4 புதிய தமிழ் சூப்பர்ஹிட் திரைப்படங்களை, ஸ்ட்ரீம் செய்யும், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் !!
4 புதிய தமிழ் சூப்பர்ஹிட் திரைப்படங்களை, ஸ்ட்ரீம் செய்யும், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் !!
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ரசிகர்களுக்காகப் பிரத்தியேகமாக 1 டிக்கெட் 4 படம் எனும், புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ரசிகர்கள் தற்போது நான்கு புதிய சூப்பர்ஹிட் திரைப்படங்களை பார்த்து ரசிக்க முடியும்.
இந்த நான்கு படங்களின் தொகுப்பு, டிசம்பர் 30 அன்று பார்க்கிங் திரைப்படம் மற்றும் ஜனவரி 15 இல் ஜோ திரைப்படத்துடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து ஜனவரி 27 முதல் ஃபைட் கிளப் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது.
இந்த புதிய திட்டத்தின் இறுதிப் படமாக - சபா நாயகன் படத்தினை பிப்ரவரி 14 அன்று ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.
இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான பரபரப்பான த்ரில்லர் திரைப்படம் 'பார்க்கிங்', இது டிசம்பர் 30 முதல் ஸ்ட்ரீம் செய்யப்பட்டு வரு...









