கட்டுப்பாடு என்ற பெயரில் பெண்களை அடக்கி வைக்க கூடாது: டாப்சி
“நான் விருப்பப்பட்டு சினிமாவுக்கு வரவில்லை. மாடலிங்கில் ஆர்வம் இருந்ததால் அதில் ஈடுபட்டேன். அதன்மூலம் சினிமா வாய்ப்பு வந்தது. அப்போதும் சினிமாவில் நிலைத்து இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. கைச்செலவுக்காகத்தான் நடித்தேன். ஒருகட்டத்தில் சினிமா பிடித்தது. அதில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்து விட்டேன்.
எனக்கு தன்னம்பிகை அதிகம். எதற்கும் பயப்படமாட்டேன். மாடலிங் செய்தபோது எனது தந்தை தூக்கம் இன்றி தவித்தார். மற்றவர்கள் தவறாக பேசுவார்களோ என்று பயந்தார். எனது படங்கள் விளம்பரங்களில் வெளியாகி நண்பர்கள் அவரை பாராட்டிய பிறகுதான் நிம்மதியானார்.
சுற்றி இருப்பவர்களுக்கு பயந்துதான் பெற்றோர்கள் பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்காமல் வளர்க்கிறார்கள். நானும் அப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்தே வந்து இருக்கிறேன். பெற்றோர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது வரை வெளியுலகம் பற்றி எதுவும் தெரியவில்லை. சினிமாவுக்கு வந்த பிற...

