உயிரிழப்பு, காயங்களுக்கான விபத்து காப்பீடு எவ்வளவு?: தமிழக அரசு அறிவிப்பு
சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்து பணியாளர்களின் சிறந்த செயல்பாடுகளையும் மீறி தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில், சாலை விபத்துகள் நடைபெறுகின்றன. விபத்து இழப்பீட்டினை சரியான நேரத்தில் வழங்க முடியாததால் கடந்த ஆண்டு ஜூலை 23-ந்தேதி வரையிலான தகவல் அடிப்படையில் 652 அரசு பஸ்கள் நீதிமன்ற பிணையில் உள்ளன.
மேலும், சுங்க கட்டணமாக மாதம் ஒன்றுக்கு சராசரியாக ரூ.12 கோடியை அரசு போக்குவரத்துக்கழகங்கள் செலுத்துகின்றன. அண்டை மாநிலங்களில் காப்பீடு மற்றும் சுங்கவரி செலுத்தும் வகையில் பஸ் கட்டணங்களுடன் ஒரு பகுதியாக வசூலிக்கப்படுகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் தற்போது காப்பீட்டுத் தொகை மற்றும் சுங்கவரி பயண கட்டணத்துடன் வசூலிக்கப்படுவதில்லை.
எனவே விபத்து இழப்பீடு, விபத்து தடுப்பு மற்றும் சுங்க கட்டணத்துக்கான ஒருங்கிணைந்த நிதி ஒன்றை புதிதாக உருவாக்க தமிழக அரசு முடிவெடுத்து உள்ளது. இந்த நிதியத்தின் க...







