வியாழக்கிழமை, ஜூலை 16
Shadow

Author: Kodanki

11:11 தயாரிப்பில் டாக்டர் பிரபு திலக் வழங்கும் கதிர்- நடராஜன் சுப்ரமணியம்- நரேன் நடிக்கும் ‘யூகி’!

11:11 தயாரிப்பில் டாக்டர் பிரபு திலக் வழங்கும் கதிர்- நடராஜன் சுப்ரமணியம்- நரேன் நடிக்கும் ‘யூகி’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
11:11 தயாரிப்பு நிறுவனம் டாக்டர். பிரபு திலக் வழங்கி வரும் படங்கள் பார்வையாளர்கள், விமர்சகர்கள் மற்றும் வர்த்தக வட்டத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது, ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் கதிர், நடராஜன் சுப்ரமணியம் மற்றும் நரேன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் 'யூகி' படத்தை வழங்குகின்றனர். 11:11 புரொடக்‌ஷன்ஸ், டாக்டர் பிரபு திலக் பேசுகையில், "'யூகி' படத்தின் உரிமையை 11:11 புரொடக்‌ஷன் வாங்கியிருப்பதில் மகிழ்ச்சி. படத்தில் கடுமையான தரமான உழைப்பை வழங்கி இருக்கும் அணியோடு இணைந்திருக்கிறோம் என்பதில் பெருமை. பார்வையாளர்களைக் கட்டிப்போடும் வகையிலான சிறப்பான சில அம்சங்கள் இந்தக் கதையில் உள்ளது. 11:11 புரொடக்‌ஷன்ஸ் எப்போதுமே தனித்துவமான கதைகளை உருவாக்குவதில் ஆர்வம் காட்டும். அந்த வரிசையில் 'யூகி' படமும் நிச்சயமும் தனித்துவமான கதையாக அமையும் நடிகர்கள் கதிர், நடராஜன் சுப்பிரம...
நர்மதாவை கரம்பிடித்த ஹரிஷ் கல்யாண்.. குவியும் வாழ்த்துகள்!

நர்மதாவை கரம்பிடித்த ஹரிஷ் கல்யாண்.. குவியும் வாழ்த்துகள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
'பியார் பிரேமா காதல்', 'இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்', 'தாராள பிரபு' போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ஹரிஷ் கல்யாண். தமிழ் திரையுலகின் சாக்லேட் பாய் லிஸ்டில் இடம்பெற்றுள்ள இவர் 'நூறு கோடி வானவில்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து 'டீசல்' படத்தில் நடித்து வருகிறார். இப்படி பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் தனது திருமணம் குறித்த அறிக்கை ஒன்றை சமூக வலைதளப் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அதில், "எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு முக்கியமான பயணத்தின் தொடக்கத்தை துவங்க உள்ள மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எழுதுகிறேன். உங்கள் அனைவரின் ஆசியுடன், நர்மதா உதயகுமார் உடனான எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இன்று சென்னை திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடிகர் ஹ...
“இம்சை அரசனை” தெறிக்கவிட “யோக அரசனை” களம் இறக்கிய சிம்புதேவன்!

“இம்சை அரசனை” தெறிக்கவிட “யோக அரசனை” களம் இறக்கிய சிம்புதேவன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இம்சை அரசனை தெறிக்கவிட “யோக அரசனை” களம் இறக்கிய சிம்புதேவன்!   காமெடி நடிகர் வடிவேலு எத்தனையோ வேஷங்கள் போட்டிருந்தாலும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை கொண்டாடிக் கொண்டிருக்கும் படம் இம்சை அரசன் 23ம் புலிகேசி. இதில் வடிவேலுவின் இரட்டை வேட நடிப்பு இன்னமும் மக்கள் மனசில் நிலைத்து நிற்கிறது. இதற்கு வடிவேலு மட்டுமல்ல அப்படி கதை,திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய சிம்புதேவனும் மிக முக்கியம். இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் பார்ட் 2 மூலம் இணைவார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் பார்ட் 2 அறிவிப்பு அறிவிப்பாகவே போய்விட்ட்து. இந்த சூழலில் சிம்புதேவன் அடுத்து எந்த அறிவிப்பும் தராமல் பொதுவெளியில் அதிகம் தலைகாட்டாமல் இருந்து வருகிறார். அதே நேரம் வடிவேலு விட்ட இடத்தை கெட்டியாக பிடித்து கொண்ட யோகிபாபுவுக்கு அதிர்ஷ்டம் இஷ்டம் போல வந்து கொட்டுகிறது ...
81 நிமிடங்களில் படமாக்கப்பட்டு உலக சாதனை படைத்த 3.6.9. இசை வெளியீட்டு விழா

81 நிமிடங்களில் படமாக்கப்பட்டு உலக சாதனை படைத்த 3.6.9. இசை வெளியீட்டு விழா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
*81 நிமிடங்களில் படமாக்கப்பட்டு உலக சாதனை படைத்த 3.6.9. இசை வெளியீட்டு விழா*   பிஜிஎஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிஜிஎஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம் பி ஆனந்த் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 3.6.9. இயக்குநர் சிவ மாதவ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப்படத்தில். வில்லன் கதாபாத்திரத்தில் படத்தின் தயாரிப்பாளர் பிஜிஎஸ் நடித்துள்ளார். சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் பிளாக் பாண்டி, அஜய் கண்ணன், சுகைல், சத்தி மகேந்திரா உள்ளிட்டே பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு மாரிஸ்வரன், இசை கார்த்திக் ஹர்ஷா, படத்தொகுப்பு ஆர். கே. ஸ்ரீநாத், கலை இயக்கம் ஸ்ரீமன் பாலாஜி ஆகியோர் இப்படத்தில் பணிபுரிந்துள்ளனர். உலக சினிமா வரலாற்றில் 81 நிமிடங்கள் தொடர்ச்சியாக இத்தி...
இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு ‘காந்தாரா’: ரஜினி புகழாரம்

இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு ‘காந்தாரா’: ரஜினி புகழாரம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
*இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு ‘காந்தாரா’: ரஜினி புகழாரம்* “நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'காந்தாரா', இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு” என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியிருக்கிறார். 'கே ஜி எஃப்' எனும் பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸின் தயாரிப்பில் உருவாகி, வெளியான திரைப்படம் 'காந்தாரா'. கர்நாடக மாநிலத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் பஞ்சுருளி எனும் காவல் தெய்வத்தை மையப்படுத்திய 'காந்தாரா' திரைப்படம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கன்னடத்தில் தயாரான இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்று வருகிறது. அக்டோபர் 15-ம் தேதியன்று தமிழக திரையர...
வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தைகள் விஷயத்தில் விக்னேஷ்சிவன் – நயன் தாரா தம்பதி சட்ட விதிகளை மீறவில்லை – தமிழக அரசு அறிவிப்பு

வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தைகள் விஷயத்தில் விக்னேஷ்சிவன் – நயன் தாரா தம்பதி சட்ட விதிகளை மீறவில்லை – தமிழக அரசு அறிவிப்பு

Uncategorized
நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதிக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்த விவகாரத்தில் விதிமீறல் எதுவும் இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் பிரபல திரைப்பட நடிகை ஒருவருக்கு வாடகைத்தாய் மூலமாக இரட்டை குழந்தைகள் பிறந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. அத்தம்பதியருக்கு திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் குழந்தை பிறந்ததாக தெரிவித்துள்ளனர். இச்செய்தியை தொடர்ந்து இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அவர்களால் 13.10.2022 உயர்மட்ட விசாரணை குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் மூலமாகவும் அத்தம்பதியர் குழந்தை பெற்றுக்கொண்டதாக தெரிய வந்தது. அம்மருத்துவமனை மற்றும் சிகிச்சை அளித்த மருத்துவர் மற்றும் வாடகைத்தாய்க்கு பேறுகால சிகிச்சை அளித்த மருத்த...
உதய நிதியிடம் வாழ்த்து பெற்ற விளையாட்டு சாதனைப் பெண்!

உதய நிதியிடம் வாழ்த்து பெற்ற விளையாட்டு சாதனைப் பெண்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், நடிகர்கள்
  போல் வால்ட் விளையாட்டில், தேசிய சாதனை படைத்திட்ட தஞ்சைப்பெண் ரோசி மீனா, சென்னையில் .உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏவை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். சமீபத்தில் குஜராத்தில் நடந்து முடிந்த தேசிய விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்ட தஞ்சைப்பெண் ரோசி மீனா பால்ராஜ், போல் வால்ட் விளையாட்டு போட்டியில் 8 வருடங்களாக இருந்த சாதனையை முறியடித்து, புதிய சாதனை படைத்துள்ளார். சிறு வயது முதலே விளையாட்டில் ஆர்வமுள்ள ரோசி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி அவர்களின் நிதி உதவியால் இதுவரையிலும் பல சாதனைகள் படைத்துள்ளார். தேசிய அளவில் புதிய சாதனை படைத்ததை அடுத்து, உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இச்சந்திப்பில் M.செண்பகமூர்த்தி உடனிருந்தனர்....

‘மெகா ஸ்டார்’ சீரஞ்சீவி நடிக்கும் வால்டேர் வீரய்யா படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

CINI NEWS, kodanki darbar, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ‘மெகா ஸ்டார்’ சீரஞ்சீவி நடிக்கும் வால்டேர் வீரய்யா படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு மெகா ஸ்டார் சிரஞ்சீவி - மாஸ் மகாராஜா ரவிதேஜா - மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாரான 'வால்டேர் வீரய்யா' எனும் படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இத்துடன் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில் 'மெகா 154' என பெயரிடப்பட்டு தொடங்கப்பட்ட திரைப்படத்திற்கு, 'வால்டேர் வீரய்யா' என பெயரிடப்பட்டது. இந்நிலையில் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக 'வால்டேர் வீரய்யா' எனும் டைட்டிலுக்கான டீசரை பட குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தீவிர ரசிகரும், இயக்குநருமான பாபி எனப்படும் கே எஸ் ரவீந்திரா இயக்கத்தில் தயாராகும் 'வால்டேர் வீரய்யா' எனும் டைட்டிலுக்கான ...
சீயான் விக்ரம் – பா. ரஞ்சித் இணையும் ‘தங்கலான்’

சீயான் விக்ரம் – பா. ரஞ்சித் இணையும் ‘தங்கலான்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் தயாராகும் ‘தங்கலான்’ சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு 'தங்கலான்' என பெயரிடப்பட்டிருக்கிறது. பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் இந்த டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. முத்திரை பதித்த முன்னணி இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகன் நடிகர்கள் பசுபதி, ஹரி கிருஷ்ணன் அன்பு துரை உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஏ. கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். தமிழ் பிரபா இணை கதாசிரியராக பணியாற்ற, கலை இயக்கத்தை எஸ். எஸ். மூர்த்தி கையாள, படத்தொகுப்பு பணிகளை ஆர். கே. செல்வா கவனிக்க, சண்டை காட்சிகளை ஸ்டன்னர் சாம் அமைக்கிறார். கோலார்...
தமிழ் திரைப்படத் தயாரிப்பில் இறங்கும் தோனி என்டர்டெய்ன்மெண்ட்

தமிழ் திரைப்படத் தயாரிப்பில் இறங்கும் தோனி என்டர்டெய்ன்மெண்ட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  தமிழில் திரைப்படத் தயாரிப்பில் இறங்கும் தோனி என்டர்டெய்ன்மெண்ட் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி  சாக்ஷி சிங் தோனியும் இணைந்து ‘தோனி என்டர்டெயின்மெண்ட்’ என சொந்தமாக பட நிறுவனத்தை தொடங்கி, தமிழில் திரைப்படம் ஒன்றை தயாரிக்கின்றனர்.. சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு படமாக தயாராகும் அந்த படைப்பு விரைவில் தொடங்குகிறது. இந்நிறுவனம் அனைத்து மொழிகளிலும் பொழுதுபோக்கு அம்சம் உள்ள திரைப்படங்களை தயாரிப்பதற்காக களம் இறங்கி இருக்கிறது. இதற்கான பல கட்ட தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய ஐபிஎல் போட்டிகளை அடிப்படையாகக் கொண்டு பிரபலமான 'ரோர் ஆஃப் தி லயன்' எனும் ஆவணப் படத்தை தயாரித்து வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் தயாரிப்பு துறையில் தனக்கென தனித்துவமான நற்பெயரையும் ...