அரசியலிலும் திரைத்துறையிலும் தனி முத்திரை பதித்த ஆர்.எம்.வீரப்பன் – நூற்றாண்டு விழாவில் புகழஞ்சலி
தமிழக அரசியல் மற்றும் தமிழ் திரையுலக வரலாற்றில் முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் நூற்றாண்டு விழா, சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. அவரது குடும்பத்தினர் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் அரசியல், திரைத்துறை, கல்வி, நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று, ஆர்.எம்.வீரப்பனின் வாழ்க்கை, அரசியல் பயணம் மற்றும் திரைத்துறைக்கான பங்களிப்புகளை நினைவுகூர்ந்து புகழஞ்சலி செலுத்தினர்.
பெரியார் மற்றும் அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத்தின் முக்கிய தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவர் ஆர்.எம்.வீரப்பன். பின்னர் எம்.ஜி.ஆர். திமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவைத் தொடங்கியபோது அவருடன் இணைந்து...
AI மூலம் அடையாளத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிரான ஸ்ருதி ஹாசனின் சட்டப் போராட்டம்: திரைத்துறைக்கான புதிய தொடக்கம் !!
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியால் ஒருவரின் முகம், பேச்சு மற்றும் தோற்றத்தை கணப்பொழுதில் அச்சு அசலாக உருவாக்கிவிடும் இக்காலகட்டத்தில், ஒருவரின் தனிப்பட்ட அடையாளத்தையும் அவரது சம்மதத்தையும் பாதுகாப்பது முதன்மையான தேவையாக உருவெடுத்துள்ளது. AI மூலம் உருவாக்கப்படும் டீப்ஃபேக் (Deepfake), உருமாற்றப்பட்ட (Morphed) புகைப்படங்கள், போலியாகத் தொகுக்கப்பட்ட காணொளிகள் மூலம் தனது அனுமதி இல்லாமல் அடையாளம் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக நடிகையும் பாடகியுமான ஸ்ருதி ஹாசன் சட்டரீதியான போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
இவ்வழக்கை விசாரித்த பம்பாய் உயர் நீதிமன்றம், ஸ்ருதி ஹாசனுக்கு சாதகமாக இடைக்காலப் பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் தனது மனுவில் ...
மறைந்த தமிழ்த் திரையுலகின் படைப்பாளிகள் இயக்குனர் பாரதிராஜா, கே.பாக்யராஜ் இருவருக்கும் மணிமண்டபம், மார்பளவு சிலை வைக்க திரையுலகினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக முதலில் அவர்களுக்கு ராஜகோபுரங்கள் நினைவு உற்சவம் என்கிற நிகழ்ச்சியை வருகிற 16 ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடத்த உள்ளனர்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் சங்கம் ஆகிய சங்கங்கள் இணைந்து இந்த விழாவை நடத்த உள்ளது.
பிலிம்சேம்பர் வளாகத்தில் அமைந்துள்ள மீட்டிங் ஹாலில் மேற்கண்ட சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டு இந்த தகவலை தெரிவித்தனர்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவரும், இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி கூறுகையில்:-
தமிழ் ...