தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு!
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு. போட்டியின்றி தலைவராக கவிதாவும், வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் செயலாளராக கோடங்கி ஆபிரகாமும் வெற்றி பெற்றனர்.
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளுக்கான தேர்தல் 17ம் தேதி இன்று நடைபெற்றது.
தேர்தல் அதிகாரிகளாக சபீதா ஜோசப், சிங்காரவேலுவும், தேர்தல் பார்வையாளராக வழக்கறிஞர் எழில் இனியனும் இவர்களுடன் பி ஆர் ஓ சங்க செயலாளர் ஜான் ஆகியோர் தேர்தல் பணியை செய்தனர்.
காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 3 மணிக்கு முடிவடைந்தது.
எந்த சங்கத்திலும் இதுவரை நடை பெற்ற எந்த தேர்தல்களிலும் 100 சதவீத வாக்குகள் பதிவானதில்லை.
முதல் முறையாக தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத் தேர்தலில் 100 சதவீத வாக்குகள் பதிவாகி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
தேர்தல் முடிந்ததும் உடன...









