திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

Author: Kodanki

நடிகை திரிஷாவுடன் மீண்டும் காதலா?: நடிகர் ராணா பேட்டி

நடிகை திரிஷாவுடன் மீண்டும் காதலா?: நடிகர் ராணா பேட்டி

செய்திகள்
திரிஷா 15 வருடங்களாக தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். பெரிய கதாநாயகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் மட்டும் நடித்து வருகிறார். கொடி படத்தில் தனுசை குத்தி கொலை செய்யும் வில்லி வேடத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மோகினி என்ற திகில் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். திரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பதாக 2 வருடங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. பிறகு இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். கடந்த வருடம் திரிஷாவுக்கு பட அதிபருடன் திருமணம் நிச்சயமாகி திடீரென்று ரத்தானது. இந்த நிலையில் ராணாவுக்கும் திரிஷாவுக்கும் இடையே மீண்டும் காதல் மலர்ந்துள்ளதாக தெலுங்கு பட உலகில் கிசுகிசுக்கள் பரவி உள்ளன. இருவரும் ஜோடியாக சுற்றுவதாகவும் ரகசியமாக சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் பே...
சினிமாவில் இருந்து என்னை ஒதுக்குகிறார்கள்: இலியானா வருத்தம்

சினிமாவில் இருந்து என்னை ஒதுக்குகிறார்கள்: இலியானா வருத்தம்

செய்திகள்
விஜய் ஜோடியாக ‘நண்பன்’ படத்தில் நடித்தவர் இலியானா. இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இலியானாவுக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லை. 2 இந்தி படங்கள் மட்டுமே கைவசம் உள்ளன. ஆஸ்திரேலிய இளைஞருடனான காதல் சர்ச்சைகளுக்கு பிறகு டைரக்டர்கள் அவரை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய தயங்குகிறார்கள். சமூக வலைத்தளங்களில் தனது நீச்சல் உடை படங்களை அவர் பரவ விட்டும் யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் இலியானா வருத்தத்தில் இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- “கடந்த 2 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கில் எனக்கு படங்கள் இல்லை. இந்தியில் மட்டுமே ஓரிரு படங்களில் நடிக்கிறேன். டைரக்டர்கள் என்னை ஒதுக்குகிறார்கள். அதற்கான காரணம் தெரியவில்லை. ஒவ்வொரு படத்திலும் இதுதான் எனக்கு கடைசி படம் என்ற உணர்விலேயே நடிக்க வேண்டி உள்ளது. தென்னிந்திய மொழியில் ஒரு பட வாய்ப்பு வந்தது. டைரக்டர் கதையை சொல்லிவிட்டு நான்தான் கதாநாய...
சைத்தான் விமர்சனம்

சைத்தான் விமர்சனம்

விமர்சனம்
நடிகர்கள்: விஜய் ஆன்டனி, அருந்ததி நாயர் இசை: விஜய் ஆன்டனி தயாரிப்பு: பாத்திமா விஜய் ஆன்டனி இயக்கம்: பிரதீப் கிருஷ்ணமூர்த்தி   முன்ஜென்ம கதை. அமரர் சுஜாதாவின் 'ஆ' நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது என்றெல்லாம் வந்த செய்திகள் சைத்தானுக்கு ஒரு வித எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியது என்னமோ உண்மைதான். எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றியதா சைத்தான்? சாப்ட்வேர் எஞ்ஜினீயர் விஜய் ஆன்டனிக்கும் அருந்ததி நாயருக்கும் திருமணமாகி, வாழ்க்கை சுமூகமாகப் போய்க் கொண்டிருக்கும் நேரத்தில், விஜய் ஆன்டனி மண்டைக்குள் அடிக்கடி ஒரு குரல். அந்தக் குரல் அவரை திரும்பத் திரும்ப தற்கொலைக்குத் தூண்டுகிறது. நண்பர்களால் பிழைக்கிறார். இந்தக் குரலைப் பற்றி தன் மேலதிகாரியிடம் கூற, அவர் மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்துப் போகிறார். காமெடியன் இல்லாத குறையைத் தீர்க்கிற மாதிரி ஒரு கேரக்டர் வில்லனுக்கு! பின்னணி இசையில் மிரட்டி இருக்கும் விஜய் ஆ...
கடவுள் இருக்கான் குமாரு விமர்சனம்

கடவுள் இருக்கான் குமாரு விமர்சனம்

விமர்சனம்
நடிப்பு: ஜிவி பிரகாஷ், பிரகாஷ் ராஜ், நிக்கி கல்ராணி, ஆனந்தி, ஆர்ஜெ பாலாஜி, சிங்கம்புலி, ரோபோ சங்கர், ஊர்வசி ஒளிப்பதிவு: சக்தி சரவணன் இசை: ஜிவி பிரகாஷ் தயாரிப்பு: டி சிவா (அம்மா கிரியேஷன்ஸ்) இயக்கம்: ராஜேஷ் எம்   சென்னை டு பாண்டிச்சேரி... அல்லது பாண்டி டு சென்னை... இந்த ஒரு ட்ரிப்பில் ஒரு முழுப்படத்தையே எடுத்துவிடுவார் இயக்குநர் ராஜேஷ் எம். அப்படி எடுக்கப்பட்டுள்ள படம்தான் இந்த கடவுள் இருக்கான் குமாரு. காமெடிப் படத்துக்கு சீரியஸான கதை தேவையில்லை என்று முடிவு செய்து, ஒரு லைன் பிடித்திருக்கிறார். அது...   ஜிவி பிரகாஷுக்கும் ஆனந்திக்கும் காதல். ஆனால் இந்து - கிறிஸ்தவ பிரச்சினையைக் காட்டி ஆனந்தியின் அப்பா எம்எஸ் பாஸ்கர் மறுக்க, அது 'பேசுவதெல்லாம் உண்மை' ஊர்வசியால் நிரந்தரமாக பிரேக் ஆகிறது. கல்யாணத்துக்கு இரண்டு நாட்கள் இருக்கும்போது பாண்டிச்சேரிக்கு ஒரு பேச்சுலர் பார்ட்ட...
மாவீரன் கிட்டு விமர்சனம்

மாவீரன் கிட்டு விமர்சனம்

விமர்சனம்
நடிகர்கள்: விஷ்ணு விஷால், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ஸ்ரீதிவ்யா, ஹரீஷ் உத்தமன், நாகி நீடு, ஃபெரேரா ஒளிப்பதிவு: ஏஆர் சூர்யா இசை : டி இமான் வசனம் - பாடல்கள்: யுகபாரதி மக்கள் தொடர்பு: ஜான்சன் தயாரிப்பு: ஐஸ்வர் சந்திரசாமி, தாய் சரவணன், ராஜீவன் எழுத்து - இயக்கம்: சுசீந்திரன் நூறாண்டு தமிழ் சினிமாவில் இப்போதுதான் பொது வழியில் தலித்தின் பிணம் ஏன் போகக் கூடாது? உனக்குச் சமமா நான் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தா தப்பா? விருப்பப்பட்ட ஆணும் பெண்ணும் ஒன்று சேர்வதில் சாதிக்கு என்ன வேலையிருக்கிறது? என்ற கேள்விகளுடன் படங்கள் வர ஆரம்பித்துள்ளன. மாவீரன் கிட்டு கதை மிக இயல்பானது... அன்றும் இன்றும் நாம் பார்த்துக் கொண்டிருப்பது, நிகழ்வுகளாக... செய்திகளாக. பள்ளி செல்ல பல மைல் தூரம் நடந்து போக வேண்டிய, பிணத்தை எடுத்துச் செல்லக் கூட பொது வழி மறுக்கப்பட்ட சமூகம் வாழும் கிராமத்தில் பிறந்த கிருஷ்...