நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து தமிழருவி மணியன் ஆலோசனை
நடிகர் ரஜினிகாந்த் கடந்த மே மாதத்தில் தொடர்ந்து 5 நாட்கள் ரசிகர்களை சந்தித்தார். மாவட்ட வாரியாக ரசிகர்கள் அழைக்கப்பட்டு அவர்களுடன் கலந்துரையாடி தனித்தனியே புகைப்படம் எடுத்துக் கொண்டார். சந்திப்பின் போது அவர் பேச்சிய பேச்சு பெரும்பரபரப்பையும் பலவித எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியது.
இதனையடுத்து ரஜினி தீபாவளிக்கு அரசியல் அறிவிப்பை வெளியிடுவார், காலா படப்பிடிப்பிற்கு பிறகு அரசியலுக்கு வருவார், 2.0 பாடல் ரிலீசுக்குப் பிறகு அரசியலுக்கு வருவார் என்று பல தகவல்கள் வெளியாகின.
கடைசியாக அவருடைய பிறந்தநாளில் அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடப் போகிறார் என எதிர்பார்க்கபட்டது. ஆனால் எந்த அறிவிப்பும் இல்லை. இந்நிலையில் கிறிஸ்துமஸ்க்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் ரசிகர்களை சந்திக்க உள்ளார்.
வருகிற 26 ந்தேதி தொடங்கி 31 ந்தேதி வரை 6 நாட்கள் தினமும் 1000 ரசிகர்களை சந்தித்து பு...









