உலக சமாதானத்திற்காக கிறிஸ்மஸ் தாத்தாக்கள் பங்கு பெற்ற கலக்கல் நிகழ்ச்சி
சிங்காரசென்னை வாலிபர் ஐக்கியம் சார்பில் உலக சமாதானத்திற்காக 100 கிறிஸ்மஸ் தாத்தாக்கள் பங்கு பெற்ற கலக்கல் நிகழ்ச்சி
சிங்காரச் சென்னை வாலிபர் ஐக்கியத்தின் சார்பில் ஆண்டுதோறும் கிறிஸ்மஸ் புத்தாண்டு நேரங்களில் பொதுமக்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் சொல்வதோடு உலக சமாதானத்திற்காக பல்வேறு சமூக நிகழ்வுகளை செய்வது வழக்கம்.
இதில் குறிப்பிடும் படியாக கிறிஸ்மஸ் நாட்களில் அனைவராலும் வரவேற்கப்படும் சாண்டாகிளாஸ் என்ற கிறிஸ்மஸ் தாத்தர்க்கள் பேரணி நடத்துவது விசேஷமான ஒன்று.
இந்தாண்டும் வழக்கம்போல 100 சாண்டாகிளாஸ் கலந்து கொண்ட கலக்கலான நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. புதுவாழ்வு ஜெம்ஸ் சபையின் பிஷப் தயானந்தன் இந்த கிறிஸ்மஸ் தாத்தாக்கள் பேரணியை குரோம்பேட்டையில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். குரோம்பேட்டையில் இருந்து புறப்பட்ட சாண்டாகிளாஸ் தாத்தாக்கள் சிங்கார சென்னை வாலிபர் ஐக்கியத்தின் தலைவர் ஐசக்டேனி...









