வியாழக்கிழமை, ஜூலை 30
Shadow

World News

நைஜீரியாவில் வெடிவிபத்து – 100க்கும் மேற்பட்டோர் பலி!

நைஜீரியாவில் வெடிவிபத்து – 100க்கும் மேற்பட்டோர் பலி!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
நைஜீரியாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ அங்குள்ள எண்ணெய் கிடங்குகளில் வேகமாகப் பரவியது. இந்த வெடி விபத்தில் அங்கு பணியில் இருந்தவர்கள் பலர் உயிரிழந்தனர் என காவல்துறை செய்தி தொடர்பாளர் மைக்கேல் அபாட்டம் தெரிவித்தார். தீவிபத்து ஏற்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தின் உரிமையாளரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த வெடிவிபத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்....
ஸ்வீடன், ஃபின்லாந்து நாடுகள் நேட்டோவில் இணைவதற்கு ஆதரவு: கனடா பிரதமர்!

ஸ்வீடன், ஃபின்லாந்து நாடுகள் நேட்டோவில் இணைவதற்கு ஆதரவு: கனடா பிரதமர்!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, அரசியல், உலக செய்திகள், செய்திகள்
நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து, அந்நாட்டின் மீது ரஷியா படையெடுத்து 56 நாட்களாக போர் செய்து வருகிறது. இதனால் அச்சமடைந்துள்ள ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள்  நேட்டோ ராணுவக் கூட்டணியில் இணையும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இந்த நடவடிக்கைக்கு ரஷியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கனடா தனது ஆதரவினை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நேட்டோவில் சேருவதற்கு ஸ்வீடன் மற்றும் ஃபின்லாந்து ஆகிய நாடுகள் விருப்பம் காட்டுவதாக உரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. அந்த இரு நாடுகளின் முடிவிற்கும் கனடா நிச்சயமாக தனது ஆதரவை அளிக்கும் என்று கூறினார்....
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் ஜான்சனுக்கு அகமதாபாத்தில் சிறப்பு வரவேற்பு!

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் ஜான்சனுக்கு அகமதாபாத்தில் சிறப்பு வரவேற்பு!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று காலை அலுவலகப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருக்கு அகமதாபாத் விமான நிலையத்தில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் அம்மாநில ஆளுநர் ஆச்சாசர்யா தேவ்ரத் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். இவர்களுடன் மாநில மூத்த அதிகாரிகளும், அமைச்சர்களும் உடனிருந்தனர். இங்கிலாந்து பிரதமருக்கு அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நகரத்தில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல் வரை 4 கி.மீ பாதையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலை எங்கிலும் பாரம்பரிய குஜராத்தி நடனங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளை குழுவினர் நடத்தினர். குஜராத்தில் ஒரு நாள் தங்கயிருக்கும் இங்கிலாந்து பிரதமர் அம்மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய வணிகத் தலைவர்களை சந்திக்கவுள்ளார். பிறகு, பஞ்மஹால் மாவட்டத்தில் உள்ள ஹலோலுக்கு அருகில் உள்ள பிரிட்டிஷ் கட்டுமான உபகரண நிறுவனமான ஜேசிபியின் உற்பத்தி நிலையத்திற்கு...
பிலிப்பைன்சில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 167 ஆக அதிகரிப்பு!

பிலிப்பைன்சில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 167 ஆக அதிகரிப்பு!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு மற்றும் மத்திய நகரங்களில் மேகி என பெயரிடப்பட்ட சூறாவளி தாக்கியது. இதனால், பல்வேறு நகரங்களில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டது. நகரின் பல பகுதிகளில் மின் இணைப்பு, சாலை வசதி துண்டிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, அந்நாட்டின் லெய்டி மாகாணம் பேபே நகரில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, பிலிப்பைன்சில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 28 பேர் உயிரிழந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. மேலும், நூற்றுக்கணக்காணோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், பிலிப்பைன்சில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரி...
உக்ரைன் ஏவுகணை தாக்குதலில் ரஷிய போர்க்கப்பல் கருங்கடலில் மூழ்கியது!

உக்ரைன் ஏவுகணை தாக்குதலில் ரஷிய போர்க்கப்பல் கருங்கடலில் மூழ்கியது!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
  உக்ரைன் மீது ரஷியா 50 நாட்களுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகரங்களில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளன. இதற்கிடையே,  கருங்கடலில் உள்ள ரஷிய போர்க்கப்பலை அழித்துவிட்டதாக உக்ரைன் நேற்று அறிவித்துள்ளது. இதனை கவர்னர் மக்சிம் மார்சசென்கோவும் உறுதியளித்தார். ஆனால் ரஷியா இதற்கு மறுப்ப தெரிவித்தது. இந்நிலையில், கருங்கடலில் ரஷியாவின் போர்க்கப்பல் மூழ்கியது என்றும் வெற்றகரமாக ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. ஆனால், கப்பலில் வெடிமருந்து வெடித்ததால்தான் தீப்பிடித்தது என்றும், அதன் ...
வீழ்ச்சி அடையும் உள்நாட்டு உற்பத்தி – உக்ரைன் ரஷிய போர்!

வீழ்ச்சி அடையும் உள்நாட்டு உற்பத்தி – உக்ரைன் ரஷிய போர்!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
நேட்டோ உறுப்பினராக இல்லாத ஆஸ்திரியா நாட்டின் அதிபர் கார்ல் நெஹமர் மாஸ்கோவில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை நேற்று சந்தித்தார். அப்போது, உக்ரைனுடனான போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவரவேண்டும். இல்லையெனில் இரு பக்கமும் சேதங்கள் ஏற்படும் என கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.  உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரில் ரஷிய ராணுவம் நடத்திய தாக்குதலில் குறைந்தது 10 ஆயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டும். சாலைகளில் ஆங்காங்கே உடல்கள் கிடத்தப்பட்டுள்ளன என அந்த நகர மேயர் பாய்சென்கோ தெரிவித்துள்ளார். மொபைல் டிரக்குகள் மூலம் தகனங்கள் செய்யப்படுகின்றன. டிரக்குகளில் உள்ளே உள்ள குழாய் மூலம் இந்த உடல்கள் எரிக்கப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.  ரஷியா உடனான போர் உக்ரைனின் பொருளாதார உற்பத்தியை இந்த ஆண்டு 45 சதவீதம் வீழ்ச்சி அடையச் செய்யும் என உலக வங்கி கணித்துள்ளது....
பாகிஸ்தான் பாராளுமன்றம் ஒத்திவைப்பு – ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமர் என தகவல்!

பாகிஸ்தான் பாராளுமன்றம் ஒத்திவைப்பு – ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமர் என தகவல்!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நேற்று நள்ளிரவு நடைபெற்றது. நள்ளிரவு 1.30 மணியளவில் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இம்ரான்கானுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த தீர்மானம் வெற்றிபெற்றது. இதனால் பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் நீக்கப்பட்டார். நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றியதும் பாகிஸ்தான் பாராளுமன்றம் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இம்ரான்கான், பிரதமர் அலுவலக இல்லத்தில் இருந்து வெளியேறினார். இந்நிலையில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஷபாஸ் ஷெரீப் நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடு...
இலங்கையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

இலங்கையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம், சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்ததுடன், அதில் வெற்றியும் கிடைத்தது. இந்த போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்து மாணவர்கள் மிகத் தீவிரமாக கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தை வெற்றியடைய வைத்தனர். இதைப் போலவே இலங்கையில் தற்போது அரசுக்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம், அந்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியை சரி செய்ய வலியுறுத்தியும், ஆட்சியாளர்களை பதவி விலகக் கோரியும் இலங்கை தலைநகர் கொழும்புவில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். காலையில் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், மாலையில் பூங்காக்கள், பிரதான சாலைகள் உள்ளிட்ட இடங்களில் கூடி கையில் பதாகைகளை ஏந்தி அமைதி வழியில் போராடி வருகின்றனர். அரசியல் தலைவர்களுக்கு கல்வி அறிவு வழங்க வேண்டும், பொருளாதார நெருக்கட...
அவசரமாக தரையிறங்கிய விமானத்தில்  திடீரென கிளம்பிய புகை: ஓடுபாதையில் இரண்டாக பிளந்த விமான பகீர் வீடியோ!

அவசரமாக தரையிறங்கிய விமானத்தில் திடீரென கிளம்பிய புகை: ஓடுபாதையில் இரண்டாக பிளந்த விமான பகீர் வீடியோ!

HOME SLIDER, World News, உலக செய்திகள், வீடியோ
  *திடீரென கிளம்பிய புகை: இரண்டாக பிளந்த விமானம்!* *பதற வைக்கும் பகீர் வீடியோ* *கோஸ்டாரிகாவில் அவசரமாகத் தரையிறங்கும் போது சரக்கு விமானம் ஒன்று அப்படியே இரண்டாகப் பிளந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.* *பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கோஸ்டாரிகா. கோஸ்டாரிகாவில் டிஎச்எல் நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்கு விமானம் அவசரமாகத் தரையிறங்கியது. அப்போது திடீரென எதிர்பாராத விதமாக விமானம் விபத்திற்குள்ளாகி, இரண்டாகப் பிளந்தது.* *புறப்பட்ட 25 நிமிடங்களில் அந்த விமானம் அவசரமாகத் தரையிறங்க மீண்டும் திரும்பி உள்ளது. அதன்படி காலை நேற்று காலை 10:30 மணிக்கு (1630 GMT) விமானம் மீண்டும் தரையிறங்க முயன்றுள்ளது. அப்போது தான் இந்த விபத்து ஏற்பட்டது. ஹைட்ராலிக் பிரச்சனை காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.* *விபத்து ஏற்ப...
இலங்கையின்  நெருக்கடியை தீர்க்க அனைத்துக் கட்சி அமைச்சரவை அமைக்க இலங்கை அதிபர் அழைப்பு!

இலங்கையின் நெருக்கடியை தீர்க்க அனைத்துக் கட்சி அமைச்சரவை அமைக்க இலங்கை அதிபர் அழைப்பு!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மற்றும் மக்கள் தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள். போராட்டம் தீவிரமடைந்த நிலையில், நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் அமல்படுத்தப்பட்ட 36 மணி நேர ஊரடங்கு இன்று காலை முடிவுக்கு வந்தது. இதற்கிடையே, இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு இலங்கை அமைச்சர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக நேற்று பதவி விலகினர். இந்நிலையில், இலங்கையில் அனைத்துக் கட்சி அமைச்சரவை அமைக்க இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். அமைச்சர் பதவிகளை ஏற்று பொருளாதார நெருக்கடியை தீர்க்க உதவ வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்....