கமல் கட்சியில் சேர்ந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி
கமலின் புதிய கட்சியில் இணைந்து பணியாற்றுவதற்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் முன்னாள் போலீஸ் அதிகாரியான மவுரியா கமல் கட்சியில் சேர்ந்துள்ளார். மயிலாப்பூரில் துணை கமிஷனராக பணியாற்றிய இவர் கடைசியாக சிறைத் துறையில் ஐ.ஜி.யாக இருந்தார். பணிக்காலம் முடியும் முன்னரே, விருப்ப ஓய்வு பெற்று சென்று விட்டார்.
சென்னை கானாத்தூரில் வசித்து வருகிறார். கமல் கட்சியில் சேர்ந்தது பற்றி போலீஸ் அதிகாரி மவுரியா அளித்த பேட்டி வருமாறு:-
கே:- போலீஸ் அதிகாரியாக இருந்த உங்களுக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
ப:- போலீஸ் அதிகாரியாக பணியாற்றிய காலங்களிலேயே அரசியலை கூர்ந்து கவனித்து வந்துள்ளேன். அரசியலில் இருந்தால் மக்களுக்கு நல்லது செய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதை அப்போது உணர்ந்துள்ளேன். நேரம் வரும் போது அரசியலில் ஈடுபடலாம் என்று நினைத்திருந்...









