ஆர்.கே. நகரில் கரை புரளும் கரன்சி மழை… ஆளும் கட்சிக்கு எதிராக டிடிவி அணியும், திமுகவும் மாறி மாறி குற்றச்சாட்டு..!
ஆர் கே நகரில் பணப்பட்டுவாடா புகாரை அடுத்து அங்கு ஓரிடத்தில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யவிருந்த பணக் கத்தையையும் பெயர் பட்டியல் அடங்கிய நோட்டையும் தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ் செல்வன் பறிமுதல் செய்தார். ஆர்கே நகரில் இன்று காலை முதல் பணப்பட்டுவாடா என்று தொகுதியே அல்லோகலப்படுகிறது. ஆங்காங்கே வீடுகளில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்றும் பணம் பறிமுதல் செய்தவர்களை மக்கள் பிடித்து கொடுத்தனர் என்றும் கூறப்படுகிறது.
பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி திமுக, தினகரன் அணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போர்க் களமாக காட்சி அளிக்கும் ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா குறித்த புகாரையும் போலீஸார் வாங்க மறுக்கின்றனர் என்று திமுக, தினகரன் அணியினர் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக பணத்தையும் நோட்டு புத்தகத...









