செவ்வாய்க்கிழமை, ஜூலை 7
Shadow

Author: Kodanki

சிவகார்த்திகேயன் வெளியிட்ட அதர்வா  நடிக்கும் ‘பூமராங்’ டைட்டில் லுக்..!

சிவகார்த்திகேயன் வெளியிட்ட அதர்வா நடிக்கும் ‘பூமராங்’ டைட்டில் லுக்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘இவன் தந்திரன்’ படத்தைத் தொடர்ந்து ‘பூமராங்’ எனும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார் ஆர்.கண்ணன். அதர்வா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படத்தில் நடிக்கும் மேகா ஆகாஷ் நடிக்கிறார். இவர்களுடன் ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், உபென் பட்டேல், சுஹாசினி மணிரத்னம் ஆகியோரும் நடிக்கிறார்கள். ராதன் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார் ஆர்.கே.செல்வா. ‘பூமராங்’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை  சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. இப்படத்தை இயக்குனர் கண்ணனே சொந்த பேனரில் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது....
‘தளபதி’யை தொடர்ந்து ‘கேணி’யில் இணைந்த கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பி..!

‘தளபதி’யை தொடர்ந்து ‘கேணி’யில் இணைந்த கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
ஃப்ராகிரண்ட் நேச்சர் ஃபிலிம் கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பாக சஜீவ் பி.கே., ஆன் சஜீவ் ஆகியோர் தயாரித்துள்ள படம் ‘கேணி’. ‘கிணறு’ என்ற பெயரில் மலையாளத்திலும் உருவாகியுள்ள இந்த படத்தை மலையாளத்தில் 7 படங்களை இயக்கியுள்ள எம்.ஏ.நிஷாத் இயக்கியுள்ளார். இவர் தமிழில் இயக்கும் முதல் படமான ‘கேணி’யில் நாசர், பார்த்திபன், பசுபதி, ஜெயப்பிரதா, ரேவதி, அனுஹாசன், ரேகா, அர்ச்சனா, பிளாக் பாண்டி என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. இந்த படத்தின் பாடல்களுக்கு மலையாள இசை அமைப்பாளர் எம்.ஜெயச்சதிரன் இசை அமைக்க, ‘விக்ரம் வேதா’ படப் புகழ் சாம்.சி. பின்னணி இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா  சென்னையில் நடைபெற பாடல்களை நடிகை சுஹாசினி வெளியிட்டார். இந்த படம் குறித்து இயக்குனர் எம்.ஏ.நிஷாத் கூறும்போது, ‘‘கேணி’ நான் இயக்கும் முதல் தமிழ் படம். நான் இதற்கு முன் இயக்கிய அனைத்து மலையா...
‘கீ’க்காக ‘இரும்புத்திரை’ ரிலீஸை தள்ளி வைத்த விஷால்..!

‘கீ’க்காக ‘இரும்புத்திரை’ ரிலீஸை தள்ளி வைத்த விஷால்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், நடிகர்கள்
‘கீ’க்காக ‘இரும்புத்திரை’ ரிலீஸை தள்ளி வைத்த விஷால்! ஜீவா, நிக்கி கல்ராணி நடிப்பில் அறிமுக இயக்குனர் காளீஸ் இயக்கியுள்ள படம் ’கீ’. மைக்கேல் ராயப்பனின் ‘குலோபல் இன்ஃபோடெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் அவரது மகன் செராபியன் ராயசேவியர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகரும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும், நடிகர் சங்க செயலாளருமான விஷால் உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். https://youtu.be/IWqeTxCdsrk மைக்கேல் ராயப்பன் இதற்கு முன் தயாரித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்த, இது சம்பந்தமாக சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார் மைக்கேல் ராயப்பன். இந்த விஷயத்தின் மீது ஏன் விஷால் நடவடிக்கை எடுக்கவில்லை என்று இவ்விழாவில் பேசு...
எம்.ஜி.ஆர். பட தொடக்க விழாவில் பரபரப்பை ஏற்படுத்திய ரஜினி – கமல்

எம்.ஜி.ஆர். பட தொடக்க விழாவில் பரபரப்பை ஏற்படுத்திய ரஜினி – கமல்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
எம்.ஜி.ஆர். தயாரித்து நடித்து இயக்கிய படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’.1973-ல் வெளியாகி மிகப்பெரிய சாதனை படைத்த இந்த படம் அந்த காலகட்டத்தில் மிகவும் பேசப்பட்டது. இந்த படத்தின் இறுதியில், ‘விரைவில் கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு’ என்று எம்.ஜி.ஆர். தனது உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் 2-வது பாகம் பற்றி டைட்டில் போட்டு இருந்தார். இந்த படத்தை கிழக்கு ஆப்ரிக்காவின் பின்னணியில் பிரமாண்டமாக தயாரிக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் தீவிர அரசியலில் இறங்கியதால், அந்த படம் தயாராகவில்லை. எம்.ஜி.ஆரின் அந்த கனவை நிறைவேற்றும் வகையில், ‘கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு’என்ற தலைப்பில் எம்.ஜி.ஆரின் அனிமே‌ஷன் படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நே‌ஷனல் சார்பில் ஜசரிகணேஷ், பிரபுதேவா ஸ்டுடியோஸ் சார்பில் பிரபுதேவா ஆகியோர் தயாரிக்கிறார்கள். அருள் மூர்த்தி இயக்குகிறார். இந்த படத்தின் தொடக்கவிழா எம்.ஜி.ஆரின் 101-வத...
முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கும் புதிய படம் ‘தேவர் ஆட்டம்’

முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கும் புதிய படம் ‘தேவர் ஆட்டம்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்திற்கு 'தேவர் ஆட்டம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 'குட்டிப்புலி', 'கொம்பன்', 'மருது', 'கொடிவீரன்' ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா. தற்போது கவுதம் கார்த்திக்கை நாயகனாக வைத்து புதிய படமொன்றை இயக்க உள்ளார். இப்படத்துக்கு 'தேவர் ஆட்டம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. மார்ச் முதல் வாரம் 'தேவர் ஆட்டம்' படப்பிடிப்பு தொடங்க உள்ளது. நாயகி, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது. ஒரு குறிப்பிட்ட வட்டாரம், சமூகத்தின் வாழ்க்கை முறையை தன் படங்களில் பதிவு செய்வது முத்தையாவின் வழக்கம். இந்த முறை 'தேவர் ஆட்டம்' என்றே தலைப்பு வைத்திருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது....
மைக்கேல் ராயப்பனுக்கு பணம் வாங்காமல் படம் நடித்து கொடுக்கிறேன் – கீ பட ஆடியோ விழாவில் விஷால் வாக்குறுதி

மைக்கேல் ராயப்பனுக்கு பணம் வாங்காமல் படம் நடித்து கொடுக்கிறேன் – கீ பட ஆடியோ விழாவில் விஷால் வாக்குறுதி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மைகேல் ராயப்பன் - சிம்பு பிரச்சனையில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? - விஷால் விளக்கம் காலீஸ் இயக்கத்தில் நடிகர் ஜீவா - நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் கீ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. இதில் இயக்குநர் காலீஸ், ஜீவா, நிக்கி கல்ராணி உள்ளிட்ட கீ படக்குழுவினரும், விஷால், விஜய் சேதுபதி, மைக்கேல் ராயப்பன், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் பேசும் போது, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் குறித்து மைக்கேல் ராயப்பன் கொடுத்த வழக்கு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கேட்டார். இதனால் இசை வெளியீட்டு விழாவில் சலசலப்பு ஏற்பட்டது. இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய விஷால், முதலில் கீ படத்தின் பாடல்களும், டிரைலரும் சிறப்பாக வந்திருப்பதாக கூறி, படத்தில் ஜீவா, இயக்குநர்...
தமிழக அரசு பேருந்துக் கட்டணம் திடீர் உயர்வு..!

தமிழக அரசு பேருந்துக் கட்டணம் திடீர் உயர்வு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழக அரசு பேருந்துகளின் கட்டணங்களை உயர்த்தி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, நகர, மாநகர பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் 3 ரூபாயில் இருந்து 5 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண பேருந்துகளுக்கான கட்டணம் ரூ.5ல் இருந்து ரூ.6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாநகர பேருந்துகளுக்கான அதிகபட்ச கட்டணம் 12 ரூபாயில் இருந்து 19 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்ச கட்டணம் 23 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது மலைப்பகுதிகளில் அடிப்படை பேருந்து கட்டணத்துடன் 20 சதவிகிதம் அதிகமாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. விரைவு பேருந்தில் 30 கி.மீ.க்கு தற்போதைய கட்டணம் ரூ.17 ஆக இருந்தது. ஆனால் மாற்றியமைக்கப்பட்டுள்ள கட்டணம் ரூ.24 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதிநவீன சொகுசு இடைநில்லா பேருந்து மற்றும் புறவழிச்சாலை இயக்க பேருந்து கட்டணம் 30 கி.மீக்கு ரூ.18லிருந்து ரூ.27 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வால...