தனிக்கட்சி தொடங்கித்தான் ஆக வேண்டும்: டி.டி.வி.தினகரன்
கோவையில் இருந்து வந்த டி.டி.வி.தினகரன் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:- பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறதே?
பதில்:- 60 சதவீதம் பஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். பணமதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி. போன்றவற்றினால் பணப்புழக்கமே இல்லாமல் தொழிலதிபர்கள், விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பஸ் கட்டண உயர்வினால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே அரசு பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.
கேள்வி:- ஜெயலலிதா மரணம் தொடர்பான கருத்துக்களை தெரிவிப்பதால் உங்களையும் திவாகரனையும் கைது செய்ய வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளரே?
பதில்:- கோமாளிகளுக்கு பதிலளித்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.
கேள்வி:- ஜெயலலிதா மரணத்தில் தொடர்ந்து உங்கள் குடும்பத்தில் மாறுபட்ட கருத்து...









