செஸ் ஒலிம்பியாட் களை கட்டியது- பிரதமர் மோடி நாளை போட்டியை தொடங்கி வைக்கிறார்!
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெறுவதாக இருந்தது.
உக்ரைன் மீது அந்த நாடு போர் தொடுத்ததால் செஸ் ஒலிம்பியாட் போட்டியை வேறு நாட்டுக்கு மாற்ற முடிவு செய்தனர்.
எந்த நாட்டில் நடத்தலாம் என்று ஆய்வுகள் நடந்த போது செஸ் ஆட்டத்தின் தாயகமாக கருதப்படும் தமிழகத்தில் இந்த போட்டியை நடத்தலாம் என்று தீர்மானித்தனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இதுபற்றி தெரிவித்ததும் அவர் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சென்னையை அடுத்து உள்ள மாமல்லபுரத்தில் நடத்தலாம் என்று உறுதி அளித்தார்.
இந்த போட்டிக்காக உடனடியாக அவர் 100 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து உற்சாக மூட்டினார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியை உலகமே வியக்கும் வண்ணம் நடத்த வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 23 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டது.
தமிழக அரசின் 15 துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து சிற...









