‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!
‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!
‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ (Million Dollar Studios) மற்றும் ‘நியோ கேசில் கிரியேஷன்ஸ்’ (Neo Castle Creations) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் கலந்து கொண்டு, திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
பரிதாபங்கள் கோபி பேசியதாவது..,
“இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பு கொடுத்த Million Dollar Studios, Neo Castle Creations மற்றும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குநர் பாரி இளவழகன் சகோதரருக்கு சிறப்பு நன்றி. என்னை நம்பி இந்தக் கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். அவருடைய ‘ஜமா’ பார்த்ததி...









