Author: Kodanki
வைரமுத்து வரிகளில் ‘ கலாம் ஆன்தம்’
மறைந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி APJ அப்துல் கலாம் ஐய்யாவின் இரண்டாம் ஆண்டு நினைவாஞ்சலியை முன்னிட்டு 'கலாம் ஆன்தம்' என்ற வீடியோ பாடலை வெளியிடவுள்ளனர். இப்பாடலை 'கவிப்பேரரசு' வைரமுத்து எழுதியுள்ளார். பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க திரு.வசந்த் அவர்கள் இந்த வீடியோ ஆல்பத்தை இயக்கியுள்ளார். இந்த 'கலாம் ஆன்தம்' ஐ 'மார்க் குரூப் ஆப் கம்பனிஸ்' ன் தலைவர் திரு.GRK ரெட்டி தயாரித்துள்ளார். பிரபல பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். அப்துல் கலாம் என்ற மாமனிதருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இப்பாடல் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இப்பாடலின் டியூன் மற்றும் படமாக்கப்பட்ட விடம் சிறப்பாக இருப்பதாயும் கூறப்படுகிறது. தான் இதுவரை எழுதியுள்ள பாடல்களிலேயே இது ஒரு சிறந்த பாடல் எனவும், இந்தியன் அறிய சொத்தாக இருந்த கலாம் ஐயாவுக்காக எழுதும்பொழுகு தான் மிகவும் நெகிழ்ந்து ...
போதை பொருள் கும்பலுடன் தொடர்பு: நடிகர்-நடிகைகளிடம் நாளை விசாரணை
போதை பொருள் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்பட்ட வழக்கில் தெலுங்கு நடிகர் - நடிகைகளிடம் நாளை முதல் விசாரணை நடத்தப்படுகிறது.
ஐதராபாத் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போதை பொருள் கும்பல் சிக்கியது. விசாரணையில் அவர்களுடன் தெலுங்கு நடிகர் - நடிகைகளுக்கு தொடர்பு இருப்பது அம்பலமானது.
அவர்களின் செல்போன் எண்கள் போதை பொருள் கும்பலிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக நடிகர்கள் ரவிதேஜா, நவ்தீப், தருண், நந்து, தனிஷ், சுப்பராஜு, நடிகைகள் சார்மி, முமைத்கான், இயக்குனர் பூரிஜெகனாத், ஒளிப்பதிவாளர் ஷியாம் கே நாயுடு, கலை இயக்குனர் ஜின்னா ஆகியோருக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சிறப்பு விசாரணை குழு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில் நடிகர் - நடிகைகளிடம் விசாரணை நாளை தொடங்குகிறது.
யார் - யார் எந்த தேதியில் ஆஜராக வேண்டும் என்று போலீசார் நேற்ற...
விக்ரம் வேதா முன்னோட்டம்…
https://www.youtube.com/watch?v=GvkP3duDO5w
சவரிக்காடு முன்னோட்ட பாடல்…
https://www.youtube.com/watch?v=4A9NplF78PU
மிக மிக அவசரம்… பெண் போலீசாருக்கு சமர்ப்பிக்கும் இயக்குநர் சுரேஷ் காமாட்சி!
மெரீனாவாகட்டும், நெடுவாசலாகட்டும் தன் உரிமைக்காகவும், மண்ணைக் காக்கவும், வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் போராடும் பெண்களையும், குழந்தைகளையும் ஆண் காவலர்களும் /பெண் காவலர்களும் தங்கள் கடமையின் காரணமாக துரத்தித் துரத்தி தடியால் அடிக்கிறார்கள்.
அவ்வாறு அடிக்கக் கிளம்பிய காவலர்களில் பலர் கிராமம் அல்லது விவசாயக் குடும்ப பின்னணியிலிருந்து வந்தவர்களாக இருக்கக்கூடும்!
மதுக்கடை வேண்டாம் என்று மாரிலடித்து போராட்டம் நடத்தும் தாய்மாரின் கன்னத்தில் 'பளார்...பளார்'என பொதுமக்கள் கண்ணெதிரே அறைகிறார் போலீஸ் உயரதிகாரி ஒருவர்.
அவரின் சேவையைப் பாராட்டி பதவி உயர்வும் கிடைக்கிறது.
அதே இடத்தில் தாய்மார்கள் பலரையும் ஆண்/பெண் போலீஸ் அடித்து விரட்டியது.
அடிவாங்கிய
தாய்மார்களில் அடித்தவர்களின் சொந்தக்காரர்களும் இருந்திருக்கக் கூடும்.
இதில் மறுக்க முடியாத, வீதிக்கு வராத உண்மைகள் நிறைய உண்டு...
தொழில்பண்பு இல்லாதவரா ஸ்ருதிஹாசன்..! வம்புக்கு இழுத்த குஷ்பு..!
சரித்திர பின்னணியில் எடுக்கப்பட்டு மெகா ஹிட் ஆன படம் பாகுபலி. அதன் வெற்றியால் இந்தியா முழுவதும் சரித்திர பின்னணி படங்களுக்கு ஏக மவுசு ஏற்பட்டுள்ளது.
அதன் ஒருபகுதியாகத்தான் சுந்தர்.சி.இயக்கத்தில் தேனான்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ‘சங்கமித்ரா’ என்ற பட அறிவிப்பு வெளியானது.
கேன்ஸ் திரைப்பட விழாவில் இதற்கான ஆரம்ப விழாவை நடத்தினார்கள். இதில் நாயகியாக ஸ்ருதிஹாசன் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதோடு, பட ஆரம்ப விழா நடந்த கேன்ஸ்வரை ஸ்ருதியும் சென்றிருந்தார்.
இதற்கிடையில் திடீரென சங்கமித்ராவில் இருந்து ஸ்ருதி விலகிவிட்டார் என கூறப்பட்டது. பட வேலைகள் எதுவும் தொடங்காதபோது இதுபோன்ற செய்திகளுக்கு பஞ்சம் இருக்காது என்பதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வராததால் திரையுலகினரும் அவரவர் வேலையை பார்த்தனர்.
சமீபத்தில் சென்னை வந்திருந்த ஸ்ருதிஹசன் பலமுறை செய்தியாளர்களை சந்தித்...
சென்னையில் இஸ்ரேல் பட விழா..!
இந்திய இஸ்ரேல் உறவுகள் பலப்படும் விதமாக இந்திய பிரதமர் மோடி சமீபத்தில் இஸ்ரேல் சுற்றுப்பயணம் செய்தார். இதன் விளைவாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
பொழுதுபோக்கு, கலாச்சாரம், தொழில், வர்த்தம் என பல பிரிவுகளில் இஸ்ரேல் நாட்டுடன் இந்தியா புதுப்புது ஒப்பந்தங்களில் செயல்படப்போகிறது.
அதன் ஒருபகுதியாக இஸ்ரேல் திரைப்படத்துறையில் சிறந்த பரிசு பெற்ற திரைப்படங்களை இந்தியாவில் திரையிட முடிவு செய்யப்பட்டது.
இதன்காரணமாக சென்னையில் இஸ்ரேல் திரைப்பட விழா நடைபெற உள்ளது.
இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்புடன் இணைந்து இஸ்ரேல் தூதரகம் இதற்கான ஏற்பாடுகளை செய்து உள்ளது.
பல விருதுகளை பெற்ற அபுலா எக்ஸ்பிரஸ். ஹில் ஸ்டார்ட், மெல்டிங் அவே, ஒயிட்பேந்தர் உட்பட பல படங்கள் திரையிடப்பட உள்ளது.
24ம் தேதி மேக்ஸ் முல்லர் பவனில் இதன் தொடக்க விழா நடைபெறுகிறது. இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் யேல் ...
’கூட்டத்தில் ஒருத்தன்’ மிடில் பெஞ்ச் வர்கத்தை பற்றி பேசும் படம்!
அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூட்டத்தில் ஒருவன்’.. இந்தப்படத்தின் கதாநாயகியாக ப்ரியா ஆனந்த் நடிக்க, படத்திற்கு இசையமைத்துள்ளார் நிவாஸ் கே.பிரசன்னா. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார்.. இவர் முன்னணி தமிழ் பத்திரிகை ஒன்றில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.. சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் துவங்க காரணமாக இருந்தவரும், அதற்கு அகரம் என பெயர் வைத்தவரும் இந்த ஞானவேல் தான்.இவர் இயக்கிய ‘ கூட்டத்தில் ஒருத்தன் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் தாயரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு , நாயகன் அசோக் செல்வன் , நாயகி ப்ரியா ஆனந்த் , இயக்குநர் ஞானவேல் , எடிட்டர் லியோ ஜான் பால் , ஒளிப்பதிவாளர் பிரமோத் , கலை இயக்குநர் கதிர் , சஞ்சய் பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் ப்ரியா ஆனந்த் பேசிய போது, “நான் இந்த படத்தின் கதையை கே...

