ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 12
Shadow

Author: Kodanki

“பத்தலே, பத்தலே” -முதல் இடத்தை தக்க வைத்த கமல்!

“பத்தலே, பத்தலே” -முதல் இடத்தை தக்க வைத்த கமல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் என்ற திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது. அந்த படத்தில் அனிருத் இசையில் கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள “பத்தலே, பத்தலே” என்ற படலானது கடந்த 11 ஆம் தேதி இரவு வெளியானது. இந்தபாடலில், மத்திய அரசை விமர்சித்து வரிகள் உள்ளதாகவும், சாதி ரீதியான பிரச்சினைகளை தூண்டும் வகையிலும் வரிகள் இடம் பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்தது. எனினும் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், தற்போது இந்த பாடல் இரண்டே நாளில் 2 கோடி பார்வைகளை கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. பாடல் வெளியானதிலிருந்து தற்போது வரை இப்பாடல் யூடியூப்பில் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது....
பிரபு தேவா தளபதி 66′ படத்தில் இணைந்தார்!

பிரபு தேவா தளபதி 66′ படத்தில் இணைந்தார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். ‘தளபதி 66’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. தமன் இசையமைக்கும் இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இதில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படம் விஜய்யின் ஆரம்பக் கட்டத்தில் வெளியான பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற குடும்ப பின்னணி படமாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில் 2ம் கட்ட படப்பிடிப்பு  ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக ஐதராபாத் சென்ற விஜய் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தில் நடிகர் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ்,...
நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா!

நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
அடுத்த வார தொடக்கத்தில் நடைபெற உள்ள கேன்ஸ் 2022 திரைப்பட திருவிழாவில், ஏஆர் ரஹ்மான், ஆர் மாதவன், நவாசுதீன் சித்திக், நயன்தாரா, தமன்னா, சேகர் கபூர் உள்பட பலருடன் பாலிவுட் நடிகர் அக்சய்குமார் இணைந்து பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அக்சய்குமார் கொரோனா பரிசோதனை செய்திருந்தார். இதன் முடிவில் பாசிட்டிவ் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பதை தவிர்க்க உள்ளதாக தமது டுவிட்டர் பதிவில் அவர் கூறியுள்ளார். நேற்று காலையில், நான் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் எனக்கு தொற்று இருப்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி, நான் உடனடியாக என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். நான் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளேன், என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தங்களைப் பரிசோதித்து பார்த்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிற...
மர்மமாக இறந்த நடிகையின் படுக்கை அறையில் சிக்கிய போதை பொருட்கள்- கணவர் கைது!

மர்மமாக இறந்த நடிகையின் படுக்கை அறையில் சிக்கிய போதை பொருட்கள்- கணவர் கைது!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் சகானா (வயது 20). மாடல் அழகி. சகானா மாடலிங்கோடு மலையாள படங்களிலும் நடித்து வந்தார். கடந்த ஆண்டு இவர் சஜாத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். முதலில் இவர்களின் திருமணத்தை ஏற்க மறுத்த சகானாவின் குடும்பத்தினர், பின்னர் அதனை ஏற்று கொண்டனர். அதன்பின்பு அவர்கள் அடிக்கடி சகானா வீட்டுக்கு சென்று வந்தனர். சகானா நடிக்க வந்த பின்பு கோழிக்கோட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கணவருடன் தங்கி இருந்தார். நேற்று காலை இவர்களின் வீட்டில் இருந்து அழுகுரல் கேட்டது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு சென்றனர். அப்போது சகானா, அவரது கணவரின் மடியில் பிணமாக கிடந்தார். அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சகானாவின் உறவினர்களும் தகவல் அறிந்து அங்கு சென்றனர். அவர்கள் சகானாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரது கணவர் தான் சகானாவை கொல...
அமலாக்கத்துறை மோகன்லாலுக்கு சம்மன் !

அமலாக்கத்துறை மோகன்லாலுக்கு சம்மன் !

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
மோன்சன் மாவுங்கல் நிறுவனத்திற்கு சென்று வந்த நடிகர் மோகன்லாலிடம் அமலாக்க துறையினர் விசாரணை நடத்த உள்ளனர்! கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் மோன்சன் மாவுங்கல். மோன்சன் புராதன பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது நிறுவனத்திற்கு சினிமா பிரபலங்கள் பலரும் வந்து சென்றனர். இவரிடம் பழங்கால புராதன பொருள் வாங்கிய ஒருவர், மோன்சன் மாவுங்கல் தன்னை மோசடி செய்து விட்டதாக புகார் கூறினார். இது தொடர்பாக போலீசார் மோன்சன் மாவுங்கல் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதற்கிடையே மோன்சன் மாவுங்கல் பண மோசடியில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக மத்திய அமலாக்க துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். மோன்சன் மாவுங்கல் நிறுவனத்திற்கு வந்து சென்ற பிரபலங்கள் மற்றும் அவரிடம் பழங்கால பொருட்கள் வாங்கியவர்களிடம் அமலாக்க துறையினர் விசாரணை நடத்த உள்ளனர். அந்த வகையி...
அடுத்த படத்திற்கு தயாராகும் ஜீவா!

அடுத்த படத்திற்கு தயாராகும் ஜீவா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜீவா நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் 'களத்தில் சந்திப்போம்'. இப்படத்தை ராஜசேகர் இயக்கி இருந்தார். இந்த கூட்டணி தற்போது புதிய படம் மூலம் இணைய இருக்கிறது. படப்பிடிப்பிற்கான பணிகள் மிக மும்முரமாக நடைப்பெற்று வருவதாகவும், 2, 3 மாதங்களில் படப்பிடிப்பு முடிவடைந்து, படம் திரைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. MIK புரொடக்ஷன்ஸும் 7 Miles per Second நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கதாநாயகி மற்றும் பிற முக்கியப் பாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்றுகிறது. ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்....
சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டி- தமிழக அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு!

சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டி- தமிழக அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
ஏ.டி.பி. டென்னிஸ் போட்டி சென்னையில் 1997ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தெற்கு ஆசியாவில் நடைபெற்று வந்த ஒரே ஏ.டி.பி. போட்டி இதுவாகும். 1997 முதல் 2001 வரை கோல்டு பிளேக் ஓபன் என்ற பெயரிலும், 2002 முதல் 2004 வரை டாடன் ஓபன், 2005 முதல் 2009 வரை சென்னை ஓபன், 2010 முதல் 2017 வரை ஏர்செல் சென்னை ஓபன் என்ற பெயரிலும் இந்தப் போட்டி நடைபெற்றது. 21 ஆண்டுகள் ஏ.டி.பி. ஆண்கள் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. 2018ம் ஆண்டு இந்த போட்டி மகாராஷ்டிர மாநிலம் புனேக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் முதல் முறையாக உலக மகளிர் டென்னிஸ் போட்டியை சென்னையில் இந்த ஆண்டு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. டபிள்யு.டி.ஏ. என அழைக்கப்படும் உலக மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெறும் தேதியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று அறிவித்தார். இது தொடர்பாக சென்ன...
சமுத்திரக்கனி நடிகர் அஜித்  படத்தில் இணைந்தார்!

சமுத்திரக்கனி நடிகர் அஜித் படத்தில் இணைந்தார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையில் இந்த படத்தின் பாடல்கள் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்திற்காக இரண்டு பாடல்களுக்கு ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தில் நிரவ் ஷா ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். கல்லூரி பேராசிரியராக அஜித் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகின. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் மவுண்ட் ரோடு போன்று செட் ஒன்றும் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் புதிய தகவல் வெளியாகி உள்ளது. அஜித்தின் 'ஏகே 61' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிப்பதாக கூறப்படுகிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட...
ரசிகர்களுடன் படம் பார்த்த சிவகார்த்திகேயன்.. வைரலாகும் வீடியோ!

ரசிகர்களுடன் படம் பார்த்த சிவகார்த்திகேயன்.. வைரலாகும் வீடியோ!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இதில் சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, சூரி, பால சரவணன், சிவாங்கி உள்ளிட்ட நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். 'டான்' திரைப்படம் இன்று (13.05.2022) அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அதிகாலை முதலே தியேட்டர் முன் குவிந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும் மேளதாளங்கள் முழங்க ஆடிப்பாடி கொண்டாடினர். இப்படத்தை படக்குழு ரசிகர்களுடன் திரையரங்குகளில் பார்த்து ரசித்துள்ளனர். அதன்படி நடிகர் சிவ...
இலங்கை புதிய அரசுக்கு இந்தியா ஆதரவு!

இலங்கை புதிய அரசுக்கு இந்தியா ஆதரவு!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
பொருளாதார நெருக்கடியால் பெரும் அரசியல் குழப்பத்தில் சிக்கியுள்ள இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நேற்று பதவியேற்றார். புதிய மந்திரிசபை இன்று பதவியேற்க உள்ளது. இலங்கையின் புதிய அரசுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்து உள்ளது. ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாக கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் கூறியுள்ளது. இது தொடர்பாக தூதரகத்தின் டுவிட்டர் தளத்தில், ‘அரசியல் நிலைத்தன்மையை இந்தியா நம்புகிறது. ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் பிரதமராக பதவியேற்றுள்ளதன் அடிப்படையில் ஜனநாயக வழிமுறைகளுக்கு இணங்க உருவாக்கப்பட்ட இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளது’ என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதைப்போல இலங்கை மக்களுக்கான உதவிகள் தொடரும் எனவும் தூதரகம் தெரிவித்து உள்ளது....