முழு நீள காமெடியும் காதலும் தான் “மிஸ்டர் பாரத்” சிரிச்சி ரசிக்க ரெடியாகலாம்…
“உலகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக சிரிப்பும் காதலும் கலந்த திரைப்படமாக 'மிஸ்டர் பாரத்' உருவாகியுள்ளது”-நடிகர் பாரத்!
யூடியூப் உலகிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றிக்கொடி நாட்டும் புதிய தலைமுறை கலைஞர்கள் தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றனர். அந்த வரிசையில், 'மிஸ்டர் பாரத்' திரைப்படமும் அறிவிக்கப்பட்ட நாள் முதலே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு கிளிம்ப்ஸில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நகைச்சுவை ததும்ப, தயாரிப்பாளராக இப்படத்தை அறிமுகப்படுத்திய விதம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படம் குறித்து நடிகர் பாரத் மற்றும் இயக்குநர் நிரஞ்ஜன் தங்களது அனுபவங்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர்.
ஒரு திரைப்படத்தின் முதல் அடையாளம் அதன் டை...









