ஆட்சிக்கு தம்பி கட்சிக்கு அக்கா… காங்கிரஸ் புது பார்முலா..! ஓய்வு முடிவு சோனியா காந்தி இடத்திற்கு வருகிறார் பிரியங்கா காந்தி…
ஆட்சிக்கு தம்பி கட்சிக்கு அக்கா... காங்கிரஸ் புது பார்முலா..!
ஓய்வு முடிவு சோனியா காந்தி இடத்திற்கு வருகிறார் பிரியங்கா காந்தி...
தீவிர அரசியலில் இருந்து சோனியா காந்தி ஓய்வு பெற இருப்பதால், இனி அவரது இடத்திற்கு சோனியாவின் மகள் பிரியங்கா காந்தி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சோனியா காந்தியின் பதவிக்காலம் முடிவடைந்ததால், புதிய தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
ராகுல் காந்தி அதிகாரப்பூர்வமாக தலைவர் பொறுப்பை ஏற்றதும் அரசியலில் இருந்து ஓய்வு பெற சோனியா காந்தி முடிவு செய்துள்ளார்.
காங்கிரஸ் வரலாற்றில் நீண்ட காலம் தலைவராக இருந்தவர் என்கிற பெருமையைப் பெற்ற சோனியா காந்தி கடந்த சில மாதங்களாக உடல்நிலை கோளாறால் அவதிப்பட்டு வருகிறார். சமீபத்தில் கூட உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு தி...









