டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி.!
தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை சமர்ப்பித்த ஆவணங்கள் போதுமான ஆதாரங்களாக இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாடு டாஸ்மாக்கில் மதுபான கொள்முதல், பார் உரிமங்கள் வழங்குதல், மதுபான போக்குவரத்து டெண்டர்கள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் ரூ.1000 கோடி மதிப்பிலான முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.
இந்த முறைகேடுகளில் சில முக்கிய தொழிலதிபர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை சந்தேகித்தது. அதன்படி, ஆகாஷ் பாஸ்கரன், தமிழ் திரையுலகில் பிரபலமான தயாரிப்பாளராகவும், “Dawn Pictures” என்ற தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளராகவும் உள்ளவர்.
அவர் தயாரித்து வரும் படங்களில் தனுஷின் “இட்லி...









