திங்கட்கிழமை, ஜூலை 13
Shadow

Author: Kodanki

உக்ரைன் ரஷியா இடையே சமாதான பேச்சுவார்த்தை- இத்தாலி வலியுறுத்தல்!

உக்ரைன் ரஷியா இடையே சமாதான பேச்சுவார்த்தை- இத்தாலி வலியுறுத்தல்!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷியா மற்றும் அந்நாட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ள பெலாரஸ் நாட்டின் மீதும் பொருளாதார வர்த்தக தடைகளை பிரிட்டன் அறிவித்துள்ளது.  1.7 பில்லியன் பவுண்டகள் மதிப்பில் இந்த பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இறக்குமதி வரிகள் அதிகரிப்பு மற்றும் ஏற்றுமதி தடைகள் உள்ளிட்டவை இதில் அடங்கும். இது புதின் போர் நடவடிக்கைகளை பலவீனப்படுத்தும் என்றும்,  உக்ரைன் மக்களுக்கு எதிரான அவரது சட்டவிரோதப் படையெடுப்பை தடுக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றும் சர்வதேச வர்த்தகத்திற்கான இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் ஆன்-மேரி ட்ரெவெல்யன் தெரிவித்தார். ரஷியா-உக்ரைன் போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவரும் வகையில், இரு நாடுகள் இடையே சமாதான பேச்சுவார்த்தை மீண்டும் தொடர எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று ஜி-7 நாடுகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய இத...
பிளஸ்1 பொதுத்தேர்வு நாளை தமிழகத்தில் 3,119 மையங்களில் தொடங்குகிறது!

பிளஸ்1 பொதுத்தேர்வு நாளை தமிழகத்தில் 3,119 மையங்களில் தொடங்குகிறது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த 5ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 6ந் தேதியும் தொடங்கின. கோடை வெயிலின் தாக்கம் இருந்தாலும் மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வு எழுதி வருகிறார்கள். தமிழ் மொழிப் பாடத்தேர்வு நடந்து முடிந்துள்ளன. ஒவ்வொரு தேர்விற்கும் இடைவெளி கொடுக்கப்பட்டு தேர்வுகள் முறையே இந்த மாதம் இறுதி வரை நடைபெறுகிறது. இந்தநிலையில் பிளஸ் 1 பொதுத்தேர்வு நாளை (10 ந் தேதி) தொடங்குகிறது. இந்த தேர்வினை 8 லட்சத்து 83 ஆயிரத்து 884 பேர் எழுதுகிறார்கள். 4 லட்சத்து 33 ஆயிரத்து 684 மாணவர்களும், 4 லட்சத்து 50 ஆயிரத்து 198 மாணவிகளும் எழுத உள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிகளவு தேர்வு எழுத இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் 3,119 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது. 10, 11, 12 ஆகிய மூன்று பொதுத்தேர்வையும் 26 லட்சத்து 76 ஆயிரத்து 675 பேர் எழுதுகிறார்கள். மாற்றுத் திறனாளிகள், சிறைக் க...
ஒருவேளை நான் மர்மமான முறையில் இறந்தால்… எலான் மஸ்க் பரபரப்பு டுவீட்!

ஒருவேளை நான் மர்மமான முறையில் இறந்தால்… எலான் மஸ்க் பரபரப்பு டுவீட்!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க் டுவீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் அவர், ‘நான் ஒருவேளை இறந்துவிட்டால், உங்களை அறிந்ததில் மகிழ்ச்சி’ என பதிவிட்டுள்ளார். இந்த இணையத்தில் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது. இந்த டுவீட்டை பதிவிடுவதற்கு முன்னர் அவர் ரஷிய மொழியில் டுவீட் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் ‘ உக்ரைனின் சர்வாதிகாரி படைகளுக்கு ராணுவ தொலைத்தொடர்பு கருவிகளை எலான் மஸ்க் அளித்து வருகிறார். நீங்கள் என்ன தான் முட்டாள்தனமாக நடந்துகொண்டாலும் நீங்கள் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து உக்ரைனுக்கு எலான் மஸ்க் உதவி செய்வதால் ரஷிய படைகள் அவருக்கு மிரட்டல் விடுத்திருக்க வேண்டும். அதனால் அவர் இறந்துவிடலான் என ட்விட் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைகோள் மூலம் அந்நாட்டிற்கு ப்ராட்...
கே.ஜி.எஃப் பட நடிகர் காலமானார்!

கே.ஜி.எஃப் பட நடிகர் காலமானார்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
பிரபல கன்னட நடிகர் மோகன் ஜுனேஜா. குணசித்திரம் மற்றும் காமெடி வேடங்களில் நடித்து வந்த இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்திப் படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியாகி மெகா ஹிட்டான கே.ஜி.எஃப் சாப்டர் 2 படங்களிலும் இவர் நடித்திருந்தார். சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள மோகன் ஜுனேஜா, சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட மோகன் ஜுனேஜா, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவருடைய இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது. மோகன் ஜுனேஜாவின் மறைவு கன்னட திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவரது மறைவிற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்....
விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண தேதி அறிவிப்பு!

விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது, நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. சமீபத்தில் நயன்தாரா, சமந்தாவை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. நயன் தாராவும் விக்னேஷ் சிவனும் விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், இவர்கள் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர்கள் திருமணம் திருப்பதி கோவிலில் நடைபெற இருக்கிறது. விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இன்று திருமண மண்டபத்தை முன்பதிவு செய்துள்ளார்கள்....
தமிழக முதல்வக்கு தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி வைத்த  கோரிக்கை!

தமிழக முதல்வக்கு தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை!

CINI NEWS, HOME SLIDER
  தமிழக முதலமைச்சராக மாண்புமிகு மு.க. ஸ்டாலின் பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்த நிலையில், பல தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். தேசிய விருது பெற்ற இயக்குனர் திரு. சீனு ராமசாமி அவர்கள், இந்த ஓராண்டு சாதனைக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, இரண்டு கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளார். அதில், ”ஓராண்டு நிறைவை தனது நன்மைகளால் பண்பின் தன்மையினால் நிறைவு செய்திருக்கும் மாண்புமிகு திரு. மு க ஸ்டாலின் அவர்களை நேசிக்கிறேன். இரண்டு கோரிக்கைகள் இதயத்தில் உண்டு, சினிமா ரசனை கல்வியை நமது பாடதிட்டத்தில் இணைக்க வேண்டும். எது உண்மையான சினிமா கலை அதை எப்படி பார்க்க வேண்டுமெனவும் மாணவ பருவத்தில் அவர்களுக்கு கற்றுத் தருதல், உலகின் தலைசிறந்த படங்களின் வழியே பாடப்பிரிவுகள் உண்டாக்க வேண்டும், இது சினிமா தொழில் நுட்பக்கல்வி அல்ல. ரசனையை மேம்படுத்தும் க...
“விசித்திரன்” படத்தை பார்த்துவிட்டு நான் இரண்டு நாட்களாக தூங்கவில்லை – இயக்குனர் ஆர் வி உதயகுமார்.

“விசித்திரன்” படத்தை பார்த்துவிட்டு நான் இரண்டு நாட்களாக தூங்கவில்லை – இயக்குனர் ஆர் வி உதயகுமார்.

CINI NEWS, HOME SLIDER
ஆர் கே சுரேஷ் நடிப்பில் உருவாகி இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் "விசித்திரன்". இப்படம் இயக்குனர்கள் சங்க உறுப்பினர்களுக்கு ப்ரத்யேகமாக திரையிடப்பட்டது. அதன் பிறகு பேசிய இயக்குனர் சீனு ராமசாமி, வழக்கமாக, ஒரு படம் ரிலீஸானால் 15 நாட்களுக்கு பிறகு தான் இயக்குனர் சங்க நிர்வாகி நம்பி அவர்கள் அழைப்பார், அதற்குள் பலர் அந்த திரைப்படத்தை பார்த்திருப்பார்கள். அதன் பின்னர் தான் குறிப்பிட்ட படத்தை இயக்குனர் சங்கத்திற்கு திரையிடுவர். ஆனால், விசித்திரன் படத்தை முதலில் இயக்குனர் சங்கத்தினற்கு திரையிடலாம் என்று ஆர் கே சுரேஷ் சொன்னபோது நான் மிகவும் ஆச்சர்யப்பட்டேன். எப்போதும், படைப்பாளிகளிடம் திரையிடும் படத்தை பற்றி அவர்கள் முதலில் முன் வைப்பது விமர்சனத்தையும், கேள்வியையும் தான். அதன் பிறகு தான் பாராட்டு என்பது கூட. அதனால் நான் எப்போதுமே என் படத்தின் பர்ஸ்ட் காபியை எனது துணை இயக்...
‘போலாமா ஊர்கோலம்’ இசை வெளியீடு!

‘போலாமா ஊர்கோலம்’ இசை வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழகப் பள்ளிகளில் தமிழ் விருப்பப்பாடமா? தமிழை எப்படிப் பாதுகாக்கப் போகிறோம்? - பேரரசு கேள்வி நம்பியவர்களை சினிமா கைவிடாது: இயக்குநர் பேரரசு பேச்சு நேர்காணல் கொடுக்க கட்டணம் வசூலிக்கிறேன்: கே. ராஜன் பேச்சு மூத்த கால்பந்தாட்ட வீரர்கள் 20 பேர் கலந்து கொண்ட வித்தியாசமான திரைப்பட விழா! கிளாசிக்கல் கமர்சியல் படைப்பாக உருவாகியிருக்கும் 'போலாமா ஊர்கோலம்' இசை அமைப்பாளர் ஷமந்த் நாக் இசையில் உருவான 'போலாமா ஊர்கோலம்' படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கஜசிம்ஹா மேக்கர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரபுஜித் தயாரித்திருக்கும் திரைப்படம் ' போலாமா ஊர்கோலம்'. அறிமுக இயக்குநர் நாகராஜ் பாய் துரைலிங்கம் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் நடிகர் பிரபுஜித் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சக்தி மகேந்திரா நடித்திருக்கிறார். இ...
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டிரைவர் ஜமுனா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டிரைவர் ஜமுனா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'டிரைவர் ஜமுனா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. ‘வத்திக்குச்சி’ படத்தை இயக்கிய இயக்குநர் பா. கின்ஸ்லின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் 'ஆடுகளம்', நரேன், ஸ்ரீ ரஞ்சனி, 'ஸ்டான்ட் அப் காமடியன்' அபிஷேக், 'ராஜாராணி' பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். டான் பாலா கலை இயக்கத்தை கவனிக்க, படத்தொகுப்பை ஆர். ராமர் மேற்கொண்டிருக்கிறார். சாலை பயணத்தை மையப்படுத்திய இந்த திரைப்படத்திற்கு ஒலியின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதால், படத்தின் ஒலி வடிவமைப்பை, முன்னணி ...
யசோதா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ!

யசோதா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நடிகை சமந்தா நடிப்பில் தற்போது 'யசோதா' என்ற பான் இந்தியா திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர்கள் ஹரி-ஹரிஷ் இயக்குகிறார்கள். வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'யசோதா' படத்தை சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தனது ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். மணிஷர்மா இசையமைத்துள்ளார். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மார்த்தாண்டா கே வெங்கடேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். யசோதா திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது....