ஜெயலலிதா பிறந்தநாளில் 500 மதுக்கடைகளை மூட தமிழக அரசு முடிவு
தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் மூலம் அரசே மதுபான கடைகளை நடத்தி வருகிறது. 2016-ல் 7 ஆயிரத்து 100 மதுபான கடைகள் இருந்தன.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அனைத்து கட்சிகளுமே படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று வாக்குறுதி அளித்தன.
இதற்கிடையில் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக் கடைகளை மூடும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. தேர்தலில் வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வர் ஆனதும் 500 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் 3,320 மதுக்கடைகள் மூடப்பட்டன.
இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் மதுக் கடைகளின் எண்ணிக்கை 2,830 ஆக குறைந்தது. பின்னர் மதுக்கடைகள் திறக்க ஏதுவாக சாலைகளின் பெயர்மாற்றம் நடந்தது. மேலும் நெடுஞ்சாலை ஓர மதுக்கடைகள் பற்றி சுப்ரீம் கோர்ட் விளக்கம் அளித்தது. இதையடுத்து மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. தற்போது 5 ஆயிரம் மதுக்கடைகள் உள்ளன.
படிப்படியாக மதுவில...








