தனுஷுக்கு ”ரெட்” – எங்கள் முடிவில் மாற்றமில்லை – கவுன்சில் தலைவர் முரளி
தனுஷ் படத்திற்கு கட்டுப்பாடு, புதிய படங்கள் தொடங்குவதில் தற்காலிக நிறுத்தம், எட்டு வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் திரைப்படங்களை வெளியிடோணும் உட்பட சில முக்கிய முடிவுகளை தீர்மானங்களாக நிறைவேற்றி சைன் இல்லா அறிக்கை ஒன்றை வெளியிட்டது நடக்காத தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். இதற்கு உடனடியாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி நடிகர் சங்கம் தங்களோட வன்மையான கண்டனத்தை தெரிவிச்சுது.
இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர செயற்குழுக் கூட்டம், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் நேத்திக்கு நடந்துச்சு. இதில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டாய்ங்க. இந்த கூட்டத்தில் நடிகர் சங்கம் தெரிவித்த கண்டனம், வேலை நிறுத்தம் உள்ளி...







