அசந்த நேரத்தில் தினகரன் ஜெயித்து விட்டார் இனி அசரப்போவதில்லை -துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஒப்புதல்
நாங்கள் அசந்த நேரம் பார்த்து தினகரன் ஜெயித்து விட்டார். இனி நாங்கள் அசர மாட்டோம். ஜெயலலிதாவுக்கு எதிராக சதி திட்டம் தீட்டியதால் தான் தினகரன் விரட்டி அடிக்கப்பட்டார் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.
ஊட்டியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பேசியதாவது:-
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டினார்கள். எம்.ஜி.ஆர். வள்ளல் குணம் படைத்தவர். அவர் வழியில் வந்த ஜெயலலிதாவும் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றினார்.
அம்மா ஆட்சி போல் வேறு யாராலும் ஆட்சியை கொடுக்க முடியாது. அம்மா அறிவித்த திட்டம் போல் வேறு யாரும் தர முடியாது. அதனால் தான் தமிழக மக்கள் அவரிடம் மீண்டும் ஆட்சியை கொடுத்தார்கள்.
எதை செய்தாலும் குறை சொல்ல கூடியவர்கள் அம்மா வழி அரசை குறை சொல்லி வருகிறார்கள். அம்மா வழியில் பயணம் செய்யும் இந்த ஆட்சி அம்ம...









