உதயநிதி ஸ்டாலினுக்கு நான் தான் அனுமதி வாங்கிக் கொடுத்தேன் – திரைக்குப் பின்னால் குமரன்!
திரைப்படங்களைப் பார்க்கும்போது சண்டைக் காட்சிகளில் கண் இமைப்பதற்குள் சரேலென வேகமாகப் பறந்து செல்லும் வாகனங்களை ஓட்டுபவர்களை நமக்குத் தெரியாது. முன் பக்கம் உயர்த்தி,இரண்டு சக்கரத்தில் எகிறிப்பாயும் காருக்குள் இருப்பது யார் என்றோ, கர்ணம் அடித்து சறுக்கி விழும் மோட்டார் சைக்கிளில் இருப்பவர் முகம் யாருடையது என்றோ எவருக்கும் தெரியாது.பிரபல கதாநாயகர்களை மிரட்டும் வில்லனின் அடியாட்களில் ஒருவராக வந்து பேசும் அந்த நடிகரின் முகமோ நமக்குத் தெரியாது.ஒரு படத்தின் பரபரப்புக்காகத் தேவைப்படும் இவர்களுக்குச் சரியான அடையாளமும் அங்கீகாரமும் கிடைப்பதில்லை.இந்த வரிசையில் உள்ளவர் தான் நடிகர் டி. குமரன் .இவரது வாழ்க்கையை அறிந்தால் அவரை நொடிப்பொழுதுகளில் கடந்து போகும் ஒருவராக நினைக்க முடியாது.
நூற்றுக்கணக்கான படங்களில் இப்படிச் சில நிமிடங்களில் பிரபலங்களுடன் நடித்துள்ளவர் இவர். அதுமட்டுமல்ல பாண்டிச்சேரியில் 5...









