரைப்படமாக, உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் K விவேக் இயக்குகிறார். நடிகர்கள் குழுவில் ஆதியா, பவ்யா, ஐஸ்வர்யா,ஆதித்யா கதிர் உடன் மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர். சித்து ...
நான் நல்லவனாக வலம் வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒருவர் கார்த்திக் சுப்புராஜ் – நடிகர் எஸ் ஜே சூர்யா

நான் நல்லவனாக வலம் வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒருவர் கார்த்திக் சுப்புராஜ் – நடிகர் எஸ் ஜே சூர்யா

CINI NEWS, HOME SLIDER, MOVIES
  இயக்குநர் கிரண்ராஜ் K இயக்கத்தில், ரக்‌ஷித் ஷெட்டி நடித்துள்ள திரைப்படம் '777 சார்லி' 'சார்லி' என்ற நாய்க்குட்டி மற்றும் அதன் நண்பன் தர்மாவின் அன்பான கதையை விவரிக்கும் சாகசம் நிறைந்த நகைச்சுவை திரைப்படமே 777 சார்லி. அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, ஜூன் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர், பத்திரிக்கை ஊடக நண்பர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வினில் 'அவனே ஸ்ரீமன்நாராயணா' என்ற பன்மொழி திரைப்படத்தில் கடைசியாக நடித்த ரக்ஷித், தற்போது தனது தயாரிப்பு நிறுவனமான பரம்வா ஸ்டுடியோஸின் சார்பில் 777 சார்லியை தயாரித்துள்ளதோடு தர்மாவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சக்தி பிலிம்ஸ், சக்தி வேலன் கூறியதாவது கார்த்திக் சுப்ராஜ் இந்த படத்தை எனக்கு போட்டு காட்டி, இதை வெளியிட வேண்டும்...
துப்பாக்கி  கலாச்சாரத்திற்கு எதிராக கடுமையான சட்டத்தை அமல்படுத்த வேண்டும்-முன்னாள் அதிபர் டிரம்ப் கோரிக்கை!

துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிராக கடுமையான சட்டத்தை அமல்படுத்த வேண்டும்-முன்னாள் அதிபர் டிரம்ப் கோரிக்கை!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப்பள்ளிக்குள் கடந்த மே 25-ஆம் தேதி துப்பாக்கியுடன் நுழந்த 18 வயது இளைஞன் பள்ளிக்குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினான். இந்த துப்பாக்கிச்சூட்டில் 19 பள்ளி குழந்தைகள், 2 ஆசிரியைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய சல்வடொர் ரமொஸ் என்ற இளைஞனை போலீசார் சுட்டு வீழ்த்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாகி கலாச்சாரத்திற்கு எதிராக கடுமையான சட்டத்தை அமல்படுத்தக்கோரி பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இதையடுத்து பல்வேறு இடங்களில் போராட்டங்களும் வெடித்துள்ளன. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிராக நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இந்நிலையில் இது போன்ற துப்பாக்கிசூடு சம்பவங்கள் இனி நட...