எட்டாவது நாள்… தீர்வை எட்டாமல் நீளும் போக்குவரத்து போராட்டம்… அரசின் அலட்சியமா…!
எட்டாவது நாள்... தீர்வை எட்டாமல் நீளும் போக்குவரத்து போராட்டம்... அரசின் அலட்சியமா...!
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் இன்று நல்ல முடிவுக்கு வரும் என நம்பப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு ஒருசில தினங்களே உள்ள நிலையில் தொழிற்சங்கங்கள் மட்டுமின்றி வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மொத்த தமிழகமும் இன்று வழங்கப்படும் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச, சிஐடியூ உட்பட பல்வேறு தொழிற்சங்கங்களும் கடந்த ஜனவரி 4ஆம் தேதி முதல் போராட்டம் நடத்திவருகின்றன. இன்றுடன் போராட்டம் எட்டாவது நாளை எட்டியுள்ளது.
இதுதொடர்பாக நேற்று உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது மனசாட்சியோடு முடிவு செய்து போக்குவரத்து ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்...









