Ukraine War – அடுக்கடுக்கான பொருளாதாரத் தடைகளால், ரஷ்யாவில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!
மாஸ்டர் கார்டு மற்றும் விசா நிறுவனங்களை தொடர்ந்து அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டும், தங்களது சேவையை ரஷ்யாவில் நிறுத்தியதால் அந்நாட்டின் பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட உள்ளது.
மேலும், அடுக்கடுக்கான பொருளாதாரத் தடைகளால், ரஷ்யாவில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், அந்நாட்டின் மீது மேற்கத்திய நாடுகள் அடுக்கடுக்கான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன.
அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் பொருளாதாரத் தடைகளால், ரஷ்யாவின் நிதிநிலை பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ரஷ்யாவின் பங்குச்சந்தைகள் ஐம்பது சதவீதம் சரிவைச் சந்தித்தது. ரஷ்யாவின் நாணயமான ரூபிளும் வரலாறு காணாத அளவுக்கு மதிப்பை இழந்துள்ளது.
ஆப்பிள், போயிங், ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட், கூகுள், டிவிட்டர், சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் த...








