வெள்ளிக்கிழமை, ஜூலை 17
Shadow

Author: Kodanki

கட்சி விவகாரங்கள் குறித்து இப்போது கேட்காதீங்க – பதில் அளிக்க மறுத்த ஈ.பி.எஸ்!

கட்சி விவகாரங்கள் குறித்து இப்போது கேட்காதீங்க – பதில் அளிக்க மறுத்த ஈ.பி.எஸ்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
டெல்லியில் உள்ள புதிய தமிழ்நாடு இல்லத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியளார்களை சந்தித்தார். அப்போது, பிரதமர் மோடியின் அழைப்பின்பேரில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிரிவுபசார விழாவில் கலந்துகொண்டதாக தெரிவித்தார். அப்போது, அதிமுகவின் வங்கிக்கணக்கை முடக்க வேண்டும் என ஓபிஎஸ் கடிதம் எழுதியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, நீதிமன்றத்தில் வழக்குகள் இருப்பதால் அதுபற்றி பதில் அளிக்க முடியாது என்றும், வழக்குகள் முடிந்த பிறகு அதுபற்றி கருத்துகள் தெரிவிக்கப்படும் என்றும் கூறினார். நீதிமன்றத்தில் மாறி மாறி வழக்கு போடப்படுவதால், கட்சி விவகாரங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்புவதை தவிர்க்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்....
அருள்நிதியுடன் இணைந்த உதயநிதி ஸ்டாலின்!

அருள்நிதியுடன் இணைந்த உதயநிதி ஸ்டாலின்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அருள்நிதி நடிப்பில் ஜூலை 22-ஆம் தேதி வெளியான 'தேஜாவு' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் 'டைரி'. அருள்நிதி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கி உள்ளார். இவர், டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள், கோப்ரா போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்துவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். உண்மையில் நடந்த கதையில் கொஞ்சம் கற்பனை கலந்து 'டைரி' படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு யோகான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. https://twitter.com/RedGiantMovies_/status/155083572...
அக்னிபாத் திட்டத்தால் நாட்டுக்கும் இளைஞர்களுக்கும் ஆபத்து – ராகுல் காந்தி!

அக்னிபாத் திட்டத்தால் நாட்டுக்கும் இளைஞர்களுக்கும் ஆபத்து – ராகுல் காந்தி!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
அக்னிபாத் திட்டம் குறித்த பிரதமரின் புதிய ஆராய்ச்சியால் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது என காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, ராகுல் காந்தி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் 60 ஆயிரம் ராணுவ வீரர்கள் ஓய்வு பெறுகிறார்கள். அதில் வெறும் 3,000 பேருக்குத்தான் அரசு வேலை கிடைக்கிறது. 4 வருடங்களுக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும் ஆயிரக்கணக்கான அக்னி வீரர்களின் எதிர்காலம் என்ன? பிரதமரின் இந்த புதிய ஆராய்ச்சியால் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களின் எதிர்காலமும் ஆபத்தில் உள்ளன என தெரிவித்துள்ளார்....
நெருக்கடியான நேரத்தில் ரிலீசான சூரரைப் போற்றுக்கு 5 தேசிய விருதுகள் – சூர்யா நெகிழ்ச்சி

நெருக்கடியான நேரத்தில் ரிலீசான சூரரைப் போற்றுக்கு 5 தேசிய விருதுகள் – சூர்யா நெகிழ்ச்சி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  வணக்கம்.. அன்பான வாழ்த்துகளால் வாழ்வை நிறைக்கும் அனைவருக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றிகள்.. ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு ’ஐந்து தேசிய விருதுகள்’ கிடைத்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. பெருந்தொற்று காலத்தில் எதிர்பாராத நெருக்கடிகளுக்கு இடையில் வெளியான இத்திரைப்படத்திற்கு இந்திய அளவில் வரவேற்பு கிடைத்தது. தன்னம்பிக்கை நிறைந்த கேப்டன் கோபிநாத் அவர்களின் வாழ்வைச் சிறந்த திரைப்படமாக்க பல ஆண்டுகள் உழைத்த, இயக்குநர் சுதா கொங்கரா அவர்களின் படைப்புத் திறனுக்குச் சிறந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. தேசியவிருது பெறுகிற சுதா கொங்கரா - ஷாலினி உஷாநாயர், ஜி.வி. பிரகாஷ், அபர்ணா பாலமுரளி, இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். சிறந்த திரைப்படத்தை தயாரிக்க துணைநின்ற படக்குழுவினர் அனைவருக்கும் இந்த...
விஜய் ஆண்டனி படத்தின் அப்டேட் கொடுத்த இயக்குனர் !

விஜய் ஆண்டனி படத்தின் அப்டேட் கொடுத்த இயக்குனர் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் தற்போது ரத்தம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை சி.எஸ்.அமுதன் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே தமிழ்ப்படம் என்ற படத்தை இயக்கி பிரபலமானார். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிக்கிறார்கள். இன்பினிடி பிலிம் வென்டர்ஸ் சார்பில் கமல் போரா, லலிதா தனஞ்செயன், பி.பிரதீப், பங்கஜ் போரா & எஸ்.விக்ரம் குமார் ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அப்டேட்டை இயக்குனர் சி.எஸ்.அமுதன் அறிவித்துள்ளார். அதன்படி ரத்தம் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூலை 24-ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
பா.இரஞ்சித் வெளியிட்ட ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்!

பா.இரஞ்சித் வெளியிட்ட ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'பொம்மை நாயகி'. இயக்குனர் ஷான் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தில் முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு கே எஸ் சுந்தர மூர்த்தி இசையமைக்க அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ஜூலை 22-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில் அறிவித்தபடி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் பா.இரஞ்சித் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடற்கரையில் குழந்தைக்கு எதையோ யோகிபாபு காட்டுவது போன்று இந்த போஸ்டர் இடம்பெற்றிருக்கிறது. இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது....
கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சி !

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சி !

HOME SLIDER, NEWS, செய்திகள்
  சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா கர்நாடகா மாநிலங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது. இன்று 52 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்தது. வரத்து அதிகரிப்பு காரணமாக தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.10-க்கு விற்பனை ஆனது. தக்காளி விலை குறைந்து இருந்தாலும் வரத்து அதிகரிப்பு காரணமாக விற்பனை ஆகாமல் தேங்கி இருக்கிறது. வியாபாரிகள் அதனை குப்பையில் வீசி வருகின்றனர். இதுகுறித்து தக்காளி மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் கூறும்போது:- கோயம்பேடு மார்கெட்டுக்கு நேற்று 56 லாரிகளில் தக்காளி குவிந்ததால் விலை சற்று குறைந்தது. இதையடுத்து முதல் ரக தக்காளி பெட்டி ஒன்று (14 கிலோ) ரூ.120-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் ரூ.30 அதிகரித்து ஒரு பெட்டி தக்காளி ரூ.150-க்கு விற்கப்படுகிறது. மழை பொழிவு பரவலாக அதிகரித்து ...
மாணவி ஸ்ரீமதியின் உடலை நாளைக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்- பெற்றோருக்கு ஐகோர்ட் உத்தரவு!

மாணவி ஸ்ரீமதியின் உடலை நாளைக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்- பெற்றோருக்கு ஐகோர்ட் உத்தரவு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடல் பிரேத பரிசோதனையின்போது, தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என மாணவியின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என தெரிவித்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு திரும்பப் பெறப்பட்டது. அதன்பின்னர் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி சதீஷ்குமார் முன்பு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முறையீடு செய்தார் . அப்போது மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மாணவியின் உடலை பெற்றோர் வாங்க மறுப்பதாகவும், உடலை வாங்க அவர்களுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, மாணவியின் உடல் பிரேத பரிசோதனை தொடர்பான அறிக்கைகள், மற்றும் பிர...
5தாவது வாரமாக ரசிகர்களின் வரவேற்பில் தியேட்டரில் நிற்கும் மாயோன்!

5தாவது வாரமாக ரசிகர்களின் வரவேற்பில் தியேட்டரில் நிற்கும் மாயோன்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  25 நாளை கடந்தும், திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடும் “மாயோன்” திரைப்படம் ! புத்தம் புதிய களத்தில் கடவுள் & அறிவியல், சிலை கடத்தல் மற்றும் புதையல் வேட்டை என பரபர திரில்லர் திரைப்படமாக வெளியான “மாயோன்” ரசிர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று திரையரங்குகளில் 25 ஆம் நாளை கடந்துள்ளது. ஒரு திரைப்படம் ஒரு வாரம் முழுதாக ஓடினாலே மிகப்பெரிய வெற்றி என கொண்டாடப்படும் தற்போதைய தமிழ் சினிமாவில், மாயோன் திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து, ரசிகர்களின் பேராதரவில் 4 வாரத்தில் அடியெடுத்து வைத்து, வெற்றிகரமாக திரையரங்குளில் 25 ஆம் நாளை கடந்துள்ளது. அருமையான திரைக்கதை. அட்டகாசமான உருவாக்கம். நடிகர்களின் திறமையான நடிப்பு, கண்ணை கவரும் பிரமாண்ட காட்சிகள் என மாயோன் திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுக்களை குவித்துள்ளது. மாமனிதன், வேழம் படங்...
சிவி 2 விமர்சனம்

சிவி 2 விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES
செந்தில்நாதன் இயக்கத்தில் யோகி, தேஜ், ஸ்வாதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “சிவி 2”. சிவி படத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கும் இப்படம் எப்படியான கதையம்சத்தை கொண்டது என்பதை பார்த்துவிடலாம். துளசி சினி ஆர்ட்ஸ் சார்பில் லலிதா கஸ்தூரி கண்ணன் இப்படத்தை தயாரித்திருக்கிறார். கல்லூரி மாணவர்கள் சிலரை காணவில்லை என்று அவர்களது பெற்றோர்கள் காவல் நிலையம் சென்று புகார் கொடுக்கின்றனர். மாணவர்களை தேடும் பணியில் காவல்துறை தீவிரமாக ஈடுபடுகிறது. அவர்கள் கடைசியாக சென்ற இடத்தில் கிடைத்த சில வீடியோ கேமராக்களைக் கைப்பற்றி, சாம்ஸிடம் அந்த வீடியோ கேமராக்குள் என்ன இருக்கிறது என்பதை பார்க்கச் சொல்லி கொடுக்கிறார் இன்ஸ்பெக்டர். சாம்ஸ் அந்த வீடியோவில் என்ன இருக்கிறது என்பதை பார்க்கிறார். அந்த வீடியோவிற்குள் என்ன இருந்தது.? மாணவர்கள் கிடைத்தார்களா.? என்பதை பயங்கர த்ரில்லர் கொண்டு இயக்கியிரு...