வியாழக்கிழமை, ஜூலை 9
Shadow

Author: Kodanki

சிவகார்த்திகேயனுடன் இணைந்த பிரபல தெலுங்கு நடிகர்!

சிவகார்த்திகேயனுடன் இணைந்த பிரபல தெலுங்கு நடிகர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
"டாக்டர்", "டான்" படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார். 'மாவீரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது. 'மாவீரன்' திரைப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். இதற்கான அறிவிப்பை படக்குழு முன்னதாகவே வெளியிட்டது. இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'மாவீரன்' திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் இணைந்துள்ளார். இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. சுனில் கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://twitter.com/ShanthiTalkies/status/1589966001189580800?ref_src=twsrc%5Et...
குடும்பத்துடன் புத்த மதத்திற்கு மாறிய வில்லன்!

குடும்பத்துடன் புத்த மதத்திற்கு மாறிய வில்லன்!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
  குடும்பத்துடன் புத்த மதத்திற்கு மாறிய வில்லன் நடிகர் சாய் தீனா. நடிகர் கமல் ஹாசன் நடித்த விருமாண்டி படத்தில் ஜெயில் வார்டனாக நடிச்சு கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகர் தீனா. அதன் பின்னர் தமிழில் வெளியான பல படங்களில் வில்லனாக நடிச்சிருக்கார். எந்திரன், ராஜா ராணி, தெறி, மாநகரம், மெர்சல், வட சென்னை, பிகில், மாஸ்டர், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களை குறிப்பிட்டு சொல்லலாம். நடிப்பையும் தாண்டி தீனாவின் பேச்சுக்கு பல ரசிகர்கள் இருக்காய்ங்க. மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசும் இவர் கொரோனா வைரஸ் பாதிப்பினால் வாழ்வாதாரத்தை இழந்து அன்றாடம் கஷ்டப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செஞ்சு வந்தார். வில்லன் என்பவன் படத்தில் மட்டும் தான், நிஜத்தில் இல்லை என்பதற்கு ஏற்றவாறு தீனாவின் பேச்சுகளில் சமூகத்தின் மீதான அக்கறை தெறிக்கும். இந்நிலையில் தற்போது அவர் தனது குடும்பத்தினர...
நடிகர் சந்தானத்தின் மைத்துனர் தயாரிக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானர் திரைப்படம் !

நடிகர் சந்தானத்தின் மைத்துனர் தயாரிக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானர் திரைப்படம் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ரொமான்ஸ் காமெடி ஜானரில், நடிகர் சந்தானத்தின் மைத்துனர் வினோத் துரைசாமி மற்றும் தங்கராஜ் தயாரிக்கும் புதிய திரைப்படம் ! NN pictures சார்பில் தயாரிப்பாளர்கள் தங்கராஜ், வினோத் துரைசாமி ஆகியோரின் முதல் தயாரிப்பாக, இயக்குநர் விவேக் இயக்கத்தில், புதுமுகங்கள் நடிக்கும், ரொமான்ஸ் காமெடி திரைப்படத்தின் பூஜை சென்னையில் இனிதே நடைபெற்றது. நடிகர் சந்தானத்தின் மைத்துனரான வினோத் துரைசாமி மற்றும் தங்கராஜ் அவர்கள், தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் கால்பதிக்கிறார். NN pictures சார்பில் இவர் தயாரிக்கும் “Production No 1 திரைப்படத்தின் பூஜை, படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி, PVR மீனா, Divo தலைமை அதிகாரி விசு ஆகியோருடன் 4you கம்பெனி நிறுவனர் R. பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொள்ள, சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவினை தொடந்து, படக்குழுவினர் நடிகர் சந்...
‘’யசோதா’ கதை கேட்ட 45 நிமிடங்களிலேயே சமந்தா நடிக்க ஒத்துக் கொண்டார்” – தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத்

‘’யசோதா’ கதை கேட்ட 45 நிமிடங்களிலேயே சமந்தா நடிக்க ஒத்துக் கொண்டார்” – தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத்: ‘’யசோதா’ படத்தின் கதை கேட்ட 45 நிமிடங்களிலேயே சமந்தா நடிக்க ஒத்துக் கொண்டார்” கதையின் நாயகியாக சமந்தா நடித்திருக்கக்கூடிய ‘யசோதா’ திரைப்படத்தை ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில் மூத்தத் தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத், ஸ்ரீதேவி மூவிஸ் பேனரின் கீழ் தயாரித்திருக்கிறார். வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா மற்றும் சம்பத் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் படத்தில் நடித்திருக்கின்றனர். தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் சினிமாத் துறையில் 40 வருடங்களாக இருக்கிறார். நேரடித் தெலுங்கு படங்கள் உட்படப் பல மொழிமாற்றம் செய்த நாற்பத்தைந்திருக்கும் மேற்பட்டப் படங்களையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். ‘ஆதித்யா 369’ போன்ற கல்ட் க்ளாஸிக் படங்களையும் அவர் தயாரித்து இருக்கிறார். இப்போது அவர் பான் இந்தியா படமான ‘யசோதா...
டிஸ்னி ஹாட் ஸ்டார் – கவிதாலயா தயாரிப்பில் உதய் மகேஷ் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார் நடிக்கும் புதியபடம்!

டிஸ்னி ஹாட் ஸ்டார் – கவிதாலயா தயாரிப்பில் உதய் மகேஷ் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார் நடிக்கும் புதியபடம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  டிஸ்னி ஹாட் ஸ்டார் - கவிதாலயா தயாரிப்பில் உதய் மகேஷ் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார், அனஸ்வரா ராஜன் நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு துவங்கியது ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம், சரத்குமார், கார்த்திக் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களை வைத்து பல வெற்றிப் படங்களை தயாரித்த கவிதாலயா மற்றும் முன்னணி ஓடிடி தளமான ஹாட் ஸ்டார் இணைந்து தயாரிக்க உதய் மகேஷ் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார், அனஸ்வரா ராஜன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. புஷ்பா கந்தசாமி மற்றும் கந்தசாமி பரதன் தயாரிக்கும் இப்படத்தை நாளை, சக்கர வியூகம் உள்ளிட்ட படங்களை இயக்கியவரும், ஃபேமிலி மேன் -2 , ஆஃபிஸ் உள்ளிட்ட தொடர்களிலும் பல வெற்றிப்படங்களிலும் நடித்தவருமான உதய் மகேஷ் கதை - திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இவரின் கதை-திரைக்கதையில் கே பாலச்ச...
‘விஜயானந்த்’ படத்தின் சிங்கிள் ட்ராக் வீடியோ வெளியீடு

‘விஜயானந்த்’ படத்தின் சிங்கிள் ட்ராக் வீடியோ வெளியீடு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  'விஜயானந்த்' படத்தின் சிங்கிள் ட்ராக் வீடியோ வெளியீடு கர்நாடகத்தை சார்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகியிருக்கும் 'விஜயானந்த்' எனும் படத்தில் இடம்பெறும் முதல் பாடலுக்கான வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. 'ட்ரங்க்' எனும் ஹாரர் திரில்லர் படத்தை இயக்கிய இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'விஜயானந்த்'. இதில் 'ட்ரங்க்' படப் புகழ் நடிகர் நிஹால் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் ஆனந்த் நாக், பாரத் பொப்பன்னா, ஸ்ரீ பிரகலாத், நடிகை வினயா பிரசாத், பிரகாஷ் பெலவாடி, வி. ரவிச்சந்திரன், அனீஷ் குருவில்லா, ரமேஷ் பட், தயாள் பத்மநாபன், ஷைனி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் த...
”வாத்தி ஃபஸ்ட்டு சிங்கிள்”- எதிர்பார்பை தூண்டிய படக்குழு!

”வாத்தி ஃபஸ்ட்டு சிங்கிள்”- எதிர்பார்பை தூண்டிய படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர் தனுஷ் எழுதிய "வாத்தி" திரைப்படத்தின் முதல் பாடல் நவம்பர் 10-ம் தேதி வெளியாகும் போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். 'வாத்தி' திரைப்படம் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. https://twitter....
கமல் ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசளித்த இந்தியன் 2 படக்குழு!

கமல் ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசளித்த இந்தியன் 2 படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் கமல் ஹாசனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் போஸ்டர் வெளியிட்டு இந்தியன் 2 படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. https://twitter.com/Red...
‘இந்தியன் 2’ படக்குழுவுடன் பிறந்தநாள் கொண்டாடிய பாபி சிம்ஹா!

‘இந்தியன் 2’ படக்குழுவுடன் பிறந்தநாள் கொண்டாடிய பாபி சிம்ஹா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பீசா, சூது கவ்வும், நேரம், ஜிகிர்தண்டா, இறைவி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் பாபி சிம்ஹா. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'ஜிகிர்தண்டா' திரைப்படத்தில் அசால்ட் சேதுவாக நடித்ததற்காக இவருக்கு தேசிய விருதே கிடைத்தது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும், 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனது பிறந்தநாளை பாபி சிம்ஹா இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் ஷங்கர் மற்றும் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது....
”கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞன் கமல்ஹாசன்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

”கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞன் கமல்ஹாசன்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

CINI NEWS, HOME SLIDER, politics, அரசியல், சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், நடிகர்கள்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு இன்று 68-வது பிறந்த நாள் ஆகும். இதையொட்டி இன்று மக்கள் நீதிமய்யம் கட்சியினர் தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, தீராக் கலை தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரு மான அன்புத்தோழர் கமல் ஹாசனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம் என்று பதிவிட்டுள்ளார்....