சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

”உச்சா” போனதால் கைதான ஏபிவிபி முன்னாள் தலைவர் டாக்டர் சுப்பையா!

”உச்சா” போனதால் கைதான ஏபிவிபி முன்னாள் தலைவர் டாக்டர் சுப்பையா!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தது தொடர்பான வழக்கில் ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தேசிய தலைவர் டாக்டர் சுப்பையா கைது செய்யப்பட்டுள்ளார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் மருத்துவராக பணிபுரிந்து வந்த இவர், புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவு தலைவராகவும் இருந்துள்ளார். சென்னை நங்கநல்லூரில் 2020 ஜூலை மாதம், அடுக்குமாடி குடியிருப்பில் பார்க்கிங் பிரச்னை காரணமாக, தனது எதிர் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் வாசல் முன்பு சுப்பையா சண்முகம் சிறுநீர் கழித்ததாக புகார் அளிக்கப்பட்டது. அத்துடன், பயன்படுத்திய முகக் கவசங்களை வீசிய வீடியோவும் வெளியானது. இதையடுத்து, அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆபாசமாக பேசுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கில், தற்போது சுப்பையா சண்முகம் கைத...
மார்ச்-31க்குள் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் திரும்பி தரப்படும் அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி

மார்ச்-31க்குள் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் திரும்பி தரப்படும் அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  தமிழகத்தில் வரும் மார்ச்-31ம் தேதிக்குள் 14.40 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் திரும்பி தரப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதியளித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கி பயிர்க் கடன், நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், 110 விதி கீழ் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான அதிகாரபூர்வ அரசாணையும் தமிழக அரசு வெளியிடப்பட்டது. நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு குறித்து தகுதியான நபர்களைக் கண்டறிவதற்காக, அனைத்து நகைக்கடன்கள் பற்றிய பெயர், கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கடன் கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண், குடும்ப அட்டை எண், ஆதார் எண், முகவரி, தொலைப்பேசி எண் உள்ளிட்ட 51 விதமான தகவ...
வேளாண் பட்ஜெட் – கரும்பு விவசாயிகளுக்கு ரூ.195 சிறப்பு ஊக்கத்தொகை!

வேளாண் பட்ஜெட் – கரும்பு விவசாயிகளுக்கு ரூ.195 சிறப்பு ஊக்கத்தொகை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று 2022-2023-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2-வது நாளான இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:- பண்டைத் தமிழர்கள் கரும்பைக் கசக்கி சாறு பிழிந்து சர்க்கரையாக்கும் தொழில் நுட்பத்தைத் தெரிந்து வைத்திருந்தனர் என்பதைக் ‘கரும்பாட்டிக் கட்டி சிறு காலைக் கொண்டார்’ என்று நாலடியார் நவில்கிறது. கடித்தாலும் சுவை தருகிறது கரும்பு, காய்ச்சினாலும் வெல்லம் தருகிறது அதன் சாறு. தொழில் துறை வசமிருந்த சர்க்கரைத் துறை வேளாண் துறைக்கு மாற்றப்பட்டது உழவர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி. கரும்பு உற்பத்தி, சர்க்கரைக் கட்டுமானத்தை உயர்த்துவதற்காக, தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கூட்டுறவு, பொதுத்துறை, தனியார் சர்...
இந்தியா சுதந்திரம் அடைந்தது 2014ம் ஆண்டு என்று வரலாற்றை மாற்றி எழுதினாலும் எழுதுவார்கள் என்கிறார் ப.சிதம்பரம்

இந்தியா சுதந்திரம் அடைந்தது 2014ம் ஆண்டு என்று வரலாற்றை மாற்றி எழுதினாலும் எழுதுவார்கள் என்கிறார் ப.சிதம்பரம்

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
  இந்தியா சுதந்திரம் அடைந்தது 2014ம் ஆண்டு என்று வரலாற்றை மாற்றி எழுதினாலும் எழுதுவார்கள் என்கிறார் ப.சிதம்பரம். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரி அனந்தன் 90வது பிறந்தநாள் விழா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் பேசியதாவது, இந்திய அரசியலில் குமரி அனந்தன் தெரிந்து கொள்ளாத விஷயம் இருக்கமுடியாது. குமரி அனந்தன் 1933 ஆம் ஆண்டில் பிறந்தார். அன்று நடந்த வரலாறு பாடப்புத்தகத்தில் மறைக்கப்பட்டு வருகிறது. அன்றைய காலகட்டத்தில் நடந்த வரலாற்றை மறைந்து வருகிறார்கள். இன்னும் வருகிற நாள்களில் 2014 ஆம் ஆண்டில் தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று எழுதினாலும் எழுவார்கள் என்று பாஜகவை விமர்சித்தார். மேலும், பாடப்புத்தகத்தின் வாயிலாக தான் வரல...
இந்தியாவில் நீதித்துறை நம்பிக்கையாக இல்லை என்கிறார் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்!

இந்தியாவில் நீதித்துறை நம்பிக்கையாக இல்லை என்கிறார் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  இந்தியாவில் நீதித்துறை நம்பிக்கையாக இல்லை என்று தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி  பார் கவுன்சில் சார்பில் வழக்கறிஞர் சங்கங்களுக்கு சட்டப்புத்தகம் வழங்கும் நிகழ்வு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பார் கவுன்சிலில் நடைபெற்றது. இதில் , சட்டத்துறை அமைச்சர்  ரகுபதி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றனர். நிதியமைச்சர்  பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், "படித்தவர்களுக்கு அடையாளம் எந்த இடத்தில் பேச வேண்டும் என்பதை அறிந்து பேசுவது தான். பொருளாதாரம் விஞ்ஞானம், திராவிட தத்துவம் இவை இரண்டையும் இணைத்து செய்வது எங்கள் அடையாளம், கடமை, பெருமை. இந்தியாவில் நீதித்துறை அவ்வளவு நம்பிக்கையாக இல்லை. எனினும், மாநில அரசின் கையில் இருக்கும் அதிகாரங்களைக் கொண்டு பொருளாதாரத்தில் முதல்வர் வழிகாட்டுதல் படி சில நல்ல மாற்றங்க...
ஹோலி பண்டிகை களைகட்டிய சென்னை சவுகார்பேட்டை!

ஹோலி பண்டிகை களைகட்டிய சென்னை சவுகார்பேட்டை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஹோலி பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் வட மாநிலத்தவர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையிலும் வட மாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கும் சவுகார்பேட்டை, வேப்பேரி, கீழ்ப்பாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்கள் ஆண்டுதோறும் களை கட்டுவது வழக்கம். அந்த வகையில் ஹோலி பண்டிகை தினமான இன்று சென்னையில் ஹோலி கொண்டாட்டங்கள் உற்சாகமாக களை கட்டி காணப்பட்டது. வட மாநிலத்தவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் தெருக்கள் மற்றும் பொது இடங்களில் ஒன்று திரண்டனர். அப்போது கலர் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவினார்கள். இந்த கொண்டாட்டத்தின்போது தங்களது நண்பர்கள், உறவினர்கள் பலரையும் வீட்டுக்கு அழைத்திருந்த வட மாநிலத்தவர்கள் அவர்களை வரவேற்கும் விதமாக முதலில் முகத்தில் லேசாக வண்ணப்பொடிகளை பூசினர். பின்னர் ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளை தூவியும், கலர் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் ஹோலி...
ஐபிஎஸ் அதிகாரியின் பையை சோதனை செய்த விமான நிலைய ஊழியர்களுக்கு ஷாக்!

ஐபிஎஸ் அதிகாரியின் பையை சோதனை செய்த விமான நிலைய ஊழியர்களுக்கு ஷாக்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஐபிஎஸ் அதிகாரியின் பையை சோதனை செய்த விமான நிலைய ஊழியர்களுக்கு ஷாக்! ஒடிசா மாநிலத்தின் மூத்த ஐபிஎஸ் அதிகாரி அருண் போத்ரா. இவர் அந்த மாநிலத்தின் போக்குவரத்துதுறை கமிஷனராக உள்ளார். இவர் சமீபத்தில் ஜெய்ப்பூர் மாநிலத்தின் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த விமான நிலைய கண்காணிப்பு ஊழியர்கள் இவரை சோதனை செய்துள்ளனர். அப்போது அருண் போத்ரா கொண்டுவந்த கைப்பையை அவர்கள் சோதனை செய்தபோது அதில் கிலோ கணக்கில் பச்சை பட்டாணி இருந்துள்ளது. சோதனை முடிந்த பிறகு அவர் அங்கு இருந்து சென்றுள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அவர் பச்சை பட்டாணி வைத்து இருந்த கைப்பையின் புகைப்படத்தை பகிர்ந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், " ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் பாதுகாப்பு ஊழியர்கள் எனது கைப்பையைத் திறக்கச் சொன்னார்கள்" என தெரிவித்துள்ளார். ...
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது! பட்ஜெட்டில் இன்ப அதிர்ச்சிக்கு வாய்ப்பு!!

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது! பட்ஜெட்டில் இன்ப அதிர்ச்சிக்கு வாய்ப்பு!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். தமிழக சட்டசபை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. கூட்டம் தொடங்கியதும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வாசிப்பார். அப்போது எம்.எல்.ஏ.க்கள் இருக்கைகள் முன்பாக வைக்கப்பட்டிருக்கும் டேப்லெட்டில் பட்ஜெட் விவரங்களை பார்க்க வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சட்டசபை யில் எல்லோரும் பார்க்கும் வகையிலும் பெரிய திரையில் ஒளிபரப்ப கம்ப்யூட்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. காகிதம் இல்லாத பட்ஜெட் என்பதால் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களுக்கு பட்ஜெட் நகல் வழங்கப்படாது. நாளை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் புது அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குற...
ரூ.25 கோடிக்கு பெகாசஸ் உளவு கருவிகள் தருவதாக ஆபர் வந்தது- முதல்வர் மம்தா பானர்ஜி பகீர் தகவல்

ரூ.25 கோடிக்கு பெகாசஸ் உளவு கருவிகள் தருவதாக ஆபர் வந்தது- முதல்வர் மம்தா பானர்ஜி பகீர் தகவல்

HOME SLIDER, NEWS, politics, அரசியல்
NSO நிறுவனம் தங்களது பெகாசஸ் உளவு மென்பொருள் விற்பனைக்காக மேற்கு வங்க அரசை தொடர்புகொண்டதாகவும் இதற்காக ரூ.25 கோடி கேட்டதாகவும் ஆனால், அதனை வாங்க மறுத்துவிட்டதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பாதுகாப்புத் துறையின் ஒரு பிரிவான NSO நிறுவனத்தின் தயாரிப்புதான் பெகாசஸ் உளவு மென்பொருள். இந்நிறுவனம் இந்த மென்பொருளை பல்வேறு நாடுகளின் அரசு அமைப்புகளுக்கு விற்பனை செய்து வருகிறது. நாட்டுக்கு எதிராக சதி திட்டங்கள் தீட்டுபவர்களை கண்டறிய இந்த மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், அரசியலமைப்புப் பதவியில் இருப்போர், தொழிலதிபர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் செல்போன்கள் இந்த மென்பொருள் மூலம் கண்காணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பெகாசஸ் விவகா...
திருக்கோவில்களில் செலுத்தப்பட்ட நகைகள் தற்போது வரை 2,000 கிலோவை தாண்டும் – அமைச்சர் சேகர் பாபு

திருக்கோவில்களில் செலுத்தப்பட்ட நகைகள் தற்போது வரை 2,000 கிலோவை தாண்டும் – அமைச்சர் சேகர் பாபு

HOME SLIDER, NEWS, செய்திகள்
  நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் சட்டமன்ற அறிவுப்புகள் தொடர்பான சீராய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘இந்து சமய அறநிலையத் துறை தொடர்பாக திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்ட அறிவிப்புகள், சட்டமன்றக் கூட்டத்தொடரில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் குறித்து மாநில அளவில் ஆணையாளர்கள் மற்றும் உதவி ஆணையாளர்கள் உடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையில் நிறைவேற்றப்பட்ட நிறைவேற்றப்பட்டு கொண்டிருக்கிற மற்றும் துவக்கப்படவிருக்கின்ற திட்டங்கள் குறித்து ஆலோசிக்க பட்டதாகவும் கூறினார். கோவில்களில் உள்ள 9,857 அர்ச்சகர்களுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட்டுள...