ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 5
Shadow

அரசியல்

பா.ஜ.க.மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை ரூ.200 ஐ தாண்டும் – அகிலேஷ் யாதவ்

பா.ஜ.க.மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை ரூ.200 ஐ தாண்டும் – அகிலேஷ் யாதவ்

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
  உத்தர பிரதேசத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் படவுன் மற்றும் ஷாஜஹான்பூர் தொகுதிகளில் பிரச்சாரம் செய்த சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசியதாவது: அவர்கள் (பா.ஜ.க.) மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.200 ஐ தாண்டும். ஏழைகள் விமானங்களில் பயணம் செய்வார்கள் என்று பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால், அதிகரித்து வரும் எரிபொருள் விலையால், அவர்களுக்கு (ஏழைகளுக்கு) மோட்டார் சைக்கிள் அல்லது கார் கூட சொந்தமாக இல்லை. பா.ஜ.க.வின் சிறிய தலைவர்கள் சிறு பொய்களை சொல்கிறார்கள், பெரிய தலைவர்கள் பெரிய பொய்களை சொல்கிறார்கள், அவர்களின் முக்கிய தலைவர் மிகப் பெரிய பொய்களை கூறுகிறார்கள். பாஜக பொய்யர்களின் கட்சி. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்...
ராகுல்காந்தி குறித்த அவதூறு பேச்சால் அசாம் முதல்வரை பதவி நீக்கம் செய்யுங்கள் – பிரதமர் மோடிக்கு தெலங்கானா முதல்வர் கோரிக்கை!

ராகுல்காந்தி குறித்த அவதூறு பேச்சால் அசாம் முதல்வரை பதவி நீக்கம் செய்யுங்கள் – பிரதமர் மோடிக்கு தெலங்கானா முதல்வர் கோரிக்கை!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
  ராகுல்காந்தி குறித்த அவதூறு பேச்சால் அசாம் முதல்வரை பதவி நீக்கம் செய்யுங்கள் - பிரதமர் மோடிக்கு தெலங்கானா முதல்வர் கோரிக்கை! உத்தரகாண்டில் பாஜக வேட்பாளரை ஆதரித்து நேற்று முன் தினம் அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய ஹிமந்தா, காங்கிரஸ் மீதும் ராகுல் காந்தி மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசுகையில், பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய சர்ஜிகல் தாக்குதலுக்கு ராகுல் காந்தி ஆதாரம் கேட்கிறார். நீங்கள் ராஜீவ் காந்தியின் மகன் தானா? இல்லையா? என்பதற்கு நாங்கள் எப்போதாவது உங்களிடம் ஆதாரம் கேட்டோமா?. நமது ராணுவ வீரர்கள் கூறுகிறார்கள் என்றால் அவர்கள் தாக்குதல் நடத்தியிருப்பார்கள். ஆதாரம் கேட்டு கேள்வி எழுப்ப உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது?’ என்றார். ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் கருத்துக்கள் அரசியலில் பெரும...
பாஜக ஆட்சியை தக்க வைக்க முட்டாள்தனமாக பேசி வரும் அசாம் முதல்வர்!

பாஜக ஆட்சியை தக்க வைக்க முட்டாள்தனமாக பேசி வரும் அசாம் முதல்வர்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
  70 இடங்களை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. இதில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் போட்டியிட உள்ளன. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று முன் தினம் உத்தரகாண்ட்டில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் ராகுல் காந்தி மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசுகையில், பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய சர்ஜிகல் தாக்குதலுக்கு ராகுல் காந்தி ஆதாரம் கேட்கிறார். நீங்கள் ராஜீவ் காந்தியின் மகன் தானா? இல்லையா? என்பதற்கு நாங்கள் எப்போதாவது உங்களிடம் ஆதாரம் கேட்டோமா?. ...
திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படும் மாநில தேர்தல் ஆணையம் – ஜெயக்குமார்

திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படும் மாநில தேர்தல் ஆணையம் – ஜெயக்குமார்

HOME SLIDER, NEWS, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
  மாநில தேர்தல் ஆணையம் திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். திமுகவின் தேர்தல் விதி மீறல்கள் குறித்து அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினர்களான முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், ஜெயக்குமார், பெஞ்சமின் உள்ளிட்டோர், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், மாநில தேர்தல் ஆணையம் விருப்பு வெறுப்பில்லாமல் ஜனநாயக கடமையாற்ற வேண்டும்... ஆனால் மாநில தேர்தல் ஆணையம் திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்றும் திமுகவின் அராஜகம் அத்துமீறலுக்கு மாநில தேர்தல் ஆணையம் துணைபோகிறது இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.      ...
திருப்பூர் மாவட்டத்தில் இன்று மு.க.ஸ்டாலின் பிரசாரம்!

திருப்பூர் மாவட்டத்தில் இன்று மு.க.ஸ்டாலின் பிரசாரம்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி என்ற முழக்கத்தோடு காணொலி காட்சி மூலமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 6-ந்தேதி காணொலி காட்சி மூலம் கோவையில் பிரசாரத்தை தொடங்கிய அவர், சேலம், கடலூர், தூத்துக்குடி, ஈரோடு, குமரி ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார். இந்தநிலையில் இன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி மற்றும் உடுமலை, தாராபுரம், திருமுருகன...
தமிழக மீனவர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்- கமல்ஹாசன்!

தமிழக மீனவர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்- கமல்ஹாசன்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களிடம் இருந்து 105 நாட்டு படகுகள் மற்றும் விசைப்படகுகள் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த படகுகள் ஏலம் விடப்படும் என்று இலங்கை அரசு சமீபத்தில் அறிவித்து இருந்தது. அதன்படி இந்த படகுகள் ஏலம் விடும் பணி கடந்த 7-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. இதற்கு கண்டனம் தெரிவித்து மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் கூறியதாவது:- இலங்கைச் சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்கவும், இலங்கை அரசால் ஏலம் விடப்பட்ட படகுகளை மீட்கக் கோரியும், இலங்கைக் கடற்படையின் அத்துமீறல்களைக் கண்டித்தும் ராமேஸ்வரம் மீனவர்கள் போராடி வருகிறார்கள். தமிழக மீனவர்களின் நியாயமான  கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.  ...
ட்ரோன்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு தடை!

ட்ரோன்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு தடை!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
  வெளிநாடுகளில் இருந்து ட்ரோன்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே ட்ரோன்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்த தடை பிறக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ராணுவ பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்வதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் ட்ரோன்களுக்கான உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதற்கு எந்த அனுமதியும் பெறத் தேவையில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது....
லிபியா பிரதமரை கொல்ல முயற்சி: காரில் சென்றபோது துப்பாக்கிச்சூடு!

லிபியா பிரதமரை கொல்ல முயற்சி: காரில் சென்றபோது துப்பாக்கிச்சூடு!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், உலக செய்திகள், செய்திகள்
லிபியா நாட்டின் பிரதமராக அப்துல் ஹமீத் அல் திபய்பா (வயது 62) உள்ளார். இவர் நேற்று தலைநகர் திரிபோலியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவர் கார் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பினர். இந்த கொலை முயற்சியில் அவர் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பினார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லிபியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்கு அரசியல் குழப்பமும் நிலவுகிறது....
கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பணி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்!

கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பணி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில், மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 3 கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. அதன் பின்னர் 2018-ம் ஆண்டு முதல் தமிழக தொல்லியல் துறை சார்பில் 4 கட்டங்களாக அகழாய்வுகள் நடந்துள்ளன. இங்கு கிடைத்த தொல்பொருட்கள், உலக அரங்கில் தமிழர்களின் பெருமையை பறை சாற்றுகின்றன.. இதுவரை நடந்த 7 கட்ட அகழாய்விலும் சேர்த்து மொத்தம் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் கீழடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை தமிழக தொல்லியல் துறை மேற்கொள்ள இருக்கிறது. இந்த பணிகளை சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக இன்று(வெள்ளிக்கிழமை) காலையில் தொடங்கி வைக்கிறார். இதற்காக கீழடியில் அலங்காரப் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. அகழாய்...
முதல்கட்ட தேர்தல் உ.பி.யில் 60.17 % வாக்குகள் பதிவு..!

முதல்கட்ட தேர்தல் உ.பி.யில் 60.17 % வாக்குகள் பதிவு..!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
    உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில், 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதன் முதல்கட்ட வாக்குப்பதிவு, இன்று நடைபெற்றது  11 மாவட்டங்களில் அடங்கிய 58 தொகுதிகள், முதல்கட்ட தேர்தலை சந்திக்கின்றன. 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 9 பேர் மந்திரிகள் ஆவர். தேர்தலையொட்டி, 58 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மத்திய படையினரும், மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்காளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த பதற்றமான பகுதிகளில் மத்திய படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்த நிலையில், இன்று காலை 7 மணியளவில் வாக்கு பதிவு தொடங்கியது.  மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடந்தது. இன்று நடந்த  உத்தர பிரதேச  சட்டசபை  தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவில்  60.17  சதவீதம் வாக்குகள்  பதிவாகி உள்ளன....