திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட டெல் கே.கணேசனின் 'டிராப் சிட்டி' மூலம் ஹாலிவுட்டில் தடம் பதிக்கிறார் யோகி பாபு
நெப்போலியன் மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோரை ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்திய டெல் கே. கணேசன், தற்போது யோகி பாபுவை அவரது புதிய படத்தில் நடிக்க வைக்கிறார்
திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட டெல் கே.கணேசன், கைபா பிலிம்ஸ் பேனரில் தடைகளைத் தகர்த்து இந்தியத் திறமைகளை உலகப் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி, ஹாலிவுட்டில் முக்கிய ஆளுமையாக உருவெடுத்துள்ளார். ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களைத் தயாரிப்பதில் தொடங்கி சிறந்த இந்திய மற்றும் மேற்கத்திய சினிமாவை ஒன்றிணைப்பது வரை, கணேசனின் பயணம் தமிழ்நாடு மற்றும் ஹாலிவுட் இடையே ஒரு கலாச்சாரப் பாலத்தை உருவாக்குவதற்கான அவரது அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.
கணேசனின் முயற்சிகள் சர்வதேச அரங்கில் இந்திய திறமைகளை தொடர்...
இந்தியாவின் விண்வெளி ஆய்வுப் பயணத்தைக் கொண்டாடும் இஸ்ரோவின் விண்வெளி பாடல்:
விண்வெளிக்கலன் செலுத்தப்படும்போது குதூகலத்துடன் அதைப் பார்க்கும் நம்மில் வெகு சிலருக்கு மட்டுமே விண்வெளி ஆராய்ச்சிக்கனவு சாத்தியப்படுகிறது. அக்கனவை இளைய தலைமுறையினரிடம் ஊக்கப்படுத்தவும், இந்தியாவின் விண்வெளி ஆய்வு பயணத்தைக் கொண்டாடும் வகையிலும் இஸ்ரோ பாடல் பா மியூசிக் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடல், விண்வெளியில் இந்தியாவின் சாதனைகளைச் பற்றிச் சிறார்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. மதன் கார்க்கியின் வரிகளுடன், விண்வெளி ஆராய்ச்சியின் பெருமையையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் இப்பாடல், இளைய தலைமுறையினர் இஸ்ரோவைப் பார்த்து, விண்வெளிக் கண்டுபிடிப்புகளில் தங்கள் சொந்த கனவுகளைக் காணத் தூண்டுகிறது. ஜெரார்ட் பெலிக்ஸ் இசையமைத்து, தீபக் ப்ளூ பாடிய இந்தப் பாடலை மதுரை குயின் மீரா பள்ளியை...
மிர்ச்சி சிவா நடிக்கும் 'சூது கவ்வும் 2' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
தயாரிப்பாளர்கள் சி. வி. குமார் மற்றும் எஸ். தங்கராஜ் ஆகியோரின் தயாரிப்பில், இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில், 'அகில உலக சூப்பர் ஸ்டார்' மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'சூது கவ்வும் 2' திரைப்படம் டிசம்பர் 13 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை சண்முகம் சினிமாஸ் கே. சுரேஷ் வெளியிடுகிறார்.
'சூது கவ்வும் 2' திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, வாகை சந்திரசேகர், கருணாகரன், ராதா ரவி, எம் எஸ் பாஸ்கர், அருள்தாஸ், ரமேஷ் திலக், யோக் ஜேபி, ஹரிஷா ஜஸ்டின், கராத்தே கார்த்தி, கல்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் - ஹரி ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட...
சிறு முதலீட்டுப் படங்களுக்கு ஆதரவு தருவது, மீடியாக்கள் தான் - இயக்குநர் சீனு ராமசாமி !!
SR Dream Studios சார்பில், S.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், சென்னை தெற்கு ஐஆர்எஸ், ஜிஎஸ்டி கூடுதல் இணை ஆணையர் T சமய முரளி, திரைக்கதை வசனத்தில் பரபரப்பான திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள“சைலண்ட்” படத்தின் இசை வெளியீட்டு விழா,, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்…
நாயகன் முரளி ராதாகிருஷ்ணன் பேசியதாவது…
ஆடியோ லாஞ்சுக்கு வருவதே மிக மிக சந்தோசமாக இருக்கிறது. இது என் முதல் மேடை. அனைவருக்கும் நன்றி. சைலண்ட் படம் மிக மிக அழகான படம். சமயமுரளி சாரை வெகு காலமாகத் தெரியும். மிக மிக நேர்மையான மனிதர். அவர் நிறையப் பேருக்கு உதவி செய்து வருகிறார். கணேஷ் சார் என்னை நம்ப...
மதிப்பிற்குரிய திரு. தனுஷ் K ராஜா, S/O கஸ்தூரி ராஜா, B/O செல்வராகவன்
வணக்கம்.
பல தவறான விசயங்களை சரி செய்வதற்காகவே வெளிப்படையான இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதியிருக்கிறேன். உங்கள் தந்தை திரு. கஸ்தூரி ராஜா அவர்கள் உறுதுணையோடு, சிறந்த இயக்குநரான உங்கள் அண்ணன் திரு. K.செல்வராகவனின் இயக்கத்தில் திரைத்துறைக்கு வந்து பிரபல நடிகராக மாறியிருக்கும் நீங்கள் நிச்சயம் இதனை புரிந்துகொள்ள வேண்டும். சினிமா பின்புலம் எதுவும் இல்லாமல் தனி ஒரு பெண்ணாக, சவால்கள் நிறைந்த திரைத்துறைக்கு வந்து, கடின உழைப்பாலும், நேர்மையான அர்ப்பணிப்பாலும் இன்றைய நிலையை அடைந்திருக்கிறேன். நேர்மறையான எனது பயணத்தை என் மீது அன்பு செலுத்தும் எனது ரசிகர்களும், திரைத்துறையினரும் நன்றாகவே அறிவார்கள்.
நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கும் 'Nayanthara: Beyond the Fairy Tale' ஆவணப்படத்தை என்னைப் போலவே ஏராளமான எனது ரசிகர்க...