புதன்கிழமை, ஜூலை 15
Shadow

Author: Kodanki

அப்பா,,மகன் இரட்டை வேஷத்தில் யோகிபாபு நடிக்கும் சித்தார்த்தின் “டக்கர்” 

அப்பா,,மகன் இரட்டை வேஷத்தில் யோகிபாபு நடிக்கும் சித்தார்த்தின் “டக்கர்” 

Assembly news, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  அப்பா,,மகன் இரட்டை வேஷத்தில் யோகிபாபு நடிக்கும் சித்தார்த்தின் "டக்கர்" தமிழ் திரையுலகில் சாக்லேட் பாயாக இருக்கும் நடிகர் சித்தார்த், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர் தனது முதல் படமான பாய்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக மட்டுமில்லாமல் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார். அந்தவகையில் தற்போது நடிகர் சித்தார்த் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்திருக்கும் டக்கர் பட டீஸர் வெளியாகி உள்ளது பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் மற்றும் ஜெயராம் தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘டக்கர்’. நடிகர் சித்தார்த் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கி உள்ளார். சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யான்ஷா கௌஷிக் நடித்துள்ளார். இப்படத்தில், அப்பா மகன் என இரண்டு ரோல்களில் கலக்கலாக நடித்திருக்கிறார் யோகிபாபு. திரையில் அப்பா, மகன் என இரு...
பட்டாக்கத்தியுடன் “மாமன்னன்” படத்தில் மிரட்டும் உதய்நிதி!

பட்டாக்கத்தியுடன் “மாமன்னன்” படத்தில் மிரட்டும் உதய்நிதி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  "மாமன்னன்" படத்தின் First Look போஸ்டர் வெளியானது ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.   "மாமன்னன்" படத்தின் First Look போஸ்டர் இன்று வெளியாகி பலரது பாராட்டைப் பெற்று வருகிறது. முன்னதாக இப்படத்தின் First Look போஸ்டர் மே 1 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் சமூக வலைதளங்களில் போஸ்டர் கசிந்ததால் படக்குழுவினர் இன்றே இப்படத்தின் போஸ்டரை வெளியிட முடிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் "மாமன்னன்" திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என ...
இயக்குநர் இமயம் பாரதிராஜா  வெளியிட்ட “மூத்தகுடி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட்ட “மூத்தகுடி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  “மூத்தகுடி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட் இயக்குநர் இமயம் பாரதிராஜா !! The Sparkland நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் சந்திரா தயாரித்து நடிக்க, இயக்குநர் ரவி பார்கவன் இயக்கத்தில், உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி வரும் குடும்ப பின்னணியிலான உணர்ச்சிகரமான திரைப்படம் “மூத்தகுடி”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட்டுள்ளார். ‘புது நெல்லு புது நாத்து’ படப்பிடிப்பிறகாக இயக்குநர் பாரதிராஜா நெல்லை சென்றிருந்த போது, செவத்தியாபுரத்தில் நடந்த நாடக விழாவில் கலந்துகொண்டார். அதில் வெற்றி பெற்ற நாடகத்திற்காக கதாசிரியர் சரக்குட்டிக்கு பரிசு வழங்கினார். தற்போது அந்த நாடகம் தான் திரைவடிவமாக மாறி, “மூத்தகுடி” திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இயக்குநர் பாரதிராஜாவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருப்பது படக்குழுவை மகிழ்...
அமேசான் வெளியிடும் “சிட்டாடெல்”

அமேசான் வெளியிடும் “சிட்டாடெல்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *'உலகளாவிய உளவு தொடரான சிட்டாடெலை மிகவும் அசாதாரணமான முறையில் அமேசான் ப்ரைம் வீடியோவிற்காக உருவாக்கி இருக்கிறோம்' என இந்த தொடரின் ஷோ ரன்னரான டேவிட் வெயில் தெரிவித்திருக்கிறார்.* ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா ஜோனஸ், ஸ்டான்லி டூசி மற்றும் லெஸ்லி மான்விலே ஆகியோர் நடித்திருக்கும் இணைய தொடர் 'சிட்டாடெல்'. இந்த வாரம் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது. அமேசான் ஸ்டுடியோஸ் மற்றும் ரூசோ பிரதர்ஸின் AGBO இந்த இணைய தொடருக்கான பிரத்யேக கதை சொல்லலை உருவாக்கி இருக்கிறது. மேலும் இந்த இணைய தொடர் இந்திய மற்றும் இத்தாலிய நாட்டின் தயாரிப்பாகவும், புத்திசாலித்தனத்துடன் இணைக்கும் பரபரப்பான உளவு தொடராகவும் உருவாகி இருக்கிறது. மேலும் இது உளவு பார்த்தலில் பிரத்யேக பிரபஞ்சத்தின் தொடக்கத்தையும் குறிப்பிடுகிறது. பரபரப்பான ஸ்பை திரில்லரான சிட்டாடெலை உலகளாவிய படைப்பாக உருவாக்கியதில், அமேசானின் ஒரிஜின...
மலிவான அரசியல் செய்பவர்களின் எண்ணம் நிறைவேறாது – வீடியோ விளக்கம் வெளியிட்ட பிடி ஆர்

மலிவான அரசியல் செய்பவர்களின் எண்ணம் நிறைவேறாது – வீடியோ விளக்கம் வெளியிட்ட பிடி ஆர்

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
  சர்ச்சைக்குரிய ஆடியோ தொடர்பாக, நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று வீடியோ மற்றும் அறிக்கை வெளியிட்டு பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் வரலாறு காணாத சாதனைகளையும், புதிய திட்டங்களையும், முக்கிய நிதி சீர்திருத்தங்களையும் மேற்கொண்டு, கடந்த 10 ஆண்டுகளில் செய்ய முடியாத சாதனைகளை, வெறும் இரண்டே ஆண்டுகளில் செய்து முடித்துள்ளோம். அதனால்தான் இதனை திராவிட மடல் ஆட்சி என்று கூறுகிறோம். திராவிட மாடலை ஜீரணிக்க முடியாத சிலர்தான் இதுபோன்ற மலிவான தந்திரங்கள் கொண்ட போலியான ஆடியோ ஒலிப்பதிவுகளை வெளியிட்டுள்ளனர். அடுத்த தலைமுறையின் நம்பிக்கை உதயநிதி ஸ்டாலின். எனக்கு சபரீசன் மிகவும் நம்பகமான ஆலோசகர். நான் பேசியதாக வெளியான ஆடியோ ஒளிப்பதிவு முழுக்க முழுக்க சித்தரிக்கபப்ட்டவை. இதுபோன்ற ஒலிப்பதிவுகள் உலக அளவில் கிடைக்கின்றது. பி...
ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அடியே..’ படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அடியே..’ படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'அடியே..' படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு* இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'அடியே ..' எனும் திரைப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ஜெயம் ரவி அவருடைய இணையதள பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார். 'திட்டம் இரண்டு' படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'அடியே'. இதில் 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக, நடிகை கௌரி கிஷன் நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநரும், நடிகருமான வெங்கட் பிரபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். புதுமுக நடிகர் மதும்கேஷ் சிறப்பு தோற்றத்தில் அறிமுகமாகிறார். மேலும் மிர்ச்சி விஜய் உள்ளிட்ட ...
டைனோசர்ஸ் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் மிஷ்கின் சர்ச்சை பேச்சு!

டைனோசர்ஸ் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் மிஷ்கின் சர்ச்சை பேச்சு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    டைனோசர்ஸ் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா ! Galaxy Pictures ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் தயாரிப்பில், M R மாதவன் இயக்கத்தில்,  உதய் கார்த்திக், 'அட்டு' புகழ் ரிஷி ரித்விக், சாய் ப்ரியா தேவா, ஸ்ரீனி, D மானேக்க்ஷா கவின் ஜெய்பாபு, TN அருண்பாலாஜி,  முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள கமர்ஷியல் திரைப்படம் டைனோசர்ஸ். விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தினை ரோமியோ பிக்சர்ஸ் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.  டிரெய்லர் வெளியீட்டு விழா திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் பேசியதாவது.. எங்களுக்காக எங்களை வாழ்த்த வந்த திரைப்பிரபலங்களுக்கு நன்றி. எப்போதுமே ஒரு புது டீம் என்னமாதிரி படம் தருவார்கள் என்று சந்தேகம் இருக்கும். ஆனால் எங்கள் படத்தின் மீது எங்களுக்கு மிகப்பெரும் நம்பிக்கை இருக்கிறது. இயக்க...
இணைய ரசிகர்களை அதிகம் ஈர்த்த அருள்நிதியின் மிரட்டலான “கழுவேத்தி மூர்க்கன்”

இணைய ரசிகர்களை அதிகம் ஈர்த்த அருள்நிதியின் மிரட்டலான “கழுவேத்தி மூர்க்கன்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    *ஒலிம்பியா மூவிஸ் அம்பேத் குமார் வழங்கும், 'ராட்சசி' புகழ் சை கௌதமராஜ் இயக்கத்தில், அருள்நிதி-துஷாரா விஜயன் நடித்துள்ள 'கழுவேத்தி மூர்க்கன்' படத்தின் டீசர் 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் அமோக வரவேற்பு பெற்று வருகிறது!* நடிகர் அருள்நிதி தனது ஒவ்வொரு திரைப்படத்திலும், பாக்ஸ் ஆபிஸில் ஒரு வெற்றி நட்சத்திரமாக தனது அந்தஸ்தை உயர்த்திக் கொண்டே இருக்கிறார். மேலும், தனித்துவமான கதை அம்சம் கொண்ட திரைக்கதைகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தன் படங்களைத் திரையரங்குகளுக்குப் பார்க்க வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளார். அவரது முந்தைய படங்களின் வெற்றி இதையே நிரூபிக்கிறது. தற்போது, சை கௌதமராஜ் இயக்கத்தில், ஒலிம்பியா மூவீஸின் அம்பேத் குமார் தயாரிப்பில் ‘கழுவேத்தி மூர்க்கன்’ திரைப்படத்தின் மூலம் நீண்ட நாட்களுக்குப் பிறகு கிராமப்புற பின்னணியில் நடக்கும் ...
சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும், நடிகர் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ திரைப்படம் ஆகஸ்ட் 11, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது* சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஸ்வா தயாரிப்பில் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மாவீரன்’ திரைப்படம் ஆகஸ்ட் 11, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 'மாவீரன்' படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. பின்னர் வெளியான படத்தின் முதல் பார்வை, ஹிட்டான 'சீன் ஆ சீன் ஆ' முதல் பாடல் என இவை அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 'மண்டேலா' புகழ் மடோன் அஷ்வின் எழுதி இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் ஒரு ஆக்‌ஷன் ஃபேமிலி என்டர்டெய்னராகும். இதில் அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின், தெலுங்கு நடிகர் சுனில் மற்றும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நட...
இளம்பெண் மீது தாக்குதல் ஆள் ஏவிய ராதாரவி மீது வழக்கு! கைதாவாரா?!

இளம்பெண் மீது தாக்குதல் ஆள் ஏவிய ராதாரவி மீது வழக்கு! கைதாவாரா?!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
  இளம்பெண் மீது தாக்குதல் ஆள் ஏவிய ராதாரவி மீது வழக்கு! கைதாவாரா?! தென்னிந்திய டப்பிங் யூனியன் என்றாலே பிரச்சினைகள், பரபரப்புகளுக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் குறிப்பாக நடிகர் ராதாரவி தலைவராக பதவிக்கு வந்ததில் இருந்து சர்வாதிகாரப் போக்கும், எதிர் கேள்வி கேட்பவர்களை சங்கத்தை விட்டு நீக்குவதும் என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழும்பியது. அதிலும் மிக குறிப்பாக சங்க கட்டிடம் வாங்கியதில், மாற்றி கட்டியதில் பல லட்சம் முறைகேடு செய்ததாக புகார் எழுந்து நீதிமன்றம் வரை வழக்காக தாக்கல் செய்யப்பட்டது. அதோடு, அரசின் அனுமதி பெறாமல் விதிமுறை மீறி கட்டிடம் கட்டியதாக எழுந்த குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதால் கடந்த மாதம் டப்பிங் யூனியன் கட்டிடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். அரசின் விதிமுறைகளை மீறி கட்டிடம் கட்டப்பட்டிருப்ப்தால் எந்த நேரத்திலும் அந்த கட்டிடம் அரசால் இடிக்கப்ப...